03) குடிப்பதின் ஒழுங்குகள்
நின்று கொண்டு அருந்துவது சம்பந்தமாக அருந்தலாம் என்றும் அருந்தக் கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் கிடைக்கின்றன் . இரண்டையும் இணைத்தே ஒரு முடிவுக்கு
வர வேண்டும் .
நின்று கொண்டு அருந்துவதை நபி ( ஸல் ) அவர்கள் தடை செய்தார்கள் .
அறிவிப்பவர் : அனஸ் ( ரழி )
நூல்கள் :(முஸ்லிம்: 3771), 3772 திர்மிதி 1800 அபூதாவூது 3229(இப்னு மாஜா: 3415)அஹ்மது 11740 , 11888 , 12033 , 12406 , 12589 , 12754 , 13127 , 13433
அலீ ( ரழி ) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின் ) விசானாமான முற்றத்தில் மக்கள் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் . அசர் தொழுகையின் நேரம் வந்தது.
( உளூ செய்வதற்காக ) தண்ணீர் கொண்டு வரப்பட்டது . அதில் ( சிறிதளவு ) குடித்து விட்டு முகம் , கைகளைக் கழுவி உளு செய்தார்கள் . பிறகு எழுந்து நின்று கொண்டு மீதத்தைப்
பருகினார்கள்.
மக்களில் சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கிறார்கள் . ஆனால் நபி ( ஸல் ) அவர்களோ நான் செய்ததைப் போன்றே செய்தார்கள் என்று அலீ ( ரழி ) கூறினார்கள் .
அறிவிப்பவர் : நஸ்ஸால் பின் சப்ரா ( ரழி )
நூல்கள் :(புகாரி: 5615), 5616(நஸாயீ: 130)அபூதாவூது 3230 அஹ்மது 550 , 756 , 872 , 923 , 1070 , 1084 , 1114 , 1136 , 1160 , 1279 , 1296
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ( சில நேரம் ) நின்றவாறும் ( சில நேரம் ) அமர்ந்தவாறும் பருகுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )
நூல்கள் :(நஸாயீ: 1344), அஹ்மது 23428
இவ்விரண்டு செய்திகளையும் வைத்துப் பார்க்கும் போது அமர்ந்து குடிப்பது சிறந்ததென்றும் , நின்று குடிப்பது சிறப்பற்றது என்றும் புரிந்து கொள்ளலாம் .
பின்வரும் ஹதீஸை வைத்து நின்று குடிப்பது கூடவே கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். உங்களில் யாரும் நின்று கொண்டு பருக வேண்டாம் மறந்து பருகி விட்டால் ( அதை )
வாந்தி எடுத்து விடட்டு என்று நபி ( ஸல் ) கூறியதாக ஒரு செய்தி முஸ்லிமில் 3775 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான “அம்ரு பின் ஹம்ஸா ” என்பவர் பலவீனமானவர் . இவர் வழியாக அறிவிக்கப்படும் . இந்த செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள
முடியாது.
நின்று குடிப்பதை தடுத்தார்கள் என்ற செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு அதை பாவம் எனக் கருதினால் நபி ( ஸல் ) அவர்களும் அவர்கள் காலத்தில் சஹாபாக்களும் நின்று
கொண்டு பருகிய பல ஹதீஸ்களின் நிலை என்ன ? என்ற கேள்வி எழும்
எனவே நின்று கொண்டு பருகுவதில் தவறில்லை.ஆயினும் அமர்ந்து பருகுவது அதை விட மேலானது என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.
உங்களில் எவரும் சிறு நீர் கழிக்கும் போது தனது உறுப்பை வலது கரத்தால் தொட வேண்டாம். கழிவறைக்கு சென்றால் வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம் . ( எதையேனும் )
குடித்தால் ஒரே மூச்சில் குடிக்க வேண்டாம் என நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர் : அல் ஹாரிஸ் ( ரழி )
நூல் : அபூதாவூது 29
உங்களில் எவரும் தாம் அருந்தும் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர் : ஹாரிஸ் பின் ரபீஃ ( ரழி )
நூல்கள் :(புகாரி: 153), 154 , 5630(முஸ்லிம்: 392, 3780)அஹ்மது 21495 , 21603 , 21595 , 21522 , 21584(இப்னு மாஜா: 3418), 3419
மூக்கினால் மூச்சு விடுவது மட்டுமின்றி வாயால் ஊதிக் குடிப்பதையும் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் .
