04) விமர்சனம் 3
முகமது வரலாறு என்ற தலைப்பில் (பக்கம்23) வாயில் வந்தவாறு எல்லாம் உளறிக் கொட்டிவிட்டு அவர் மட்டும் தெளிவடைந்திருக்கிறார்.
அந்தத் தலைப்பில்
கதீஜாப் பிராட்டியார் யூத, சிரிய, கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார். முகமது, கதீஜாள் மூலம் சத்திய வேதத்தை மார்க்கத்தை அறிந்தார். கதீஜாவின் உறவினரும் போதகருமான வர்காபின் என்பவரைக் கொண்டு சத்தியத்தைத் தெளிவாக அறிந்து வந்தார். (அதாவது கிறிஸ்தவ மதத்தையும் பைபிளையும் கூறுகிறார் ஜெபமணி)
கி பி 619ல் கதிஜாள் மரித்தாள். முகமது சகல ஆஸ்திகளுடன் தன் ஜனத்தாரை அடைந்தார். அங்கு வாழ்ந்த சிலர் அவருடைய நாகிரீகத்தையும் அவர் வணக்க முறைகளையும் கண்டு அவரை விரும்பினர். அவர் வர்காபினிடம் கேட்டறிந்த சத்தியத்தை அவர்களுக்குப் போதிக்கையில் மெக்காவாசிகள் இப்புது உபதேசத்தால் வெகுண்டு கலகம் அடைந்து தங்கள் வணக்கங்கள் திருவிழாக்கள் நாசமடைந்து அதன் மூலம் அவர்கள் சம்பாதித்து வந்த வருமானங்களை இழந்து போக நேரிடும் என்று கண்டு இந்த உபதேசத்தைக் கை விடுமாறு பணித்தனர். வெகுமதிகளை முகம்மதுக்குத் தர முயன்றனர் என்கிறார் ஜெபமணி
(பக்கம் 23.24)
நமது பதில்
இதில் அவர் செய்த மோசடிகள் ஏராளம். அதை அனைத்தையும் விரிவாக அலசுவோம். முதலில் கதீஜா பிராட்டியார் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று ஜெபமணி நிலை நாட்டுவதற்கு என்ன காரணம் என்றால் யூத குலமே மனித சமுதாயத்தில் உயர்ந்த குலம்; அந்தக் குலத்தில் மட்டுமே தீர்க்கதரிசிகள் தோன்றுவர். அவர்கள் மாத்திரமே இறைவனுக்கு உவப்பானவர்கள் என்பது யூத கிறிஸ்தவ தலைமையின் நம்பிக்கை. யாராவது சத்தியத்தைச் சொன்னால் அவரை யூதர் என்பார்கள்; அல்லது யூதர்களிடம் தான் இவர் இதனைக் கற்றார் என்பார்கள். யூதர்கள் வழியாக அல்லாமல் சத்தியம் வெளிவர முடியாது என்பதும் இவர்களது நம்பிக்கை.
இந்த நம்பிக்கை இன்று நேற்றல்ல. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே அவர்களிடம் குடி கொண்டிருந்ததைக் குர்ஆன் கூறுகிறது.
யூதர்களும் கிறுஸ்தவர்களும் நாங்களே அல்லாஹ்வுடைய குமாரர்களாகவும் அவனால் நேசிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றோம் என்று கூறிகின்றனர்.
இந்த உயர் ஜாதிப் புத்தி தான் கதீஜாவையும் வரக்காவையும் யூத குடும்பம் என்று ஜெபமணியைச் சொல்ல வைக்கின்றது. அவ்விருவரும் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் தந்திருக்கிறாரா ஜெபமணி? ஆதாரம் தந்தால் தான் புத்திசாலிகளின் பட்டிய லில் சேர்ந்து விடுவாரே.
ஆப்ரஹாமுக்கு இரு மகன்கள். ஒருவர் இஸ்மவேல். மற்றவர் ஈஸாக். ஈஸாக்வுடைய புதல்வர் தான் இஸ்ரவேல். இவர் வழியாகத் தோன்றியவர்களே யூதர்கள். இதன் அடிப்படையில் தான் ஜெபமணியைச் சேர்ந்தவர்கள் கூட இஸ்மவேல் இஸ்ரவேல் என்று குறிப்பிடுவார்கள்.
