01) நபிகள் நாயகம் பிறப்பு வளர்ப்பு திருமணம்
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ?
பதில் : திங்கள் (ஆதாரம்(முஸ்லிம்: 1977)?)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில் : அப்துல்லாஹ் (ஆதாரம் )
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?
பதில் : ஆமினா (ஆதாரம் )
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்?
பதில் :
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் எப்போது இறந்தார்கள்?
பதில் : நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதை அடைந்த போது (ஆதாரம்)
கேள்வி : நபி (ஸல்) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் யார்?
பதில் : அபூதாலிப் (ஆதாரம் )
கேள்வி : நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணி யார் ?
பதில் : உம்மு ஐமன் (ரலி) (ஆதாரம்(புகாரீ: 3737)
கேள்வி : நபி (ஸல்) அவர்களுக்கு பாலுட்டியவர்கள் யார்?யார்?
பதில் : 1. ஹலீமா அஸ்ஸஃதிய்யா,????? 2. ஸுவைபா (ஆதாரம்(புகாரீ: 5101)
கேள்வி : இவ்விருவரில் இஸ்லாத்தை தழுவியவர் யார்?
பதில் : ஹலீமா அஸ்ஸஃதிய்யா (ஆதாரம் )
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?
பதில் : ஆடு மேய்த்தல் (ஆதராம்(புகாரீ: 3406)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன?
பதில் : கதீஜா (ரலி) (ஆதாரம்(புகாரீ: 3816)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் தமது எத்தனையாவது வயதில் கதீஜா (ரலி) அவர்களை திருமணம் முடித்தார்கள்? அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது என்ன?
பதில் : நபி (ஸல்) அவர்களின் வயது 25, கதீஜா (ரலி) அவர்களின் வயது 40 (ஆதாரம் )
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை திருமணம் முடித்த போது அவர்கள் கன்னியா இருந்தார்களா? விதவையா இருந்தார்களா?
பதில் : விதவை (ஆதாரம்)
கேள்வி : கதீஜா (ரலி) அவர்களூக்கு அன்றைய காலத்தில் இருந்த பட்ட பெயர் என்ன?
பதில் : தாஹிரா (பரிசுத்தமானவள்) (ஆதாரம் தாரிக் திமிக்ஸ் பக்கம் 109)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் அதிகம் நேசித்த மனைவி யார்?
பதில் : கதீஜா (ரலி), (ஆதாரம்(புகாரீ: 3818)
கேள்வி : நபி (ஸல்) அவர்களூக்கு யார் யார் மூலம் குழந்தை பிறந்தது ?
பதில் : அன்னை கதீஜா (ரலி), மாரியத்துல் கிப்திய்யா (ரலி) (ஆதாரம்(புகாரீ: 3818, 1303), தாரகுத்னீ பாகம் 4, பக்கம் 132)
கேள்வி : மாரியத்துல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் என்ன ?
பதில் : இப்ராஹீம் (ஆதாரம்(புகாரீ: 1303)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் குழந்தை எத்தனை வயதில் இறந்தது ?
பதில் : 16 மாதம் (ஆதாரம்(அபூதாவூத்: 2772)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்த போது நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?
பதில் : சூரியகிரகணம் ஏற்பட்டது (ஆதாரம்(புகாரீ: 1043)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் பெண் குழந்தைகள் பெயர்கள் என்ன?
பதில் : ஜைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்மு குல்ஸþம் (ரலி), பாத்திமா (ரலி) (ஆதாரம்(புகாரீ: 516, 5842, 357)அஹ்மத் (525),
கேள்வி : ஜைனப் (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?
பதில் : அபுல் ஆஸ் பின் ரபீவு (ஆதாரம்(திர்மிதீ: 1062)
கேள்வி : ருகைய்யா (ரலி), உம்மு குல்ஸþம் (ரலி) ஆகியோரின் கணவர் பெயர் என்ன?
பதில் : உஸ்மான் (ரலி) (ஆதாரம் )
கேள்வி : பாத்திமா (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன ?
பதில் : அலீ (ரலி) (ஆதாரம்(புகாரீ: 441)
கேள்வி : அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு என்ன உறவு ?
பதில் : நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகன் அலீ (ரலி) அவர்கள் (ஆதாரம்(புகாரீ: 441)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் குழந்தைகளில் இறுதியாக இறந்தவர் யார்?
பதில் : பாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்கள் இறந்து ஆறு மாதம் கழித்து இறந்தார்கள் (ஆதாரம்(புகாரீ: 3093)
கேள்வி : நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதின் துவக்கம் எவ்வாறு இருந்தது?
பதில் : நல்ல கனவுகளாக வந்தன (ஆதாரம்(புகாரீ: 4)
கேள்வி : நல்ல கனவுகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய விளக்கம் என்ன ?
