03) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-3
03) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-3
நபிமொழி-11
ஜுமுஆவை வீணடித்தவர்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(ஜுமுஆ உரையின் போது) கல்லை அகற்றக் கூடியவர் (ஜுமுஆவை) வீணடித்துவிட்டார்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(இப்னு மாஜா: 1015)
நபிமொழி-12
இயற்கை மரபுகள்
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَاسْتِنْشَاقُ الْمَاءِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَنَتْفُ الْإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ ” قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ: وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ زَادَ قُتَيْبَةُ، قَالَ وَكِيعٌ: ” انْتِقَاصُ الْمَاءِ: يَعْنِي الِاسْتِنْجَاءَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பத்து செயல்கள் இயற்கையை சார்ந்ததாகும்.
- மீசையைக் கத்தரிப்பது,
- தாடியை வளர்ப்பது,
- பல் துலக்குவது,
- மூக்குக்கு நீர் செலுத்துவது,
- நகங்களை வெட்டுவது,
- விரல் கணுக்களைக் கழுவுவது,
- அக்குள் முடிகளை அகற்றுவது,
- மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது.
- 10, (மல, ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(முஸ்லிம்: 436)
நபிமொழி-13
விருந்து அழைப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ، يُمْنَعُهَا مَنْ يَأْتِيهَا، وَيُدْعَى إِلَيْهَا مَنْ يَأْبَاهَا، وَمَنْ لَمْ يُجِبِ الدَّعْوَةَ، فَقَدْ عَصَى اللهَ وَرَسُولَهُ»
உணவுகளில் கெட்டது, ஏழைகள் அழைக்கப்படாமல், செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் திருமண விருந்தாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 2819)
நபிமொழி-14
இடது கையால் சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஸ்லிம்: 4108)
நபிமொழி-15
கப்ரு வழிபாடு கூடாது
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ «لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا»
நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் தங்களது நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடங்களாக அவர்கள் ஆக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(புகாரி: 1330)