01) முன்னுரை
ஜிஹாத் – இந்த சொல்லைக் கேட்டாலே ஒரு சாரார் வெறுப்பின் உச்சத்திற்குச் செல்வதையும் மற்றொரு சாரார் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, தங்களையும் தங்கள் சமுதாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் காண முடிகின்றது.
ஜிஹாதைப் பற்றி மேற்கண்ட இரு சாராரும் கொண்டுள்ள கருத்துக்கள் சரியானவை தாமா? இறுதி வேதமான திருமறைக் குர்ஆனும் இறுதித் தூதராகிய பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையும் ஜிஹாத் சம்பந்தமாக என்ன விளக்கமளிக்கின்றன? ஓர் உண்மை முஸ்-ம் ஜிஹாத் பற்றி எப்படிப் புரிந்து நடக்க வேண்டும்? என்பதை விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு தான் “ஜிஹாத் – ஓர் ஆய்வு’.
ஜிஹாத் பற்றிய இந்த ஆய்வில், முஸ்லிமல்லாதவர்களில் பலர் ஜிஹாதைப் பற்றி ஏன் வெறுக்கின்றார்கள்? அதற்கு அவர்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் என்ன? அவை சரியானவை தாமா? என்பதை அலசவிருக்கின்றோம். மேலும் முஸ்-ம்களிலேயே ஜிஹாதைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை யாவை? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எந்தக் கருத்து சரியானது? என்பதை நாம் இன்ஷா அல்லாஹ் காணவிருக்கின்றோம்.
இது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குச் செல்வதற்கு முன், முத-ல் ஜிஹாத் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ஆயுதமேந்திப் போரிடுவது தானா? அல்லது ஜிஹாத் என்பதற்கு வேறு பொருளும் உண்டா? என்பதைப் பார்ப்போம்.
திருக்குர்ஆனில் ஜிஹாத் என்ற பதம் பல்வேறு நல்ல அமல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றது. “ஜஹத’ என்ற மூலச் சொல்–ருந்து பிறந்தது தான் “ஜிஹாத்’ எனும் பதம். இதற்கு நேரடி அகராதிப் பொருள் உழைப்பது, பாடுபடுவது என்பதாகும். திருக்குர்ஆனின் பல இடங்களில் ஜிஹாத் ஃபீ ஸபீ-ல்லாஹ் என்று குறிப்பிடுவதன் நேரடி அர்த்தம் அல்லாஹ்வின் வழியில் உழைப்பது, பாடுபடுவது என்பதாகும்.
திருக்குர்ஆனில் ஜிஹாத் என்ற வார்த்தை பல இடங்களில் வெவ்வேறு அர்த்தம் தரக் கூடிய வகையில் இடம் பெற்றுள்ளதை இப்போது பார்ப்போம்.
உழைத்தல் – பாடுபடுதல்
ஜிஹாத் என்பதற்கு உழைப்பது, பாடுபடுவது என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களை எடுத்துக் கொள்வோம்.
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
மேற்கண்ட வசனத்தில் உள்ள “ஜுஹ்த’ என்ற அரபுச் சொல்லுக்கு “உழைப்பு’ என்ற பொருள் இடம் பெற்றுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்த இடத்தில் ஜிஹாதுக்கு வழக்கத்தில் உள்ள அர்த்தத்தைக் கொடுத்தால், “தாராளமாக செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது ஜிஹாதை (போரை) தவிர எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறிக் கே- செய்கின்றனர்” என்ற தெளிவற்ற – அர்த்தமற்ற வாசகமாக ஆகி விடும். எனவே இதி-ருந்து ஜிஹாத் என்பதற்கு உழைப்பது என்ற பொருள் உள்ளதை அறிய முடிகின்றது.
உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். (அல்குர்ஆன்: 29:6) ➚
மேற்கண்ட வசனத்திலும் உழைப்பவர் என்பதற்கு “ஜாஹத’ என்ற வார்த்தையும், உழைக்கிறார் என்பதற்கு “ஜாஹிது’ என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது.
நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
இந்த வசனத்திலும் “உழைப்போருக்கு’ என்பதற்கு, “ஜாஹதூ’ என்ற வார்த்தையே இடம் பெறுகின்றது.
மேற்கண்ட வசனங்கள் மூலம் “ஜிஹாத்’ என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுவது என்பது நேரடிப் பொருளல்ல! உழைப்பது, பாடுபடுவது என்ற அர்த்தமும் உள்ளதை விளங்க முடிகின்றது.
வற்புறுத்துதல் – கட்டாயப்படுத்துதல்
“ஜிஹாத்’ என்பதற்கு வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அது சம்பந்தமாக உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களை எடுத்துக் கொள்வோம்.
தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
மேற்கண்ட வசனத்தில் “உன்னை வற்புறுத்தினால்’ என்பதற்கு “ஜாஹதாக’ என்ற வார்த்தை இடம் பெறுவதைக் கவனிக்க வேண்டும். இந்த இடத்தில் ஜாஹதாக என்பதற்கு உன்னை ஆயுதமேந்தினால், உன்னைப் போரிட்டால், உன்னை தியாகம் செய்தால், உன்னைப் பாடுபட்டால் என்ற அர்த்தம் கொடுத்தால் என்ன நிலை ஏற்படும். யாருக்காவது ஏதாவது விளங்குமா? எனவே இந்த வசனத்தி-ருந்து ஜிஹாத் என்பதற்கு வற்புறுத்துதல் என்ற அர்த்தம் உள்ளதை விளங்க முடிகின்றது.
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
இந்த வசனத்திலும் “உன்னைக் கட்டாயப்படுத்தினால்’ என்பதற்கு “ஜாஹதாக’ என்ற வார்த்தை இடம் பெறுவதைக் கவனிக்க வேண்டும். இந்த இடத்திலும் ஜிஹாத் என்பதற்கு மேற்சொன்ன ஏனைய பொருள்களைப் பயன்படுத்த முடியாது என்பதை எளிதாகப் புரிய முடிகின்றது.
எனவே இவ்விரு வசனங்களின் மூலம் “ஜிஹாத்’ என்பதற்கு வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற அர்த்தமும் உள்ளதை விளங்க முடிகின்றது.