பதில் : நபித்துவத்தில் நாற்பதி ஆறில் ஒரு பகுதி என்று விளக்கம் அளித்தார்கள் (ஆதாரம் :(புகாரீ: 6983)
கேள்வி : நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வருவதற்கு முன்னர் அவர்கள் எங்கு தியானம் செய்தார்கள்.
பதில் : மக்காவிலுள்ள ஹிரா எனும் குகையில் (ஆதாரம் :(புகாரீ: 4)
கேள்வி : நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையாவது வயதில் இறைச் செய்தி வந்தது?
பதில் : நாற்பதாவது வயதில் (ஆதாரம் : ???)
கேள்வி : நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் இறங்கிய வசனங்கள் எவை ? எவை?
பதில் : திருக்குர்ஆனின் 96 அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள். (ஆதாரம் :(புகாரீ: 4)
கேள்வி : நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியை கொண்டு வந்தவர் யார் ?
பதில் : ஜிப்ரீல் (அலை)
கேள்வி : முதல் வஹீ வந்த போது பயந்த நபி (ஸல்) அவர்களுக்கு ஆறதல் கூறியவர் யார்?
பதில் : நபி (ஸல்) அவர்களின் மனைவி அன்னை கதீஜா (ரலி) (ஆதாரம் :(புகாரீ: 4)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் இறைததாரக்கப்படுள்ளார்கள் என்று உறுதிபடுத்தியவர் யார் ?
பதில் : வரக்கா பின் நவ்ஃபல் அவர்கள் (ஆதாரம் :(புகாரீ: 4)
கேள்வி : வரக்கா பின் நவ்ஃபல் என்பவர் யார்?
பதில் : அறியாமை காலத்தில் கிறிஸ்தவராக இருந்தவர், இப்ரானி மொழியை எழுது படிக்கத் தெரிந்தவர், இஞ்சீலை இப்ரானி மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த வயதான கண் தெரியாத முதியவர். (ஆதாரம் :(புகாரீ: 4)
கேள்வி : வரக்கா பின் நவ்ஃபல் அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் என்ன உறவு ?
பதில் : அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தந்தையின் உடன் பிறந்தவரின் மகன் வரக்கா பின் நவ்ஃபல் ஆவார். (ஆதாரம் :(புகாரீ: 4)
கேள்வி : ஜிப்ரீலை (அலை) அவர்களை என்ன பெயரிட்டு வரக்கா பின் நவ்ஃபல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பதில் : நாமூஸ் (ஆதாரம் :(புகாரீ: 4)
கேள்வி : இறைத் தூதர்களுக்கு அவர்களின் சமூத்தார் என்ன செய்வார்கள் என்று வரக்கா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பதில் : ஊரை விட்டு விரட்டுவார்கள். (ஆதாரம் :(புகாரீ: 4)
கேள்வி : நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹீ வந்த பிறகு தொடர்ந்து வஹீ வந்ததா?
பதில் : இல்லை. சிறிது காலம் நின்றது. (ஆதாரம் : புகாரீ )
கேள்வி : முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்? யார்?
பதில் : வரக்கா பின் நவ்ஃபல் (ரலி), அன்னை கதீஜா (ரலி), அபூபக்ர் (ரலி), அலீ (ரலி), ஸைத் பின் ஹாரிஸா (ரலி), அம்மார் (ரலி), சுமைய்யா (ரலி), ஸýஹைப் (ரலி), பிலால் (ரலி), மிக்தாம் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா 147 ???)
கேள்வி : ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களை இணைவைப்பவர்கள் என்ன வேதனை கொடுத்தனர்?
பதில் : இரும்புச் சட்டைகள் அணிவித்து வெயிலில் வாட்டினார்கள். (ஆதாரம் : இப்னுமாஜா 147)
கேள்வி : பிலால் (ரலி) அவர்களுக்கு இணைவைப்பாளர்கள் என்ன தண்டனை கொடுத்தார்கள்?
பதில் : சிறுவர்களிடம் அவர்களை கொடுத்து மக்கா வீதிகளில் இழுத்து சொல்லப்படார்கள். அப்போதும் அல்லாஹ் ஒருவனே என்று கூறிக்கொண்டிருந்தார்கள் பிலால் (ரலி), (ஆதாரம் : இப்னுமாஜா 147)
கேள்வி : (முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (26 : 214) வசனம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக யாரிடம் போய் ஓரிறைக் கொள்கை கூறினார்கள்?
பதில் : தமது சிறிய தந்தை அப்பாஸ் (ரலி), மாமி ஸபிய்யா (ரலி), மகள் பாத்திமா (ரலி), (ஆதாரம் :(புகாரீ: 2753)
கேள்வி : அவர்களிடம் என்ன கூறினார்கள்?
பதில் : உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தரமுடியாது (தண்டையிலிருந்த காப்பாற்ற முடியாது) என் செல்வத்திலிருந்து நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் (நான் அதைத் தருகிறேன்) என்று கூறினார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3527)