இஸ்மவேலர்களின் பரம்பரையில் வந்த எவரும் யூத குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது. இஸ்மவேலர்களின் ஒரு கிளைக் குடும்பமே குரைஷிக்குலம். இந்த குறைஷிக் குலத்திலேயே முகமது தோன்றியதாக ஜெபமணி ஒப்புக் கொள்கிறார். (பக்கம் 23)
முகமது (ஸல்) எந்தக் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்களோ அதே குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அன்னை கதீஜாவும், வரக்கா பின் நவ்பலும். இதை ஒப்பு நோக்கி விளங்குவதற்காக முஹம்மது (ஸல்) அவர்களின் பாரம்பரியப் பட்டியலும் கதிஜா ரலி அவசர்களின் பாரம்பரியப் பட்டியலும் வரகா பின் நவ்பலின் பாரம்பரியப் பட்டியலும் தந்துள்ளோம். இரண்டும் எவ்வாறு ஒட்டி அமைந்துள்ளன என்பதை ஜெபமணிகள் உணரட்டும்.
முஹம்மது (ஸல்) கதீஜா(ரலி ) வரக்கா
காலிப் காலிப் காலிப் லுவை லுவை லுவை கஃபு கஃபு கஃபு முர்ரா முர்ரா முர்ரா கிலாப் கிலாப் கிலாப் குஸை குஸை குஸை அபதுல்முனாப் அப்துல் உஸ்ஸா அப்துல் உஸ்ஸா ஆ ஷிம் அஸத் அஸத் அப்துல் முத்தலிப் குவை த் நவ்பல் அப்துல்லாஹ் கதீஜா வரக்கா முஹம்மது (ஸல்)
(ஆதாரம்: இப்னு ஹிஷாம் அவர்களின் நபி வரலாறு என்ற நூல்)
முஹம்மது (ஸல்) அவர்கள் எப்படி இஸ்மவேலர்களடங்கிய குஸை என்பாரின் பரம்பரையில் தோன்றினார்களோ அந்தப் பரம்பரையிலே தான் கதீஜாவும் வரக்காவும் பிறக்கிறார்கள்.
வரக்கா பின் நவ்பல் அவர்கள் குறைஷிக் குலத்தில் பிறந்த பின்னர் கிறித்தவ மார்க்கத்தைத் தழுவிக் கொண்டவர் என்பதே உண்மை.
ஜெபமணி தனது நூலின் முன்னுரையில் என்ன ஆச்சரியம் ஆண்டவர் என் கரத்தைப் பிடித்து நான் அரியாத வேத இரகசியத்தையெல்லாம் எனக்குள் உணர்த்தி எழுவதை உணர்ந்தேன். என் கைகள் எழுதிய போதிலும் எழுதிய விபரம் என்னிடமிருந்து வெளிப்பட்டதில்லை என்பதை திருப்பி வாசித்த போது கண்டேன். வேத புத்தகத்தை குர்ரான் ஹதீஸ் நூல்களைப் புரட்டும் போதெல்லாம் என் கண்கள் உற்று நோக்கும் இடத்தில் எழுதுவதற்கு ஆதாரமான வசனங்கள் இருப்பதைக் கண்டு உண்மையாய் அதிசயித்தேன். ஆண்டவராலேயல்லாமல் எந்த ஒரு மனிதரிடமோ வேத பண்டிதர்களிடமோ அவர்கள் எழுதிய நூல்களி லிருந்தோ ஒன்றையும் நான் கேட்டோ வாசித்தோ அறியவில்லை என்பதற்கு தேவன் மாத்திரமே சாட்சி
(பக்கம் 6)
என்று குறிப்ப்பிட்டுள்ளார்.
ஜெபமணியாரே கலீலுல்லாஹ் என்றால் அல்லாஹ் என்று அர்த்தம் செய்தீரே அதுவும் கூட உமது ஆண்டவர் கையைப் பிடித்து எழுதியது தானா?
17;85 என்று போட்டு உளறினீரே அதுவும் ஆண்டவனின் கிருபா கடாட்சம் தானா?
கதீஜாளும், வர்காபினும் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் என புருடா விட்டீரே அதுவும் பரலோகத்திலிருக்கிற பிதா உம் கையைப் பிடித்து எழுதியது தானா?
