04) அடிமைகள் மீது தாக்குதல்
கேள்வி : இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைப்படுத்தப்பட்ட அடிமைகள் பெண்கள் யார்?
பதில் : ஹமாமா, ஸின்னீரா, உம்மு உபைஷ், ஜாரிஆ, நஹ்திய்யா (ஆதாரம் :அல்இஸாபா11052, 11216,12159)
கேள்வி : இவர்கள் எதனால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்?
பதில் : ஹமாமா, ஸின்னீரா, உம்மு உபைஷ். நஹ்திய்யா ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைக்கு உள்ளானார்கள். (ஆதாரம் : அல்இஸாபா 11052)
கேள்வி : இவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தவர்கள் யார்?
பதில் : அபூபக்ர் (ரலி) (ஆதாரம் : தபகாதுல் குப்ரா- இப்னு ஸஅத், பாகம் :8 பக்கம் :255 )
கேள்வி : இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைப்படுத்தப்பட்ட ஆண் அடிமைகள் யார்?
பதில் : ஆமிர் பின் புஹைரா(ரலி),பிலால் (ரலி), ஜைத் பின் ஹாரிஸா (ரலி),
கேள்வி : ஆமிர் பின் புஹைரா(ரலி),பிலால் (ரலி) ஆகியோரை விடுதலை செய்தவர் யார்?

கேள்வி : நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது ஆமிர் பின் புஹைரா (ரலி) அவர்கள் எவ்வாறு உதவி செய்தார்கள்?
பதில் : நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட போது ஸவ்ர் குகையில் மூன்று நாட்கள் தங்கினார்கள் அப்போது அவர்கள் இருவருக்கும் ஆமிர் பின் புஹைரா (ரலி) அவர்கள்தான் உணவாக ஆட்டின் பாலைக் கறந்து வழங்கிவந்தார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3906)
கேள்வி : இஸ்லாத்தை ஏற்றததற்காக மக்காவில் அடைத்து கொடுமைபடுத்தப்பட்ட மூன்று நபித்தோழர்கள் யார்?
பதில் : வலீத் பின் வலீத் (ரலி), ஸலமா பின் ஹிஷாம் (ரலி), அய்யாஷ் பின் அபீ ரபீஆ (ரலி) (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : வலீத் பின் வலீத் (ரலி) அவர்கள் யார்?
பதில் : பிரசித்திப்பெற்ற நபித்தோழர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சகோதரர். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : வலீத் பின் வலீத் (ரலி) அவர்கள் யார்?
பதில் : பிரசித்திப்பெற்ற நபித்தோழர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சகோதரர். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : ஸலமா பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் யார்?
பதில் : இணைவைப்பாளர்களின் தலைவன் அபூஜஹ்லின் சகோதரர் ஆவார்கள். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : அய்யாஷ் பின் அபீ ரபீஆ (ரலி) அவர்கள் யார்?
பதில் : இணைவைப்பாளர்களின் தலைவன் அபூஜஹ்லின் தாய்வழிச் சகோதரர் ஆவார்கள். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : அய்யாஷ் பின் அபீ ரபீஆ (ரலி) அவர்கள் எவ்வாறு மக்காவில் அடைக்கப்பட்டார்கள்?
பதில் : ஹிஜ்ரத் செய்து சென்றவர்களை மக்காவிற்கு திரும்பிவருமாறு ஆசை வார்த்தை கூறி அவர்கள் மக்கா வந்தபோது அவர்களை அடைத்துவிட்டான் அபூஜஹ்ல். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 4560 ஹதீஸின் விரிவுரை)
கேள்வி : அடைத்து வைத்து கொடுமைபடுத்தப்பட்ட மூன்று நபித்தோழர்கள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
பதில் : தொழுகையில் குனூத்தில் ” இறைவா! வலீத் பின் வலீத், ஸலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! என்று இவர்களுக்காக பிரர்த்தனை செய்தார்கள். (ஆதாரம் :(புகாரீ: 4560)

கேள்வி : உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றபோது மக்கள் என்ன செய்தார்கள்?
பதில் : குறைஷி குலத்தவர்கள் உமர் அவர்களைத் தாக்குவதற்காக அவர்கள் வீட்டிற்கு படையெடுத்தனர். (ஆதாரம் :(புகாரீ: 3864)
கேள்வி : அப்போது உமர் (ரலி) அவர்களை காப்பாற்றியது யார்?
பதில் : ஆஸ் பின் வாயில் என்பவர் (ஆதாரம் :(புகாரீ: 3864)
கேள்வி : எவ்வாறு பாதுகாத்தார்?
பதில் : அவர் தலைவராக இருந்ததால் உமருக்கு நான் அடைக்கலம் கொடுத்துள்ளேன் எனவே நீங்கள் அவரை ஒன்று செய்யக்கூடாது என்றார். எனவே அவர் பேச்சை மீறமுடியாமல் தாக்கவந்தவர்கள் திரும்பிச் சென்றனர். (ஆதாரம் :(புகாரீ: 3865)
கேள்வி : இணைவைப்பவர்களின் வேதனை செய்யும் இரண்டு முறை கூறு!
பதில் : ஒன்று கொலை செய்துவிடுவார்கள். அல்லது கட்டிவைத்து வேதனை செய்வார்கள் (ஆதாரம் :(புகாரீ: 4650)
கேள்வி : இஸ்லாத்தை ஏற்ற ஸஅத் பின் ஸயீத் (ரலி) எவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டார்கள்?
பதில் : கட்டிவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தினார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3867)
கேள்வி : இவர்களை இவ்வாறு செய்தவர் யார்?
பதில் : உமர் (ரலி) அவர்கள் (அப்போது இஸ்லாத்தை அவர்கள் ஏற்றிக்கிருக்கவில்லை) (ஆதாரம் :(புகாரீ: 3867)
கேள்வி : ஸஅத் பின் ஸயீத் (ரலி) அவர்களுடன் கட்டப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டவர் யார்?
பதில் : அவர்களின் மனைவி பாத்திமா (ரலி) (ஆதாரம் :(புகாரீ: 3867)
கேள்வி : இவ்விருக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் உள்ள உறவு என்ன?
பதில் : உமர் (ரலி) அவர்களின் சகோதரி பாத்திமா (ரலி), ஸஅத் பின் ஸயீத் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மச்சான். (ஆதாரம் : பத்ஹுல் பாரீ 6942 ஹதீஸின் விரிவுரை)