16) விமர்சனம் 18

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

இப்படி இருக்க இசுலாம் சகோதரத்துவம் ஜாதி பேதமற்ற மார்க்கத்தைக் கொண்டது என்று கூறுவது பண்பாட்டுக்கு ஒவ்வாது என்பது நம் கருத்து. தமிழக அரசு முஸ்லி ம்களில் 8ஜாதியரை ஞ்.ர்.ம்.ள்.ய்ர் 1564 30லி7லி85 ல் குறிப்பிடுகிறது ஆகவே தமிழகத்தில் முஸ் லிம்கள் மத்தியில் 8க்கும் அதிகமான ஜாதி பிரிவுகள் உண்டு என்பது தெளிவாகிறது. என்கிறார் ஜெபமணி

(பக்கம் 31)

ஒரு மதத்தை ஒரு கட்சியை விமர்சனம் செய்வது என்றால் அந்த மதத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டும். அந்த மதத்தின் அடிப்படை சட்ட நூல்களை விமர்சிக்க வேண்டும். அது தான் விமர்சனத்தின் இலக்கணமாகும். இஸ்லாம். கூறாததை சில இஸ்லாமியர்கள் தவறாகச் செய்து வருவதை எடுத்துக் காட்டி அதற்கு இஸ்லாத்தைப் பொறுப்பாளியாக்குவது மதியீனம் அல்லவா?

மனிதர்களே! உங்கள் அனைவரையும் ஒரே ஆண் ஒரே பெண்ணிடமிருந்து படைத்தோம். உங்களைப் பல்வேறு கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியிருப்பது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கு. இறைவனிடம் உங்களில் சிறந்தவர் இறைவனை அஞ்சி நடப்பவரே என்று அல்குர்ஆன் ஜாதிக்கு எதிராக சவுக்கடி தருகிறது.

ஜாதிக்கு எதிராக இஸ்லாம் எடுத்த கடும் நடவடிக்கையைப் போல் வேறு எந்த இஸங்களும் எடுத்திருக்க முடியாது. ஒரு சில முஸ்லிம்கள் முட்டாள்தனமாக தங்களை பிரித்துக் கொண்டு விட்டார்கள் என்றால் அதற்கு இஸ்லாம் எப்படிப் பொறுப்பாகும்?

திரவியராஜ் என்ற பாதிரியார் மருமகளைக் கற்பழித்துக் கொலையும் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளாரே? இதைக் காரணமாக வைத்து கிறித்துவ மார்க்கம் தான் இவ்வாறு போதித்தது என்று நாம் கூறினால் ஜெபமணி ஒப்புக் கொள்வாரா?

முஸ்லிம்களில் எட்டு ஜாதியினர் இருப்பதாக அரசாங்க கெஜட் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். அரசாங்க கெஜட் என்ன முஸ்லிம்களின் வேதப் புத்தகமா?தீர்க்கத்தரிசியின் உபதேசமா? அப்படி எட்டு ஜாதி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்குமானால் முட்டாள்தனமாகக் குறிப்பட்டுள்ளார்கள் என்று நாம் கூறுவோம்.

ஆயிரம் தான் ஜெபமணி புலம்பினாலும் கிறித்தவ நாடார் கிறித்துவ முதலியார் என்று கிறித்தவத்தில் இணைந்த பின்னரும் ஜாதியை ஒட்டி வைக்கிறார்கள். இஸ்லாத்தில் அப்படி எல்லாம் கிடையாது என்பதைப் புதிதாக இஸ்லாத்தில் இணைவோர் புரிந்து வைக்கிறார்கள். அனுபவப் பூர்வமாக அதை உணர்ந்தும் இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் முஸ்லிம்களுக்கும் ஒன்றை நினைவு படுத்துவது அவசியமாகிறது. அரசாங்கச் சலுகைகள் பெறுவதற்காக மரைக்காயர், லெப்பை, இராவுத்தர், தக்னி என்றெல்லாம் தங்களைத் தனி இனமாகக் காட்டி சலுகை பெறுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும். பொருளாதார ரீதியில் மாத்திரம் முஸ்லிம்களை ஏழை பணக்காரர் என்று பார்த்து சலுகை பெறுவதற்கு போராட வேண்டும். அரசாங்க கெஜட்டில் முஸ்லிம்களை லெப்பை தக்னி என்றெல்லாம் பிரிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

(அடிக்கோடிட்ட பாரா அன்றைய நிலையில் நாம் எழுதியது. அந்தக் கருத்தை நாம் பின்னர் தக்க காரணத்துடன் மாற்றிக் கொண்டோம்.)

