20) விமர்சனம் 33,34,35,36

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

விமர்சனம் 33

7:157 , 3:164 இயேசு பாவ விலங்கை விலக்கியவர் என்று கூறுவதாக ஜெபமணி தெளிவடைந்துள்ளார் (பக்கம் 79)

3:164 வசனம் நபி (ஸல்) அவர்களையே கூறுகிறது என்பதை முன்னர் விளக்கினோம் 7:157 வசனம் சொல்வதென்ன என்பதை இனிமேல் காண்போம்.

மோசேவுக்கு அருளப்பட்ட தவ்ராத்திலும் ஏசுவுக்கு அருளப்பட்ட இஞசீலிலும் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை பற்றிக் கூறப்பட்டதையும் அந்த முஹம்மது பாவ விலங்கை அகற்றுவார் எனவும் அவ்வசனம் கூறுகிறது.

ஏசுவுக்கு அருளப்பட்ட வேதத்திலேயே இனி வருபவர் என்று கூறப்பட்டால் அவர் ஏசுவாக எப்படி இருக்க முடியும்? ஏசு அல்லாத வேறொருவராகத் தானே இருக்க முடியும்.

விமர்சனம் 34

56:10 . 14 இயேசு இரகசியமாக வருகிறவர் என்று குர்ஆன் கூறுவதாக ஜெபமணி கதையளக்கிறார்.

அவ்வசனங்கள் உலக முடிவு நாள் பற்றியும் மலைகள் தூள் தூளாகப் பெயர்த்தெடுக்கப்படுவதையும். (வானத்துக்கல் உட்பட) கூறுகின்றன. இதில் என்னய்யா இரகசியம்?

விமர்சனம் 35

36:68 . 70 மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசியார் என்று இயேசு, யோவான் 3:3 . 5. 7 ல் சொல்லி யவற்றை விளக்குகிறது என்கிறார் ஜெபமணி.

அவ்வசனங்கள் உயிருள்ளவர்களுக்கு எச்சரிக்கைச் செய்வதாக குர்ஆன் அருளப்பட்டது எனவும், முஹமதுவுக்கு நாம் கவிதையைக் கற்றுத் தரவில்லை எனவும் கூறுகிறது.

கவிதையை அறியாத ஒருவர் அழகு நடையில் குர்ஆனை மக்கள் முன் வைத்தார் என்றால் அது இறை வேதம் என்பதற்கு தெளிவான சான்று என்று தான் அவ்வசனங்களிலிருந்து விளங்கலாம்.

விமர்சனம் 36

5:82-85 3:113. 114 199 ல் இயேசுவுக்குள்ளானோர் மாத்திரமே நித்தியத்தில் வாழ முடியும் என்கிறது எனக் கூறுகிறார் ஜெபமணி.

அவர் குறிப்பிட்ட 5:82 – 85 பல கிறித்தவர்கள் நபிகளின் காலத்தில் நபியிடம் வந்து அவருக்கு அருளப்பட்ட வேதத்தை கேட்டு கண் கலங்கி கிறித்தவத்தி லிருந்து விலகி இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறுகிறது.

ஜெபமணியும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் இவ்வசனத்தைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

3:113 . 114 வசனங்களும் இதே கருத்தையே கூறுகின்றன.

3:199 வசனமும் அன்றைய கிறித்தவர்கள் முஹம்மதுவுக்கு அருளப்பட்ட வேதத்தை ஏற்று இஸ்லாத்தில் இணைவதன் மூலம் நித்திய வாழ்வை அடைந்ததாகக் கூறுகிறது.

ஜெபமணியின் விளங்கும் திறன் எத்தகையது என்பதற்கு இவையெல்லாம் தெளிவான சான்றுகள்.