குர்ரானும் ஹதீஸும் தேவையான போது உம் கண்களுக்கு காட்சி தருவதாகக் கூறுகிறீரே ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மட்டும் உம் கண்ணில் படாமல் போனதும் அந்த தேவனின் மகிமை தானா? அந்தச் சமயத்தில் மட்டும் பரமண்டலத்தில் இருக்கும் பிதா உம் கையை உதறி விட்டாரா? அந்த ஹதீஸை அப்படியே தருகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன் முறையாக வஹீ வந்ததும் கதீஜா (ரலீ) யிடம் வந்து தன்னைப் போர்த்துமாறு கூறியதும் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் சகோதரரான நவ்பல் என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள். நவ்பல் என்பார் அஸது என்பாரின் மகனும் அஸது என்பார் அப்துல் உஸ்ஸா என்பாரின் மகனுமாவார். வரக்கா அவர்கள் அறியாமைக் காலத்திலேயே கிறித்துவ மார்க்கத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் தேர்ந்தவராகவும் (அராமிக் மொழி வேதமான) இன்ஜீலை ஹீப்ரு மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதி வைத்தவராகவும் இருந்தார். மேலும் அவர் கண்பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா (ர லி) அவர்கள் என் தந்தையின் சகோதரனின் மகனே! உமது சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள். என்றார்கள். நீர் என்ன கண்டீர்? என்று வரகா அவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் கண்டதைக் கூற அவர்கள் வந்தவர் ஜிப்ரீல் தான் என்று உறுதிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரக்கா அவர்கள் எந்தச் செய லும் ஈடுபடாமல் இறந்து விட்டார்கள்
(புகாரி ஹதீஸ் எண் 3
பரலோகத்தில் இருக்கின்ற பரம பிதா ஜெபமணிக்கு இந்த ஹதீஸைக் காண்பிக்கவில்லை போலும். தேவனே தன் கையைப் பிடித்து எழுதச் செய்ததாக உளறும் ஜெபமணியின் கூற்றுப் படி இதுவரை இவ்வளவு அறியாமையும் முட்டாள் தனமும் இவருடைய வாதங்களில் காணப்படுகிறதே இன்னும் பல அபத்தங்களைக் காணவிருக்கிறோமே அந்த அபத்தங்கள் கூட தேவனுடையது தானா?
வர்காபிடம் முஹம்மது சத்தியத்தைக் கற்றார் என்ற ஜெபமணியின் கூற்றும் தவறானது என்பதை மேலும் காண்போம்.
இறைவன் ஒருவன் தான்; ஆனால் அவனுக்கு ஒரு மகன் உண்டு. அந்த மகனுக்கு ஒரு தாய் உண்டு அந்த மகனுக்கும் தாய்க்கும் இறைமையில் பங்குண்டு. ஒன்றாக உள்ள இறைவன் மூன்றாக இருக்கிறார் என்பது அன்றைய மற்றும் இன்றைய கிறிஸ்துவ நம்பிக்கை.
வரக்காவிடம் முஹம்மது (ஸல்) பாடம் படித்திருந்தால் அந்தப் போதனைக்கு மாற்றமாக இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; அவன் தேவையற்றவன்; அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவில்லை; அவன் தான் படைப்பாளன்; உணவளிப்பவன்; உரிமையாளன்.; சட்டமயற்றுபவன் என்றெல்லாம் முஹம்மது (ஸல்) போதித்திருப்பார்களா?
முஹம்மது (ஸல்) எதைப் போதித்தார்களோ அதையே வரக்காவிடம் கற்றார் என்று ஜெபமணி வாதிட்டால் மற்றொரு உண்மையை அவர் ஒப்புக் கொண்டவராகி விடுகிறார். அதாவது வரக்கா முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் போதித்த கொள்கை தான் சத்தியம் என்று ஜெபமணி ஏற்றுக் கொண்டவராகிறார். அப்படியானால் வரக்காவிடம் முஹம்மது (ஸல்) கற்ற கொள்கைக்கு மாற்றமாக இன்றைய கிறிஸ்தவர்களின் கொள்கை அமைந்துள்ளதே இக்கொள்கை பிற்காலத்தில் திணிக்கப்பட்டது தான் என்பதை ஜெபமணி ஒப்புக் கொள்வாரா?
