03) விமர்சனம் -2
முஸ்லிம்கள் தேவனை அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். அதே வேளை மானிடரில் சிறப்பானவரையும் அல்லாஹ் என்றே அழைக்கிறார்கள். நோவாவை சாதிக் அல்லாஹ் என்றும் இயேசுவை கலாமத்துல்லாஹ் என்றும் கிறிஸ்துவை முகீமின் அல்லாஹ் என்றும் இவர்களில் பரிசுத்த ஆவியானவராகிய ருஹீமின் அல்லாஹ்வை அறியக் கூடாதவர் என்று நம்புகின்றனர். குர்ஆன் 17;85 இங்கே முஸ்லிம்கள் அல்லாஹ் என்று குறிப்பட்டுக் கூறுவது தேவ மக்களையே என்கிறார் ஜெபமணி.
(பக்கம் 39)
பதில் – 2
நாம் நமது வாழ் நாளிலேயே இது போன்ற மூடரைக் கண்டதே இல்லை. இந்த முட்டாள் தனத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்ககிறதே என்று வேதனையுடன் தான் ஜெபமணிக்குப் பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம்.
முஸ்லிம்கள் தேவனைத் தவிர வேறு எவரையும் அல்லாஹ் என்று ஒருக்காலும் கூற மாட்டார்கள் என்பது சாதாரண நிலையில் உள்ள மாற்று மதத்தவர்களுக்கும் தெரியும். அல்லாஹ் என்று மானிடரைக் கூறுவது ஒரு புறமிருக்கட்டும் அல்லாஹ்வின் பண்புகளைக் கூட அல்லாஹ்விற்கு இருப்பதைப் போல் மற்றவர்களுக்கு இருக்காது என்று உறுதியாக நம்புவதே இஸ்லாம். மானிடர்களில் சிறப்பானவர்களை அல்லாஹ் என்று கூறுகிறோமாம். ஜெபமணி கூறுகிறார்.
அவர் எடுத்துக் காட்டிய சில சொற்றொடர்களில் அல்லாஹ் என்ற வார்த்தை இணைந்துள்ளது அல்லவா? அதனால் அவர் மானிடர்களையே அல்லாஹ் என்று முஸ்லிம்கள் கூறுவதாகத் தெளிவடைந்திருக்கிறார்.
கலீலுல்லாஹ் என்று ஆப்ரஹாமைக் கூறுகிறோம். உண்மை தான். அரபு மொழியில் அமைந்த அந்த சொற்றொடருக்கு என்ன பொருள்?
அல்லாஹ்வின் நண்பர் என்று பொருள்.
அதாவது ஆப்ரஹாம் அல்லாஹ்வுக்கு நண்பராகத் திகழ்ந்தார் என்கிறோம். (அதாவது ஆப்ரஹாம் வேறு அல்லாஹ் வேறு) மோஸேயை கலீமுல்லாஹ் என்று நாம் சொல்வது உண்மையே. அதன் பொருள் அல்லாஹ்வுடன் உரையாடியவர் என்பதாகும்.
நோவாவை சாதிகுல்லாஹ் என்கிறோம்.
அல்லாஹ்விடம் உண்மையாளராக நடந்து கொண்டார் என்பது அதன் பொருள்.
இயேசுவை கலிமத்துல்லாஹ் என்றும் ரூஹீம் மினல்லாஹ் என்றும் நாம் கூறுவது உண்மையே.
அதன் பொருள் என்ன? அல்லாஹ்வின் வாக்கு அல்லாஹ் அருளிய ஆவி என்பது தானே முறையே அந்த சொற்றொடர்களின் பொருள்.
அரபு பொழி தெரிந்தவர்களிடம் இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று கேட்டு தெளிவடைய முடியாமல் இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார்.
ஜெபமணியை அதுவுல்லாஹ் என்போம். இதன் பொருள் அல்லாஹ்வின் எதிரி என்பது.
இவ்வாறு அவரிடம் நாம் கூறும் போது தன்னையும் முஸ்லிம்கள் அல்லாஹ் என்று கூறுகிறார்கள் என்று அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்வார் போலும். இந்த வார்த்தையிலும் அல்லாஹ் என்று இடம் பெற்றுள்ளதல்லவா?
