02) அறிமுகம்
02) அறிமுகம்
இயற்பெயர்:
ஃகுமைஸா பின்த் மில்ஹான்(முஸ்லிம்: 4851)
ரூமைஸா (புகாரி: 3679) என்றும்
உம்மு சுலைம் என்றும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர்கள்:
தந்தை பெயர்: மில்ஹான்
தாயார் பெயர்: முலைக்கா (ரலி) (புகாரி: 380), 860
உடன்பிறந்தவர்கள்
ஹராம் இப்னு மில்ஹான் (புகாரி: 4091)சலீம் இப்னு மில்ஹான் ஆகிய இரு சகோதரர்களும், உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (முஸ்லிம்: 4888)என்ற ஒரு சகோதரியும், உடன்பிறந்தார்கள.
திருமண வாழ்கை
மாலிக் இப்னு நள்ர் என்பவரை முதலில் திருமணம் செய்தார்கள். அவரின் மூலம் அவர்களுக்கு
அனஸ் பின் மாலிக் (புகாரி: 6289), ஃபரா இப்னு மாலிக் ஆகிய இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அவரின் மரணத்திற்கு பிறகு…
அபூதல்ஹா ஸைத் இப்னு ஸஹல் (ரலி) (புகாரி: 5611), 3679, அவர்களை இரண்டாவதாக மணமுடித்துக் கொள்கிறார்கள். அவரின் மூலம் அவர்களுக்கு
அபூஉமைர் (முஸ்லிம்: 4348)
அப்துல்லாஹ் (புகாரி: 2611),1502
என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.