09) ஒளிச் சேர்க்கை ஓர் அற்புதம்
பொதுவாக எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பூவுலகில் ஒன்றின் கழிவை மற்றொன்றின் மூலதனமாக ஆக்கி வைத்திருக்கின்றான். தாவரம் விடுகின்ற ஆக்ஸிஜனை நாம் எடுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றோம்.
அந்தக் கார்பன் டை ஆக்ஸைடை தாவரம் எடுத்துக் கொள்கின்ற போது புவியின் வெப்பம் குறைகின்றது. மலைப் பாங்கான பகுதியில் வெப்பம் குறைந்து காணப்படுவதற்கு இது தான் காரணம்.
சூரியனைப் பார்த்து இதழ் விரித்து சிரித்து நிற்கும் பசுமையான இந்த இலைகள் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொள்கின்றன. பச்சையம், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு இவற்றைக் கொண்டு, ஸ்டார்ச்சை, அதாவது தனக்குரிய உணவைத் தாவரம் தயாரித்துக் கொள்கின்றது. ஒளிச் சேர்க்கைக்கு பச்சையம் முக்கியக் காரணியாகும். இது விலங்குகளிடமும் மனிதனிடமும் இல்லாததால் அவர்கள் தங்கள் உணவைச் சொந்தமாக உருவாக்க முடிவதில்லை.
தாவரங்கள் யாரிடமும் பிச்சை கேட்காமல் தங்கள் உணவைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் நிகழ்ச்சியான ஒளிச் சேர்க்கையின் போது தான் ஆக்ஸிஜன் வெளியிடப் படுகின்றது.
மனிதன் தன் உணவுக்காகப் பிற இனத்தை அழிக்கின்றான். ஆனால் தாவரமோ தன் உணவாக்கத்தின் போது பிற உயிரினத்திற்கு உயிர் அளித்து வாழ்கின்றது; வளர்கின்றது.
இங்கு தான் தாவரம் அல்லாஹ்வின் அற்புதப் படைப்பாகி விடுகின்றது. இது பூமியில் தாவரத்திற்கு மட்டும் உள்ள தனிச் சிறப்பாகும். இத்தகைய சிறப்பம்சம் கொண்ட தாவர வர்க்கம் பூமி எங்கும் நிறைந்து நிற்க வேண்டுமாயின் அது இனப் பெருக்கம் அடைய வேண்டும்.
தாவரத்தின் இனப் பெருக்கத்திலும் உயிர் வளி எனப்படும் ஆக்ஸிஜன் கிடைக்கின்றது. உணவு உற்பத்தி பெருகுகின்றது.
இப்படி இன்றியமையாத தாவரம் இனப் பெருக்கம் அடைவதற்கு இறை விதி என்ன வழிமுறைகளை ஏற்பாடு செய்திருக்கின்றது?
மனிதன் மற்றும் விலங்கினத்தில் ஆண், பெண் உறவு மூலம் இனப் பெருக்கம் ஏற்படுகின்றது. இது போல் தாவரத்திலும் ஆண், பெண் உறவு முறை உள்ளது.
வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப் படுத்தினோம்.
உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாக இந்த வசனத்திலும் இன்னும் இது போன்ற பல வசனங்களிலும் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
(பார்க்க(அல்குர்ஆன்: 13:3, 36:36, 43:12, 51:49) ➚
தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.
தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக் குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
உணவுக்காக யாரிடமும் கையேந்தாத தாவரம் உறவுக்கு மட்டும் அதாவது மகரந்தச் சேர்க்கைக்கு மட்டும் வண்டுகள், பட்டாம் பூச்சிகள், விட்டில்கள், தேனீக்கள் ஆகியவற்றை எதிர் பார்த்து ஏங்கி நிற்கின்றது. அதுவும் பண்ட மாற்று முறை எனப்படும் கொடுத்து எடுத்தல் முறையில் தான்.
அந்தத் தேன் மதுரச் சுவையை அடுத்த மலரில் சுவைப்போம்,