04) பிரதிபலன் கிடைக்கும் இடம்
நூல்கள்:
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை
04) பிரதிபலன் கிடைக்கும் இடம்
உலகில் நாம் செய்கின்ற நன்மைகளும் முழுமையான பரிசும் தீமைகளுக்கு முழுமையான தண்டைனையும் மறுமையில்தான் கிடைக்கவிருக்கிறது. மண்ணறை மறுமை வாழ்வின் முதல் நிலை என்பதால் நல்லவர்களுக்கான பரிசும், தீயவர்களுக்கான தண்டனையும் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.
இறந்தவர்கள் தங்கள் செய்த செயல்களுக்கான கூலியை மண்ணறை வாழ்வில் பெற்றுக் கொண்டு இருபதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
«لاَ تَسُبُّوا الأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا»
பி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தோரை திட்டாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின்பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)