ஜெபமணி போன்ற அறிவீனர்கள் இஸ்லாத்திலும் ஜாதி உண்டு என்று எண்ணுவதற்கு இடமளிக்கலாகாது. என்பதை நினைவூட்டுகிறோம். இந்த நினைவூட்டல் ஷாபி, ஹனபி என்று தங்களை தனி இனமாகக் ஆக்க முயற்சிப்பவர்களுக்கும் சேர்த்தே.

ஜாதி பற்றி பேச வந்துள்ள ஜெபமணியை இனி கவனிப்போம். இஸ்லாத்தை விமர்சிப்பது என்றால் அல்குர்ஆன் ஹதீஸ் இரண்டை மட்டும் விமர்சிக்க வேண்டும் என்ற அளவு கோல் படியே கிறித்துவத்தை நாம் விமர்சிக்கும் போது பைபிளையே விமர்சிப்போம்.

கிறித்தவர்கள் பல ஜாதிகளாக இருக்கிறார்கள் என்பதற்காக கிறித்தவம் ஜாதியை ஆதரிக்கிறது என்று ஜெபமணியை போல் நாம் விமர்சிக்க மாட்டோம்.

பைபிள் அதை ஆதரித்தால் மட்டுமே கிறித்தவத்தை பொறுப்பாளி ஆக்குவோம்.

கிறித்தவர்கள் ஒவ்வொரு ஜாதிக்கும் தனிக் கோவில், தனிக் கல்லறை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக கிறித்தவ மதத்தை இதற்குப் பொறுப்பாக்க மாட்டோம். பைபிளே அதை அனுமதிக்கின்றதா என்று பார்ப்போம்.

இந்த அளவுக்கோலின்படி பைபிள் ஜாதி பற்றி கூறுவதென்ன?

அன்னிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம். சகோதரனிடத்திலோ உனக்கு வர வேண்டியதை விட்டுவிடக் கடவது

(உபாகமம் 15:3 )

அன்னிய ஜாதியானிடம் ஒரு விதமாகவும் தனது ஜாதியானிடம் இன்னொரு விதமாகவும் நடக்கும் படி பைபிள் போதிக்கிறதா இல்லையா ? ஜாதியை வலி யுறுத்துகிறதா இல்லையா?

ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசிர்வதித்து கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல்…. என்கிறது பைபிள்

(ஆதியாகமம் 28:1 )

திருமணம் செய்வதற்கு ஈசாக்கு ஜாதி பார்த்ததாக கிருத்தவ மதமே ஒப்புக் கொள்கிறது.

அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரி ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்! என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்கு பிரதியுத்தமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அவர்களுடைய சீஷர்கள் வந்து இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர் காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே யன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவி வெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர் அவனை நோக்கி பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

(மத்தேயு 15:22 26 )

இஸ்ரவேல் அல்லாத இனத்தினரை நாய்கள் என்று தேவ குமாரன் வர்ணித்ததற்கும் வர்ணாசிரமத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

பைபிள் இஸ்ரவேலரைப் பிராமணர்களைப் போல் உயர்ந்த ஜாதியாகக் கூறுகிறது என்பதற்கு வேறு என்ன சான்று தேவை? உலக ரட்சகர் என்று இன்று அறிமுகப்படுத்தப்படும் ஏசு இஸ்ரவேல் ஜாதிக்கு மட்டுமே அனுப்பப்பட்டதாக வாக்கு மூலம் தருவதையும் ஜெபமணியார் கவனிக்க வேண்டும்.

இஸ்ரவேல் குடும்பத்தைச் சேராத ஜெபமணி கூட பைபிள் முடிவுப்படி நாய்களுக்குச் சமமானவரே! என்பதை அவர் உணர வேண்டும் இதே வார்த்தைகள் மாற்கு 7:27 லும் கூறப்படுகிறது.

இப்படி ஏராளமான வசனங்களை பைபிளில் காண முடியும். கிறித்தவர்களின் வேதம் எப்படி ஜாதியை வலியுறுத்துகின்றதோ அதே போல் முஸ் லிம்களுடைய வேதம் ஜாதியை வ லியுறுத்தினால் ஜெபமணி விமர்சனம் செய்யலாம். இஸ்லாத்தின் வேதம் ஜாதியை வேரறுக்கும் போது அதை விமர்சிப்பதில் நியாயம் என்ன இருக்கிறது?