03) மறுமையை நினைவூட்டும் மண்ணறை
நூல்கள்:
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை
03) மறுமையை நினைவூட்டும் மண்ணறை
மண்ணறைகள் இறையச்சத்தையும், மறுமை வாழ்வையும் நினைவூட்டக்கூடியவை என்பதால் மண்ணறைகளுக்குச் சென்று பார்த்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!
அறிவிப்பவர்: அபூஹ‚ரைரா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதி-974
«قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا فَذَكَرَ فِتْنَةَ القَبْرِ الَّتِي يَفْتَتِنُ فِيهَا المَرْءُ، فَلَمَّا ذَكَرَ ذَلِكَ ضَجَّ المُسْلِمُونَ ضَجَّةً»
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி)