01) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்

நூல்கள்: இறைநம்பிக்கையாளனின் தன்மைகள்

حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோர்த்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூசா (ரலி)

நூல் : (புகாரி: 481) (முஸ்லிம்: 2586) (திர்மிதீ: 1928) (அஹ்மத்: 19126)