18) விமர்சனம் 25,26,27
விமர்சனம் 25
குர்ரான் 2:196 . 37:107 ஆகியவை ஆபிரஹாம் இஸ்மவேலைப் ப லியிட்டதாகக் கூறுகிறது என்கிறார் ஜெபமணியார்.
(பக்கம் 7)
மனிதப் பலியின் மீதே தன் மதத்தின் அஸ்திவாரம் அமைந்துள்ளதால் அவருடைய பார்வை இப்படிப் போகின்றது. ஆபிரகாம் இஸ்மவேலைப் ப லியிட முயன்றதும் அதன் பின் இறைவனின் கட்டளைப் பிரகாரம் இஸ்மவேலுக்குப் பதிலாக ஒரு ஆட்டைப் ப லியிட்டதும் தான் திருக்குர்ஆன் கூறக்கூடிய செய்தியாகும்.
விமர்சனம் 26
குர்ரான் 17:94 95 இறைவன் மனிதன் மத்தியில் மனிதாக வந்தார் என்கிறது எனக் கூறுகிறார் ஜெபமணி.
மனிதர்களிடம் நேரான வழி வந்த போது அல்லாஹ் ஒரு மனிதரையா தூதராக அனுப்பி வைத்தான் என்று கூறுவதைத் தவிர அவர்கள் விசுவாசம் கொள்வதைத் தடை செய்ய ஒன்றுமே இல்லை. (அதற்கு) நபியே நீர் கூறும் பூமியில் மனிதர்களே வசித்திருந்து அதில் சாவதானமாக நடந்து திரிந்து கொண்டிருந்தால் நாமும் வானத்திலி ருந்து ஒரு மலக்கையே (நம்முடைய) தூதர்களாக அவர்களிடம் அனுப்பியிருப்போம் (அல்குர்ஆன்: 17:94) ➚,95) இது தான் அவர் குறிப்பிட்ட வசனம். இதி லிருந்து இறைவனே மனிதனாக வந்தார் அவர் தான் ஏசு என்று ஞானம் பெறுகிறார் ஜெபமணி.
ஐயா ஜெபமணியாரே! தமிழில் உள்ள இந்த மொழி பெயர்ப்பு கூட உமக்கு புரியவில்லை என்றால் உம்மைப் பற்றி நாங்கள் என்ன முடிவுக்கு வருவது? இறைவன் மனிதராக வருவான் என்று இதில் கூறப்படவே இல்லையே! மனிதர்களுக்கு அனுப்பப்படும் இறைவனின் தூதர் (இறைவன் அல்ல ) மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று கூறுகிறது. இதன் மூலம் ஏசு மனிதனிடம் தூதராக வந்ததால் ஏசுவும் மனிதன் தான் தெய்வப் பிறவி அல்ல என்று தான் விளங்குகிறது
விமர்சனம் 27
குர்ரான் 5:112, 8:49 , 3:55 இயேசுவை சிருட்டிகனாக்குகின்றது என்கிறார் ஜெபமணி.
(பக்கம் 79)
ஈஸா (அலை) அவர்கள் ஒருசில பறவை வடிவங்களை உருவாக்கி அவற்றைப் பறவைகளாக ஆக்கியதாக அவ்வசனங்கள் கூறுவது உண்மையே. ஆனால் அகே வசனத்திலே என் அனுமதியுடன் அவ்வாறு செய்தீர் என்று இறைவன் கூறுவதாக இடம் பெற்றுள்ளதே உமது கண்களுக்குத் தென்படவில்லையா? இறைவன் நாடினால் அவன் நாடும் போது எவர் மூலமாகவும் அற்புதங்கள் நிகழலாம் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகிறோம். அந்த வகையில் இறைவன் அனுமதித்த சில சமயங்களில் ஈஸா (அலை) அவர்களும் அற்புதங்கள் செய்ததை நம்புகிறோம். இதனால் அவர் சிருஷ்டிப்பவர் என்று ஆகிவிட முடியுமா?
அப்படியானால் மூஸா (அலை) அவர்கள் இறந்தவனை உயிர் பித்தததை(அல்குர்ஆன்: 2:72) ➚கூறுகிறதே அவரும் சிருட்டிப்பவரா? அவரும் தேவ மைந்தனா? இதை ஜெபணி ஏற்பாரா?
ஆபிராகம் பறவைகளை உயிர்ப்பித்ததாக 2:260 வசனங்கள் கூறுகிறதே? அவரும் கூட சிருட்டிப்பவர் தானா ? அவரும் கூட தேவ மைந்தன் தான் என்று ஜெபமணியார் ஒப்புக் கொள்வாரா?
பைபிளும் குர்ஆனும் மோசே கைத்தடியால் பாம்பை உருவாக்கியதாகக் கூறுகின்றனவே அவரும் கூட சிருட்டிகன் தானா?