04) உணவுப் பாத்திரங்கள்

நூல்கள்: உணவு ஓர் இஸ்லாமிய பார்வை

தங்கம் வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பிடுதல்

தங்கம்  மற்றும் வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பதையும் அதில் சாப்பிடுவதையும் விட்டு நபி ( ஸல் ) அவர்கள் எங்களை தடுத்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் அல்யமான் ( ரழி )
நூல் : (புகாரி: 5837, 5633(முஸ்லிம்: 3846, 3839) (இப்னு மாஜா: 3405, 3580) (அஹ்மத்: 22182, 22225, 22340)

யார் தங்கம் வெள்ளிப் பாத்திரத்தில் அருந்துகிறாரோ அவர் தன் வயிற்றில் நரக நெருப்பையே ஊற்றிக் கொள்கிறார்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா ( ரழி )
நூல் : (புகாரி: 5634) , (முஸ்லிம்: 3847) (இப்னு மாஜா: 3404) (அஹ்மத்: 25370, 25381, 25395)

ஹராமான உணவுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரம்

மதுபானம் , பன்றி போன்றவை தடுக்கப்பட்டவுடன் அதற்காக பயன்படுத்தப்படும் பாத்திரத்தில் சாப்பிடுவதையும் நபி ( ஸல் ) அவர்கள் தடை செய்திருந்தார்கள் .

நபி ( ஸல் ) அவர்கள் அப்துல் கைஸ் தூதுக் குழுவினரிடம் ( மதுபானத்திற்கு பயன்படுத்தப்படும் ) சுரைக்காய் குடுவை, மண்சாடி , பேரீச்ச மரத்தின் அடிபாகத்தை குடைந்து
தயாரிக்கப்பட்ட பாத்திரம் , தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன். வேண்டுமானால் தோல் பைகளில் ( அனுமதிக்கப்பட்ட பானங்களை )
அருந்திக் கொள்க. அதன் வாய்ப் பகுதியில் சுருட்டிக் கொள்க என்று கூறினார்கள் .

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி )
நூல் : (முஸ்லிம்: 3692, 3696, 3697, 3698, 3717) (புகாரி: 53, 87, 523, 1398, 3095, 3492, 3510, 4368, 4369, 5587, 5594, 5595, 6176, 7266, 7556)

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் அபூ ஸஃலபா அல் ஹீஸனிய்யி (ரழி ) அவர்கள் கேட்டார்கள் நாங்கள் வேதக்காரர்களை கடந்து செல்கிறோம் . அவர்கள் தங்களுடைய
பாத்திரத்தில் பன்றி இறைச்சியை சமைக்கிறார்கள் தங்களது பாத்திரத்தில் மதுவையும் குடிக்கிறார்கள் . ( நாங்கள் என்ன செய்வது ? எனக் கேட்டார்கள் ) அது தவிர வேறு பாத்திரம்
உங்களுக்குக் கிடைத்தால் அதில் நீங்கள் சாப்பிடுங்கள் குடியுங்கள் வேறு பாத்திரம் இல்லாவிட்டால்.

அதைத் தண்ணீரால் கழுவி விட்டு அதில் சாப்பிடுங்கள் குடியுங்கள் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர் : அபூ ஸஃலபா ( ரழி )
நூல் : (அபூதாவூத்: 3342) (இப்னு மாஜா: 3198) (திர்மிதீ: 1719) (முஸ்லிம்: 3567) (புகாரி: 5496, 5488, 5478)

தடுக்கப்பட்ட உணவிற்காக பயன்படுத்தப்பட்ட பாத்திரத்தில் சாப்பிடக் கூடாது எனும் இந்தத் தடை ஆரம்பகால சட்டமாகும் பிறகு அது மாற்றப்பட்டு விட்டது.

தோல் பாத்திரங்களில் ஊற்றி வைக்கப்பட்ட பானங்களைத் தவிர ( பாத்திரங்களில் உள்ள வேறெந்த பானத்தையும் ) அருந்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன்.

இனி எல்லாப் பாத்திரங்களிலும் அருந்திக் கொள்ளுங்கள் . எனினும் போதை தரக் கூடியதை அருந்தாதீர்கள் என அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர் : புரைதா ( ரலி )
நூல் : (முஸ்லிம்: 3723, 1623, 3651) (நஸாயீ: 2005, 4353, 5558) (அஹ்மத்: 21880, 21925, 21937, 21960)

நாய் வாய் வைத்த பாத்திரம்

பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதை நன் கு சுத்தம் செய்த பின்பே பயன்படுத்த வேண்டும் , ஏனெனில் அதனுடைய எச்சிலில் உள்ள கிருமிகள் வேறெந்த பிராணிகளை
விடவும் மனிதனுக்கு அதிகக் கேடு செய்கின்றன. அதன் வழியாகத் தான் “ரேபிஸ் ” எனும் நோய் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதை தூய்மை செய்யும் முறையானது.

ஏழு முறை அதை அவர் கழுவுவதாகும் முதல் முறை மண்ணால் அதைக் கழுவ வேண்டும் .

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி )
நூல் : (முஸ்லிம்: 471, 418, 419, 420, 421) (புகாரி: 172) (நஸாயீ: 63, 64, 36, 333), 337) (இப்னு மாஜா: 357, 360) (அஹ்மத்: 70, 43, 7135, 7286, 7348, 9146, 9948)

பூனை, கோழி , குருவி , காகம் போன்ற நம்மை சுற்றி வாழும் பிராணிகள் பாத்திரத்தில் வாய் வைத்து விட்டால் பாத்திரமோ அதிலுள்ள உணவுப் பொருட்களோ அசுத்தமாகி விடுவதில்லை.இந்த வழிமுறையைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தவும் தேவையில்லை.

அபூ கதாதா ( ரழி ) அவர்கள் உளு செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. அவர் பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு
பாத்திரத்தை சாய்த்தார். என் சகோதரர் மகளே ! இதில் ஆச்சர்யப்படுகிறாயா ? எனறு கேட்டார் . நான் ஆம் என்றேன் இவை அசுத்தமில்லை . இவை உங்களை சுற்றி வரக் கூடியவை
என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்.

அறிவிப்பவர் : கப்ஷா பின்த் கஅப் ( ரழி )
நூல் : (திர்மிதீ: 85) , (நஸாயீ: 67) (அபூதாவூத்: 68), (இப்னு மாஜா: 361) (அஹ்மத்: 61490, 21535, 21586)