மர்வானின் சபைக்கு வந்த அபூஸயீத் அல்குத்ரி ( ரழி ) அவர்களிடம் நீரருந்தும் பாத்திரத்தில் மூச்சு விடக் கூடாது என நபி ( ஸல் ) அவர்கள் தடை செய்ததை நீங்கள்
செவியுற்றிருக்கிறீர்களா ? என மர்வான் கேட்டார் . அதற்கு அபூஸயீதுல் குத்ரி ( ரழி ) அவர்கள் ஆம் என பதிலளித்து விட்டு சொன்னார்கள் .
ஒரு மனிதர் நபி ( ஸல் ) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஒரே மூச்சில் குடிப்பதால் எனக்கு தாகம் தீருவதில்லை ( நான் என்ன செய்வது ? எனக் கேட்டார். தண்ணீர்
( பாத்திரத்தை விட்டும் ) உன் முகத்தை திருப்பிக் கொண்டு மூச்சு விடு என்றார்கள் . அதில் தூசிகளைக் காண்கிறேன் அதற்காக ஊதி விடலாமா ? எனக் கேட்டார். அதில் ( தூசியைக் )
கண்டால் ( கொஞ்சத்தை ) கொட்டி விடு ( அதில் ஊதி விடாதே ) என நபி ( ஸல் ) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூ ஸயீதுல் குத்ரி ( ரழி ) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுல் முஸன்னா ( ரழி )
நூல் : அஹ்மது 11116 திர்மிதி 1809
நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் ஆக்ஸிஜன் எனும் உயிர்ச்சத்தை நமது உடல் பயன்படுத்திக் கொண்டு கரியமிலவாயு ( கார்பன் – டை – ஆக்ஸைடு ) எனும் கழிவுப் பொருளை
வெளியேற்றுகிறது அருந்தும் பாத்திரத்தில் மூச்சுவிட்டால் அந்தக் கழிவு உடலுக்குள் சென்று ஏதேனும் ஒரு வகையில் கேடு செய்யத் துவங்கிவிடும் .
அதே நேரம் நீர்ம் நிலையில் உள்ள பொருட்களைத் தவிர்த்து ஏனைய உணவுப் பொருட்களை வாயால் ஊதி சாப்பிடுவதில் தவறில்லை.
** ஸஹ்ல் பின் ஸஃது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் காலத்தில் சலிக்கப்படாத கோதுமையை எவ்வாறு சாப்பிடுவீர்கள் ? எனக் கேட்டேன். அதற்கு நாங்கள்
அதை ( திருகையிலிட்டு ) அரைப்போம் , பிறகு ( வாயால் ) அதை ஊதுவோம் . பறக்க வேண்டிய ( தவிடு, உமி போன்ற ) வை பறந்து விடும் எஞ்சியதை நாங்கள் தண்ணீர் கலந்து
சாப்பிடுவோம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : சலமா பின் தீனார் ( ரஹ் )
(புகாரி: 5413),5410 திர்மிதி 2287 அஹ்மது 21748(இப்னு மாஜா: 3326)
நபி (ஸல்) அவர்கள் பால் குடித்தார்கள். தண்ணீர் கொண்டு வரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். அதிலே கொழுப்பு இருக்கிறது (எனவே தான் வாய்க் கொப்பளித்தேன்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி)(முஸ்லிம்: 537),(புகாரி: 211), திர்மிதி : 82,(நஸாயீ: 187)அபூதாவூது : 168,(இப்னு மாஜா: 491),(அஹ்மத்: 1850, 1903, 2893).
பாலில் கொழுப்பு இருப்பதால் அதை அருந்திய பின் நபியவர்கள் வாய்கொப்பளித்துள்ளார்கள். இது போன்ற கொழுப்புள்ள பண்டங்கள் எதை சாப்பிட்டாலும் அதற்காக வாய் கொப்பளிப்பது நல்லது என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.