03) ஜோஸியர்கள் அறியமுடியுமா?
இதற்கும் கூட குர்ஆன், ஹதீஸைப் பார்க்காமலேயே நம் அறிவை பயன்படுத்தியே *முடியாது’ என்று கூறிவிடலாம். ஆனாலும் அறிவை பயன்படுத்தாமல், சிந்திக்காமல், படித்தவர்கள் உட்பட சாதி மத பேதமின்றி ஜோஸியர்களை சந்திக்கின்றனர். அங்கு வியாபாரம் தொடங்கல், திருமணம் முடித்தல்; பிரயாணம் செய்தல் இதைப்போன்று தனக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனை” களையும் கூறி தீர்வு கேட்கிறார்கள். இந்த ஜோஸியர்களிடத்தில் மறைவான விசயத்தை அறியும் ஆற்றல் உண்டு என நம்புவதால்தான் அவர்களிடம் செல்கிறார்கள். ஒருசில முஸ்லிம்கள். ஆலிம்களிடம் (ஹஜ்ரத்மார்களிடம்) சென்று பால் கிதாப் எ ன் ற பெயரில் ஜோதிடம் பார்க்கிறார்கள்.
இப்படி பார்க்கப்படும் ஜோஸியர்கள், ஹஜ்ரத்மார் அனைவரும் நம்மை ஏமாற்றவே செய்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் தெளிவாகும். இன்று ஜோஸியர்களில் நிலையை எடுத்துப் பார்த்தால் சாலை ஓரங்களில் அமர்ந்து நம்மை குறிபார்க்க வரும்படி அழைப்பார்கள். அழைக்கும்படியாக எழுதப்பட்ட அட்டைகளை வைத்திருப்பார்கள்.
ஒரு சிலர்கள் தெருக்களில், “ஜோசியம் பார்க்கலையா ஜோஸியம் கிளி ஜோஸியம்!!” எனக் கூறிக்கொண்டு செல்வார்கள். உண் மையில் இவர்களுக்கு மறைவான விசயம், நாளை நடக்கும் விசயங்கள், அடுத்தவர்களுக்கு நடக்கும் விசயங்கள் தெரிந்திருக்குமானால், தெருவில் இருந்து கொண்டு ஏன் அழைக்க வேணடும்? ஏன் மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்? தனக்குள்ள ஆற்றலின் மூலம் எந்நேரத்தில் மக்கள் பார்ப் பார்கள்; யார் பார்ப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் அமர்ந்துவிட்டு அல்லது குறிப்பிட்ட நபரிடம் அதாவது யார் குறிப்பாசிப்பார்கள் என்பவரை மட்டும் பார்த்துவிட்டுச் செல்லலாம் அல்லவா? இப்படி அவர்களால் செய்யமுடிகிறதா? முடியவில்லையே! மற்ற வியாபாரிகளைப்போல் இவர்களும் காத்துக்கிடக்கிறார்கள் தன் ஜாதகமே என்னவென்று தெரியாதவர்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளை தீர்வு செய்து விடுவார்களா?
இதிலிருந்து விளங்கவில்லையா? இவர்கள் ஏமாற்றுப் பேர் வழிகள் என்று!இவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பதற்கு ஒரு சில கேள்விகள் கேட்டு விட்டால் தெரிந்துவிடும்” என்பெயர் என்ன என்று முதல் கேள்வியை கொடுங்கள். முழிப்பார்கள், ஒருசில தந்திர ஜோஸியர்கள் பெயர் சொன்னால் தான் மற்றவிசயங்கள் சொல்ல முடியும் என்பார்கள். அப்படி சொன்னால், பையிலுள்ள பைசாவை எடுத்து கையில் மறைத்து வைத்துக்கொண்டு; என் கையில் என்ன இருக்கிறது என்று கேளுங்கள். காசு என்று சொல்லிவிட்டால் (நாம் எடுக்கும்போது நம்மையறியாமல் பார்த்திருப்பான்) எத்தனை பைசா? எந்த வருடத்தில் அச்சிடப்பட்டது? மேல்புறம் தலை உள்ளதா? பூ உள்ளதா? என்று கேள்வி களை அடுக்குங்கள். திணறிவிடுவார்கள்! அவன் உண்மை முகம் தெரிந்துவிடும்.