இதை ஜெபமணிக்குப் புரியும் படியாக (அதாவது புரியக்கூடிய வகையில் அவருக்கு தலையில் சரக்கு இருக்குமானால்) தமிழ் இலக்கண விதியைக் கூறி விளக்கலாம்.
ஒருவனுக்கு சொந்தமான ஒரு பொருளை அல்லது அவனுடன் சம்மந்தப்பட்ட ஒரு பொருளைப் பற்றிக் கூறும் போது ஆறாம் வேற்றுமை உருபான அது என்ற உருபு பயன்படுத்தப்படும். அது அல்லது உடைய என்ற வார்த்தை வெளிப்டையாக வந்து ஒருவனுக்குரியதைச் சுட்டும். அவ்வுருபு சில வேளை வெளிப்படையாக வராமலும் இருக்கும்.
உதாரணமாக ஒரு நாய் இருக்கிறது என்றால் இது ஜெபமணியுடைய நாய் என்றும் ஜெபமணியது நாய் என்றும் கூறலாம். அதே மாதிரி ஜெபமணி நாய் என்றும் உருபு சேர்க்காமலும் கூறலாம்.
இது போன்ற அரபு பொழியில் கூறும் போது அதன் இலக்கன அமைப்புப்படி உருபு எதுவுமின்றி இரண்டு தனித்தனி வார்த்தைகள் இணையும் போது உருபு மறைந்து உரிமைப் பொருளை உணர்த்தி நிற்கும். இந்த இணைப்புக்கு அரபு இலக்கணம் இழாஃபத் என்று கூறும்.
இந்த இலக்கண விதியில் அமைந்த இணைப்புச் சொற்களே ஜெபமணி எடுத்துக் காட்டிய சொற்கள்.
ஆறாம் வேற்றுமையாகப் பயன்படுத்தப்பட்ட அந்த சொற்களிலிருந்து மானிடரில் சிறந்தவர்களை முஸ்லிம்கள் அல்லாஹ் என்று கூறுவதாக தெளிவடைந்துள்ள ஜெபமணியிடம் ஜெபமணி நாய் என்று கூறினால் தன்னைத் தான் நாய் என்று கூறுவதாக எடுத்துக் கொள்வார் போலும்.
இப்படியெல்லாம் உளறிவிட்டு குர்ஆனின் 17:85 வசனம் இங்கே முஸ்லிம்கள் அல்லாஹ் என்று குறிப்பிட்டுக் கூறுவது தேவ மக்களையே என்றும் முன்னர் சொன்ன பாராவை முடித்திருக்கிறார்.
குர்ஆனின் ஏதோ ஒரு எண்ணைக் குறிப்பிட்டவுடன் முஸ்லிம்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்பது தான் முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு இவர்களுக்கு அளிக்கப்பட்ட பால பாடம். அந்த வசனத்திற்கும் எடுத்து வைக்கும் வாதங்களுக்கும் சம்பந்தமிருக்க வேண்டுமென்பதில்லை. அந்த பால பாடத்தையே அட்சரம் பிசகாமல் அப்படியே நடைமுறைப்படுத்துகிறார் ஜெபமணி.
(அல்குர்ஆன்: 17:85) ➚வசனம் தேவ மக்களை அல்லாஹ் என்றெல்லாம் கூறவில்லை. தேவனுக்கு மக்களில்லை என்பதை அல்குர்ஆனின் பல வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன.
(ஜெபமணி போன்ற) வேதக்காரர் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து உயிர் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டனர். அவர்களுக்கு விளக்கமாகவே 17:85 வசனம் அருளப்பட்டது.
(நபியே) உம்மிடம் ரூஹைப் பற்றிக் கேட்கின்றனர் அது தனது இறைவனின் கட்டளையிலி ருந்தே உருவானது. நீங்கள் குறைந்த அளவே அறிவு கொடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறுவீராக.
இதுதான் 17:85 வசனம்
இதற்கும் மானிடரில் சிறந்தவரை அல்லாஹ் என்று கூறுவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இப்படிப்பட்ட மோசடிக்கார ஜெபமணி, அறியாமையை ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு தெளிவடைந்துள்ளதைக் காணுங்கள்