04) சிறு பாவங்கள் மன்னிக்கப்படுதல்

மற்றவை: குர்ஆன் வசனத்திற்கு நபியின் விளக்கம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 முறை சுப்ஹானல்லாஹ் என்றும், 33 முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவது முறையாக

“லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்கலஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!

– அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) | (முஸ்லிம்: 1048)