இந்த ஜோஸியர்கள் சொல்வது உண்மையல்ல, வெறும் உளறல்கள் தான் என்பதை அறிய உண்மையில் நடந்த நிகழ்ச்சியை பார்ப்போம் முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன் அவர் ஆட்சி செய்வாரா? வெற்றி பெறுவாரா? என்பதைப் பற்றி ஜோஸியர்கள் சொன்ன கருத்துக்கள். இவர்கள் நாம் தெருவில் பார்க்கும் ஜோஸியர்கள் அல்ல; ஜோதிடத்தில் புலிகள் என்று பாராட்டபட் வர்கள். இச்செய்திகள் சாணக்கியன் ஜ”ன் (1-5-1991) இதழில் இல்லஸ்ட்ரேட் வீக்லியை மேற்கோள்காட்டி எழுதப்பட்டவை,
1999-ல் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கலாம் அல்லது கூட்டணி மந்திரி சபைக்கு தலைமை ஏற்பார் ராஜிவ். (துல்லியமாக கணிப்பவர் என்று பாராட்டு பெற்ற கே.என் ராவ்)
1991 ல் ராஜீவ் பிரதமராவது சந்தேகமே ராஜிவ் தலைமையில் இருக்கும் காங்கிரஸில் ஜனதா தளம் இணைய வாய்ப்புள்ளது. (முன்னால் பிரதமர் இந்திராவின் கொலை. பற்று சர்யாக கணித்தவர் என்று கூறப்படும் ஜே.எஸ் அட்லாஸ்ஸ்ல்ரா ஜவின் கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் 1991 ஆம் ஆண்டு சகலவல்லமையுடன் ஆட்சிக்கட்டிலில் அமருவார். அப்புறம் ஐந்து ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாது. ராஜீவின் சாதுர்யமான அணுகுமுறையினால் 1994-ஆம் ஆண்டுக்குள் பஞ்சாப் காஷ்மீர் பிரச்சனைகளில் பிரமிக்கத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும்.
(வட இந்தியப் பத்திரிக்கையில் ஜோதிட பகுதிக்கு எழுதி மக்கள் ஆதரவு பெற்ற ஜகத் ஜித் உப்பல்)
1992 வரை ராஜீவ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை. 1993 ஆம் ஆண்டு ராஜீவை பொருத்தவரை சிறப்பான ஆணடு (ஜோதிட ஜாம்பவான் என் பி. தாரஜா)
1993-ஆம் ஆண்டு வரை தனது அரசியல் அபிலாஷைகளை அவர் கட்டுப்படுத்தல் நலம்! 1996-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மூன்று ஆண்டுகள் வெற்றி மேல் வெற்றியாக குவியும். 2001 லிருந்து 2015 வரை ராஜீவின் அரசியல் வாழ்க்கை மிகச் சீராக அமையும். (முன்னால் பிரதமர் சந்திர சேகரின் நம்பிக்கைக்குரிய ஜோதிடர் மகான் வித்துல்லி இனிதான்.
ராஜீவுக்கு நல்ல காலம் வரும். திருப்தியான மெஜாரிட்டியுடன் பிரதமராவார். ஆனால் ஒன்றரை யாண்டுக்குள் பதவி வறிபோய்விடும்.(சீனியர் ஜோஸ்யரான பண்டிட் ஆச்சார்யராஜ்) ராஜீவுக்கு சோதனையான கட்டங்கள் முடிந்துவிட்டன. வரும் தேர்தலில் மீண்டும் பிரதமர் நாற்காலியில் உட்கார்வார். -. ” (தமிழ் நாட்டின் பால ஜோஸ்யர்)
1991ஆம் ஆண்டு பிப்ரவரியுடன் போதுமான காலகட்டம் முடிந்து விட்டது. 1991 ஆம் ஆண்டு பிரதம பதவியில் அமர்வார். 1992 ஆம் ஆண்டு உலக அமைதிக்காக அவர் எடுக்கப் போகும் முயற்சிக்காக புகழவுைவார் (கல்கத்தாவின் ஜோஸ்யர் ஏ.கே. ராஜா) ஜோதிடன் என்பவன் வாயில் வந்ததையெல்லாம் உளறிக் கொட்டுவான் என்பதற்கு இவை நிதர்சனசமான சான்றுகள். ஒருவர் பிரதமராவார் என்கிறார் இன்னொரு வர் கி.பி. 2015 வரை ராஜிவ் சிறப்பாக இருப்பார் என்கிறார், உண்மையில் தனது தொகுதியில் வெற்றி பெற்ற செய்தியை கூட கேட்க முடியாமல் படுகொலை செய்யப்பட்டார். ஜோஸியர்கள் என்பவர் அனைவருமே ஏமாற்று பேர்வழிகளே தவிர மறைவான விசயத்தை தெரிந்தவர்கள் அல்ல.
ஜோஸ்யர்களிடம் செல்லும் விசயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஜோஸ்யர்களிடம் செல்வதை கடுமையாக கண்டிக்கிறார்கள். .
யாராவது ஒருவர் குறிகாரனிடம் சென்று ஏதாவது ஒரு விசயத்தைக் கேட்டால் அவருடைய நாற்பது (நாள்) இரவுத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என நபி (ஸல்) கூறியதாக ஸஃபிய்யா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. முதலில் நாம் நாற்பது நாள் தொழுவதே பெரிய விசயம், அதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது. என்றால் இவ்விசயத்தில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
எவரேனும் குறிகாரனிடம் சென்று அவன் சொன்னதை உண்மையென நம்பினால் அவன் முஹம்மது
இறக்கப்பட்ட (குர்ஆனை) மறுத்துவிட்டான் என நபி(ஸல்) கூறினார்கள் என அபூதாவூத், பைஹகீ, ஹாகீம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை நம்புவது குர்ஆனையே மறுப்பதென்றால், இந்த செயல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதை உணரலாம். எனவே பெரிய குற்ற செயல்களுக்கு எந்த ஒரு முஸ்லிமும் செல்லக் கூடாது.