01) துன்பம் ஏற்படும் போது
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ
அன்னீ மஸ்ஸனியDள் Dளுர்ரு வஅன்த அர்ஹமுர் ராஹிமீன்.
பொருள்: எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்.
(நபி அய்யூப் (அலை) அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட போது இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்).
رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
ரப்பனாa ஆதினா மில் லdதுன்க ரஹ்மதவ் வhஹய்யிஃ லனா மின் அம்ரினா ரஷdதா.
பொருள்: எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக! (அல்குர்ஆன்: 18:10)➚
(நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னால் வாழ்ந்த சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்)