04) ஜின்களால் அறியமுடியுமா?
இந்த கேள்விக்கு நமது பகுத்தறிலுால் பதில் சொல்ல முடியாது. ஏனெனில் ஜின் வர்க்கம் நமது கண்களுக்கு புலப் படாத ஒன்று. அதனால் நமது சிந்தனையை பயன்படுத்தி விேைகாண முடியாது. இதற்கு குர்ஆனின் உதவியைக் கொண்டே விடை காணமுடியும்,
நிச்சயமாக ஜின்களில் சில கூட்டம் (குர்ஆனை) செவி மடுத்து, நிச்சயமாக நாங்கள் மிகவும் ஆச்சரியமான குர்ஆனை கேட்டோம் என்று (தன் சகாக்களுக்கு) கூறின என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே) நீர் கூறுவீராக! அது நேர்வழியின் பால் வழி காட்டுகிறது. ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம். எங்கள் இறைவனுக்கு ஒரு னையும் நாங்கள் இணையாக்க மாட்டோம் (எனவும் கூறின) (அல்குர்ஆன்: 72:12) ➚
இந்த வசனத்தில் குர்ஆனை செவிமடுத்த ஜின்கள் கூறிய வாசகம் சிந்திக்கத்தக் 4 வை. நிச்சயமாக நாங்கள் மிகவும் ஆச்சரியமான குர்ஆனை கேட்டோம் எனக் கூறு கிறது. ஒரு விஷயத்தை ஆச்சரியமானது; வியப்புக்குரியது எனக் கூறினால் அந்த விசயம் இதற்கு முன்னால் நமக்கு தெரியாததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் அதை ஆச்சரியமான விசயம் எனக் கூறுவோம்.
தெருவில் ஒரு காரைப் பார்த்தால், நான் அதை அதிசயமான ஆச்சரியமானதைப் பார்த்தேள் என எவரும் கூறமாட்டார். அதே சமயம் அந்த கார் சாலையில் ஒடிக் கொண்டிருக்கும் போதே அப்படியே மேலே பறந்தால் நான் ஆச்சரியமான காரைப் பார்த்தேன் என்போம். ஏன்? நாம் இதுவரை இப்படிப்பட்ட காரை பார்த்ததில்லை. எனவேதான் இதை ஆச்சரியமானது என்கிறோம்.
இதைப் போன்று தான் ஜின்கள் ஆச்சரியமான குர் ஆனை கேட்டோம் என்கிறது.
அப்படியானால் இந்த் ஜின்களுக்கு இதை கேட்கும்வரை குர்ஆன் இறங்கும் என்ற மறைவான விசயம் தெரியாமல் இருந்திருக்கிறது. மறைவான இந்த விசயம் தெரிந்திருந்தால் ஆச்சரியமான என்ற வாசகத்தை அவைகள் பயன்படுத்தியிருக்காது. இந்த வாகனத்தின் மூலமே ஜின்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்ற முடிவுக்கு வரலாம்.
அவர் (சுலைமான் அலை) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்துவிட்டார் என்பதை அவர் (சாய்ந். திருந்த) தடியை அரித்துவிட்டகரையானைத்தவிர வேறெதும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழுந்த பொழுது மறைவான விசயத்தை அறிந்திருந்தால் இழிவு தரும் வேதனையில் தாங்கள் இருந்திருக்க வேண்டியிராதே என்பது ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
(அல்குர்ஆன்: 34:14) ➚
இந்த வசனம் மிகத் தெளிவாகவே ஜின்களுக்கு மன்ற வான விசயம் தெரியாது என அறிவிக்கிறது சுலைமான் (அலை) அவர்கள் கைத்தடியில் சாய்ந்தவர்களாக ஜின்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சுலைமான் (அலை) கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக ஜின்கள் கடுமையாக வேலை செய்து கொண் டிருக்கின்றன. இந்நிலையில் அவர்களுக்கு மரணம் வந்து விடுகிறது. இறந்த பிறகும் கைத்தடியில் சாய்த்தவ ஈகளாக ஜின்களை பார்ப்பது போல் அமர்ந்திருக்கிறார்கள். சுலைமான் (அலை) நம்மை கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று எண்ணிய ஜின்கள் வேலையை விரைந்து செய்து கொண்டிருக்கின்றன.
நாட்கள் செல்லச் செல்ல சுலைமான் (அலை) சாய்ந்திருந்த கைத்தடியை கரையான்கள் அரிக்கத் தொடங்கின. சுலைமான் (அலை) அவர்கள் கீழே விழுகிறார்கள். அப்போதுதான் ஜின்களுக்கு சுலைமான் (அலை) இறந்துவிட்டது தெரியவருகிறது. இந்த மறைவான விசயம் தெரிந்திருந்தால் சுலைமான் (அலை) இறந்தபிறகு இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியிராதே என கவலையும் அடைகிறது. இந்நிகழ்ச்சி ஐயத்திற்கிடமின்றி ஜின்களுக்கு மறைவான விசயம் தெரியாது என அறிவிக்கிறது.
ஆனால் இன்று ஸாஹிபே ஜின் என்று கூறிக்கொண்டு என்னிடத்தில் ஜின உள்ளது. உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன். உங்கள் வருங்காலத்தைச் சொல்கிறேன் எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ஜின்னை எவரும் கட்டுப்படுத்திவைக்கமுடியாது. சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டுப்படுத்திக் கொடுத்ததாகத்தான் (அல்குர்ஆன்: 34:12) ➚ வசனம் தெரிவிச்கிறது. சுலைமான் (அலை) அவர்களால் கூட முடியவில்லை” அப்படியே இவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தாலும் கூட மறைவான எந்த விசயத்தையும் இந்த ஜின்களால் அவர் கஞ்க்கு அறிவிக்க முடியாது. இதைத்தான் 33 : 14-வது வசனம் நமக்குத் தெரிவிக்கிறது. எனவே இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து நாம் உஷா ராக இருக்க வேண்டும்.