02) மண்ணறை வாழ்க்கை உண்மையானது

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

02) மண்ணறை வாழ்க்கை உண்மையானது

மண்ணறை வாழ்க்கை கிடையாது என்று சிலர் நினைக்கின்றார்கள். மண்ணறை  வாழ்க்கை உண்டு என்று இறைவனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். 

எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.  காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள்.யுகமுடிவு நேரம் வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

(அல்குர்ஆன்: 40:45),46)

ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் தினமும் காலையிலும் மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது ஏனென்றால் (40:46) இவ்வசனத்தின் யுக முடிவு நாளில் இவர்களை கடும் தண்டனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது இதுதான் கப்ரின் வேதனை என்று நபிமொழிகள் கூறுகின்றன. 

 

دَخَلَتْ عَلَيَّ عَجُوزَانِ مِنْ عُجُزِ يَهُودِ المَدِينَةِ، فَقَالَتَا لِي: إِنَّ أَهْلَ القُبُورِ يُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ، فَكَذَّبْتُهُمَا، وَلَمْ أُنْعِمْ أَنْ أُصَدِّقَهُمَا، فَخَرَجَتَا، وَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ عَجُوزَيْنِ، وَذَكَرْتُ لَهُ، فَقَالَ: «صَدَقَتَا، إِنَّهُمْ يُعَذَّبُونَ عَذَابًا تَسْمَعُهُ البَهَائِمُ كُلُّهَا» فَمَا رَأَيْتُهُ بَعْدُ فِي صَلاَةٍ إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ القَبْرِ

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) ‘மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்’ என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன’ என்றார்கள். அதற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 6366)