21) விமர்சனம் 37,38,39,40
விமர்சனம் 37
3:64 இயேசுவின் மத்தியஸ்தால் ஒன்றுபடவும் எனக் கூறுவதாகக் கூறுகிறார்.
3:64ல் மனிதர்களை அதாவது இயேசுவைக் கடவுளாக்குவதில்லை என்று கூறி இறைவனுக்கு இணை வைக்காதிருந்தால் நாம் ஒன்று படலாம் என்ற அழைப்பு விடப்படுகிறது.
இதையெல்லாம் படிக்கும் வாசகர்கள் இந்த டுயூப்லைட்டிற்கா பதில் சொல்ல வேண்டும் என்று எண்ணிவிடாதீர்கள் ஏனென்றால் டியூப்லேட்டாவது தாமதாமாகவாவது எரிந்து விடுமன்றோ.
விமர்சனம் 38
2:248 . 61:9 . 2:38. 129 .160 .40:53 .54 ஏசுவின் மார்க்கமே சகல மார்க்கத்தையும் வெல்லும் என்று கூறுவதாக உளறுகின்றார்.
2:248 வசனம் தாலூத் பற்றிக் கூறுகிறது.
61:9 நபி (ஸல்) அவர்களைக் குறிக்கிறது என்பதை முன்பே விளக்கியுள்ளோம்.
2:38 ஆதம் (அலை) அவர்களைக் குறிக்கிறது.
2:129 ஆபிரகாமும் இஸ்மாயீலும் தங்கள் சந்தததிகளிலி ருந்து ஒரு தூதரை அனுப்புமாறு இறைவனிடம் பிரார்த்தித்ததாக உள்ளது. இஸ்மவேல் பரம்பரையில் ஏசு வராததால் அது ஏசுவைக் குறிக்காது முஹம்மது (ஸல்) அவர்களையே குறிக்கிறது.
2:160 இறை வேதத்தை மறைக்கும் ஜெபமணி போன்றோரை அடையாளம் காட்டுகிறது.
40:53 . 54 வசனங்கள் இறை வேதத்தில் தக்க சான்று இன்றி ஜெபமணி போல் தர்க்கம் என்று உளறிக் கொட்டக் கூடாது எனக் கூறுகிறது.
அவர் குறிப்பிட்ட ஒரு வசனமும் ஏசுவைக் குறிக்கவில்லை.
ஆதியாகமம் 18:10 எண்ணாகமம் 24:5 மாற்கு 36:7 மத்தேயு 63:1 லூக்கா 7:12ஆகிய வசனங்கள் 1989ல் தமிழ் நாட்டில் தோன்றக்கூடிய ஜெபமணி எனும் மூடரைப் பற்றிக் கூறுகிறது என்று நாம் எழுதுவதற்கும் ஜெபமணி எழுதியுள்ளதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
விமர்சனம் 39
61:6 இயேசு கூறிய தேற்றரவாளனாகிய தூய ஆவியானவரைக் கூறுவதாகக் ஜெபமணி கண்டுபிடித்துள்ளார்.
61:6 முன்பே விளக்கப்பட்டுவிட்டது.
விமர்சனம் 40
43:45 5:92 8:1 இயேசு வணங்கப்படத் தக்கவர் என்று கூறுவதாக ஜெபமணி உளறுகிறார்.
43:35 இவ்வுலகில் நிலையாமை பற்றியும் மறுமையின் சிறப்புப் பற்றியும்
5:92 நபிகளின் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பது பற்றியும்
8:1 போர்ப் பொருட்கள் பங்கிடுவது பற்றியும் கூறுகிறது
எடுத்துக்காட்டும் எண்களுக்கும் இந்த மண்ணாங்கட்டி எடுத்துவைக்கும் கருத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா?
இப்படி குர்ஆன் என்று போட்டு பல நம்பர்களை விட்டு அடிக்கும் இந்தச் சாமியார் வேலையை உமது ஆலயங்களோடு நிறுத்திக் கொள்வீராக என்று ஜெபணிக்கு கூறி ஆசீர்வதிக்கிறோம்.