ஜெபமணியின் வாதப்படி வரக்கா போன்ற அன்றைய கிறிஸ்துவ மூத்த அறிஞர்கள் இறைவனுக்கு மனைவி மக்களில்லை என்று கொள்கையை வைத்திருக்கும் போது, அதை முஹம்மதுவுக்கும் போதித்திருக்கும் போது இதற்கு முரணாக பின்னர் திட்டமிட்டு திணிக்கப்பட்ட கிறிஸ்தவக் கொள்கையி ருந்து ஜெபமணி விலகிக் கொள்வாரா?
ஒன்று முஹம்மது (ஸல்) வரக்காவிடம் எதையும் கற்கவில்லை என்பதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது வரக்காவிடம் கற்றார் என்றே சாதித்தால் வரக்கா போன்ற முற்காலப் பாதிரிகள் என்ன கொள்கையை முஹம்மதுவுக்கு போதித்தார்களோ அதை அதாவது இஸ்லாத்தை ஏற்றாக வேண்டும். இரண்டில் எதைச் செய்யப் போகிறார் திருவாளர் ஜெபமணி.
அவர் வர்காபினிடம் கேட்டறிந்த சத்தியத்தை அவர்களுக்குப் போதிக்கையில் மெக்காவாசிகள் இப்புது உபதேசத்தால் வெகுண்டு கலக்கம் அடைந்து தங்கள் வணக்கங்கள் திருவிழாக்கள் நாசமடைந்து அதன் மூலம் அவர்கள் சம்பாதித்து வந்த வருமானங்களை இழந்து போக நேரிடும் என்று கண்டு இந்த உபதேசத்தைக் கைவிடுமாறு பணித்தார்கள் என்று ஜெபமணி முன்னர் தாம் குறிப்பிட்ட பாராவில் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி பிழைப்பதையும், புரோகிதத்தையும் முஹம்மது (ஸல்) கடுமையாக எதிர்த்துள்ளார் என்பதை ஒப்புக் கொள்கிறார் ஜெபமணி. இந்தக் கொள்கையை ஜெபமணியின் வாதப்படி வர்காபினிடம் அவர் கற்றறிந்ததால் வர்காபுடைய காலத்தில் கிறிஸ்துவ மார்க்கத்திலும் புரோகிதம் இருக்கவில்லை என்பது தெளிவு. ஜெபமணி போன்றவர்களே அதைப் பின்னர் தங்கள் இலாபத்திற்காக உருவாக்கிக் கொண்டார்கள் என்பதும் தெளிவு. புரோகிதத்தை எதிர்த்துப் போராடுவதை எந்த வர்காபினிடம் அவர் கற்றாரோ அந்த போதனையை ஜெபமணியும் அவரது காலத்தவர்களும் மறந்தது ஏன்?
வர்காவும் புரோகிதத்தை ஆதரிப்பவராக இருந்தார் என்று ஜெபமணி கூறினால் புரோகிதத்தை ஆதரிப்பவரிடமிருந்து புரோகிதத்தை எதிர்க்கின்ற ஞானத்தையும் துணிவையும் முஹம்மது (ஸல்) பெற்றிருக்க முடியுமா? குழப்பமே உனது மறு பெயர் தான் ஜெபமணியோ?
முஹம்மதுவுக்கு வெகுமதிகளைத் தர முயன்றனர் என்று ஜெபமணி கூறுவதன் மூலம் முகமது எதற்கும் அஞ்ஞாதவர்; விலை போகாதவர் என்பதை ஜெபமணி பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார். அவர் எழுதியதிலேயே இந்த வாசகம் மட்டும் தான் உண்மை.
அடுத்து வர்காவிடம் முஹம்மது (ஸல்) சத்தியத்தைக் கற்றார் என்று ஜெபமணி கூறியிருக்கிறார் அல்லவா? அதே வரக்கா முஹம்மதுவை இறைத் தூதர் இறுதித் தூதர் என்று நற்சான்று வழங்கினாரே அதனடிப்படையில் முஹம்மது இறைவனின் இறுதித் தூதர் தான் என்பதையும் ஜெபமணி ஏற்றுக் கொள்ள வேண்டும்