03) மிகச் சிறந்த மனிதநேயம்
நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) . அவர்களது வாழ்நாளில் நடந்த பின்வரும் சம்பவம் நம் மனதை நெகிழச் செய்கிறது.
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (எஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் ஒரு கூட்டத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
அவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உடனே வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட பிலால்(ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பு செய்து இகாமத்தும் கூறினார்கள்.
அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவறுத்தினார்கள்) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் நம்மிடமிருந்த பொற்காசுகளிருந்தும் வெள்ளிக் காசுகளிருந்தும் ஆடைகளிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிருந்தும் ஒரு ஸாஉ பேரீத்தம் பழத்திருந்தும் தர்மம் செய்தார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டு இருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் கண்டேன்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரலி) நூல்: (முஸ்லிம்: 1691)
இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களிடத்திலும் அவர்களுடைய தோழர்களிடத்திலும் இருந்த மனித தேயந்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. வறுமையால் பீடிக்கப்பட்ட அந்த மக்களைப் பார்த்த உடன் பெருமானாரின் முகம் மாறி அவர்கள் தவித்ததும் பொருட்கள் குவிந்த பின்பே அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டதும் அவர்களிடத்தில் அளவில்லா மனிதநேயம் இருப்பதைக் காட்டுகிறது.