02) தவறு செய்து விட்டால்

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ

ரப்பி இன்னீ ளலம்து நFப்ஸீ Fபghக்Fபிர் லீ.

பொருள்: என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!(அல்குர்ஆன்: 28:16)➚

(நபி மூஸா (அலை) அவர்கள் நபியாவதற்கு முன்னர் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த ஒருவரை தவறுதலாகக் கொலை செய்துவிட்டார்கள். அந்தத் தவறுக்காக இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்.)


لآإلٰهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّـيْ كُنتُ مِنَ الظَّالِمِيْنَ

லாa இலாhஹ இல்லாa அன்த ஸுப்ஹானக், இன்னீ குன்து மினள் ளாலிமீன்.

பொருள்: உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன். (அல்குர்ஆன்: 21:87)➚

(நபி யூனுஸ் (அலை) அவர்களின் கோரிக்கைப்படி அல்லாஹ், அவர்களின் சமூகத்தை அழிக்காத காரணத்தால் கோபித்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் கப்பலில் சென்ற போது கடலில் தூக்கிப் போடப்பட்டார்கள். அப்போது மீன் அவர்களை விழுங்கியது. அல்லாஹ்வின் ஏற்பாட்டைக் கோபிப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து இப்பிரார்த்தனையைச் செய்தார்கள்.)