05) தீங்கு செய்தோருக்கும் மனிதநேயம்

நூல்கள்: மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

நிறைய இன்னல்களைக் கொடுத்த யூதர்களிடத்தில் நபி (ஸ்ல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்திற்கு அளவே இல்லை. தீமை செய்தோருக்கும் நன்மை செய் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியறை முழுமையாகக் கடைப் பிடித்தார்கள். 

நன்மையும், தீமையும் சமமாகாது நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.

(அல்குர்ஆன்: 4:34)

மேலும், ஒரு யூதப் பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உணவில் விஷம் கொடுத்த போதும் கூட அவளை ஒன்றும் செய்யாமல் மன்னித்து விட்ட சம்பவங்கள் மனிதநேயத்தை பறைசாற்றுகின்றது.

ஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டு விட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து “இவளை நாங்கள் கொன்று விடட்டுமா?”என்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள் அறிவிப்பவர் அனஸ் பின் மாக(ரலி) நூல் (புகாரி: 2647)

அவர்கள் மாத்திரம் ஒரு கட்டளை போட்டிருந்தால் அப்பெண்ணை சஹாபாக்கள் கொன்றிருப்பார்கள். அவளைக் கொலை செய்தால் அதை யாரும் குற்றம் என்று கூறவும் மாட்டார்கள். என்றாலும் மனிதநேயம் அவர்களிடத்தில் மிகைத்திருந்ததால் நன்னைக் கொல்ல நினைத்தவளைக் கொலை செய்ய நபி (ஸல்) அவர்களின் உள்ளம் இடம் கொடுக்கவில்லை.