06) விமர்சனம் 5
அவரது மோசடியையும் அறியாமையையும் இன்னும் பாருங்கள்(அல்குர்ஆன்: 21:42) ➚ல் பகலிலோ இரவிலோ மானிடர் அறியாத வேளையில் வருகிறவர் நரக வேதனையி லிருந்து விடுவிப்பவர் என்றும் கூறுகிறது என்கிறார் ஜெபமணி (பக்கம்50)
நமது பதில்
அதாவது இத்தகைய தன்மை ஏசுவுக்கு உண்டு என்றும் அவரையே இவ்வசனம் கூறுகிறது என்றும் குறிப்பிடுகிறார் ஜெபமணி. உண்மையில் அந்த வசனம் கூறுவது என்ன?
இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையிலிருந்து எங்களை இரட்சிப்பவர் யார் என்று நீர் கேளும்
இதற்கும் ஜெபமணி கூறுவதற்கும் ஏதாவது சம்மந்தமிருக்கிறதா? இவரை விட அறிவிலியை உலகம் கண்டிருக்கிறதா? ஜெபமணி நாய் என்பதை எப்படி ஜெபமணி புரிந்து கொள்வாரோ அதே போல் தான் ரஹ்மானுடைய வேதனை என்பதை ரஹ்மான் என்று விளங்குகிறார்.
இப்புத்தகம் முழுவதும் எதை விட எதை சேர்க்க என்று தெரியாத அளவுக்கு மோசடிகள் மலிந்து உள்ளன. இவரது அறியாமைக்கு இன்னும் சில சான்றுகளையும் பாருங்கள்