01) முன்னுரை

நூல்கள்: மறைவான ஞானம் இறைவனுக்கே !

மனிதனும், இறைவனும் ஒன்றாகி விட முடியாது இறைவனுக்கும், மனிதனுக்கும் மத்தியில் பல வேறுபாடுகள் உண்டு,

இறைவனுக்கு என உள்ள தனித்தன்மை எதுவும் மற்றவர்களிடம் இருக்கவே செய்யாது. இவ்வாறு இருப்பதாகவோ, அல்லது அதில் பாதி அளவாவது உண்டு என்றோ ஒருவர் கருதினால் அவன் இறைமறுப்பாளன் ஆகிவிடுகிறான்.

மறைவான ஒன்றை அறியும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே உண்டு. இத்தனித் தன்மை எவருக்கும் கிடையாது. இதை எவரேனும் மற்றவர்க்கு இருப்பதாக கருதினால் அவர் இணை வைத்தவராவார்.

இத்தன்மை இறையடியார்களான அவ்லியாக்களும் உண்டு என்று நம்பி தர்காக்களுக்குப் போய்வழிகெட்டு வரும் முஸ்லிம் (?) களும் உண்டு.

இத்தன்மை இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பதையே இந்நூல் ஆசிரியர் இதில் குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

கடவுள் உண்டு என நம்பும் ஒவ்வொருவரும், தனது இறைவனுக்கு தனியான சக்தி உண்டு என நம்புகின்றனர். தன் இறைவனுக்கு இருக்கும் சக்தி உலகத்திலுள்ள எந்த நபருக்கும், எந்த பொருளுக்கும் கிடையாது எனவும் உறுதியாக நம்புகின்றனர். இப்படிப்பட்ட சக்திகள் இருந்தால் மட்டுமே அவனை கடவுள் என்று சொல்ல முடியும். இல்லை யெனில், இந்த கடவுளுக்கு இருக்கும்சக்தி மற்றவர்களுக்கு இருக்குமானால், இந்த கடவுளும் மற்ற சாதாரண மனிதரை போன்றவர் என்ற நிலைக்கு வந்து விடுவார்.

எனவேஇந்த உலகத்திலுள்ள எவரிடமும், எந்தப் பொருளிடமும் இல்லாத பெரும் ஆற்றல் கடவுளுக்கு இருப்பது மிக அவ சியமாகும்.

கடவுளுக்கு இருக்க வேண்டிய அனைத்து ஆற்றல் களையும் தன்னகத்தே கொண்ட அல்லாஹ் தஆலா, தனக் குறிய பல பண்புகளை தனது திருமறையில் சொல்லிக்காட்டு கிறான். உதாரணமாக காலிக் (படைப்பவன்) என்ற பண்பு உலகத்திலுள்ள எந்த நபருக்கும், எந்தப்பொருளுக்கும் கிடையாது. அவனால் மட்டுமே, எந்த நேரத்திலும் படைக்க முடியும். இதைப்போன்று யாரையும், எந்நேரத் திலும் மரணிக்கச் செய்யும் ஆற்றல்இறந்தவர்களை உயிர்பிக்கச் செய்யும் ஆற்றல், மறைவான விசயங்களை தெரியும் ஆற்றல் இவையனைத்தும் அல்லாஹ்விற்கு  உரித்தான ஆற்றல்கள், ஆனால்இன்றையஇஸ்லாமியர்கள்அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தான ஆற்றல்களை, சாதா” ரண மனிதர்கள், அவ்லியாக்கள் நபிமார்கள் போன்றவர் களுக்கு கொடுத்து, அல்லாஹ்வின் ஆற்றலை மாசுபடுத்து வதுடன், இவர்களை அல்லாஹ் அளவிற்கு உயர்த்திவிடு கிறார்கள்.

இப்படித்தான் இறைவனுக்குரிய மறைவான விசயங்களை அறியும் ஆற்றலை மற்றவர்களுக்கு கொடுத்து அவர் களிடம் இன் று படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் நம்புவதற்கு, இஸ்லாத்தின் அடிப்படை நூல்களான குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் இருக்கிறதா? என்பதை விரிவாக நாம் பார்ப்போம்,

M.I. முஹம்மத் சுலைமான்