03) பெற்றோர் மற்றும் நம்பிக்கை கொண்டோருக்காக
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ
ரப்பன-ghக்Fபிர் லீ வலிவாலிdதய்ய வலில்முஃமினீன யவ்ம யqகூமுல் ஹிஸாப்.
பொருள்: எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 14:41)➚
(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் குடும்பத்தினரை விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் விட்ட பின்னர் கேட்ட பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று. இவ்வசனத்தில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியதை இறைவன் கூறுகிறான். இதை முன் மாதிரியாகக் கொண்டு இணை கற்பித்தவர்களுக்கும், இறைவனை அடியோடு நிராகரிப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கோரலாம் என்று கருதக் கூடாது. ஏனெனில் (60:4➚) வசனத்தில் ‘‘இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடிய விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்களில் தான் அவரிடம் முன் மாதிரி இருக்கிறது’’ எனக் கூறப்படுகிறது.