வீட்டின் முகப்பில் திக்ருகளை பிரேம் போட்டு தொங்கவிடலாமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

பதில் :

அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள்) ஆகிய வாசகங்களை வீட்டில் தொங்கவிடுவது தவறல்ல. வீட்டுக்கு வருபவர்கள் இதைப் படிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தால் இதை மார்க்கம் தடை செய்யவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)(புகாரி: 2697)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)          நஸாயி-1560

இதுபோன்ற வாசகங்களை எழுதித் தொங்கவிட்டால் வீட்டுக்கு பரகத் வரும். பேய் பிசாசு வராது என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்வது கூடாது.