11) விமர்சனம் 12
மேற்படி நூலுல் பக்கம் 32. 33லும் 36. 37 லும் 38. 39 லும் ஜெபமணியின் உளறல்கள் உச்சகட்டமான உளறல்களாக உள்ளன. அந்த இடங்களில் அவர் கூறுவதை அப்படியே தந்து விட்டு விரிவாக அவற்றை அலசுவோம்.
இசுலாத்தின் மதநூலான குர்ரானில் வர்காபின் முகம்மதுவுக்குப் போதித்த யூத கிறிஸ்துவ வேதத்திலிருந்து அறுபது சதிவீதமான வசனங்களையும் கத்தோலிக்க விக்கிரக வணக்கத்தாரிடமிருந்து இருபத்தைந்து சதவீதமான வசனங்களையும் மீதமானவைகள் முகமது பேசிய நிர்வகித்தவற்றிலிருந்தும் தொகுத்து குர்ரானை அமைத்துள்ளார் என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். ஆனால் முகமதுவுக்கு வானத்திலிருந்து குர்ரான் இறக்கப்பட்டது என்று மிகைப்படக் கூறி முஸ்லிம்களை ஏமாற்றுகின்றனர்.
வேதம் ஆவியால் மனித உள்ளத்தில் உணர்த்தப்பட்டு அவர்களின் அவர்களின் சுய மொழியில் எழுதப்பட்டதே. மேலே நாம் கூறியுள்ள படி குர்ரானில் கொள்கைகளையும் முகமதுவின் சரீர சுத்திகரித்தல் நம்பிக்கை தொழுகை விதிகள் முகமதுவின் சில ஆலோசனைகளும் நீங்கலாக மற்ற அனைத்தும் சத்திய வேதத்திலிருந்து நாசுக்காக எடுத்தெழுதப்பட்டுள்ளதை எழுத்தறிவும் கண்பார்வை உள்ளவர்களும் குர்ரானில் கண்டு கொள்ளக்கூடிய உண்மையாயிருக்கிறது. அதை இங்கே கொஞ்சம் ஆராய்வோம். யூத வேத புருடர்களைக் கொண்டு மேசே காலம் முதல் எழுதப்பட்ட வேதம் பகுதிகளிலிருந்து எடுத்து எழுதப்பட்ட குர்ரானில் ஆங்காங்கு சரித்திரக் குறிப்புகளை மட்டுமே காண்கிறோம். ஆனால் அதன் முழு அடிப்படையை ஆத்மீக விபரத்தை குர்ரானில் காண முடியவில்லை. குர்ரானில் காணப்படும் குறிப்புகளின் முழு விளக்கத்தை பைபிளில் தான் காண முடியும் என்கிறார் ஜெபமணி. (பக்கம் 31. 31)
வேத வசனங்கள் யாவும் தேவ ஆவியானவரால் தேவதாசர்கள் உள்ளத்தில் ஏவப்பட்டு அவர்கள் பேசும் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இச்செயலை முஸ்லிம்கள் முகமதுவுக்கு அரபு மொழியில் (பொட்டலம் கட்டி) வானிலிருந்து இறங்கியதாக அறிவுக்கு பொருத்தமற்று மிகைபடக் கூறுகிறார்கள். முகமதுவுக்கு முன் வேதத்தை வர்காபின் போதித்தார். ஆஜ்மி மொழியில் தான் கேட்டவற்றை தமது சகாக்களுக்கு முகமது அரபு மொழயியல் சொன்னார் என்பதே சரியான கருத்து. இதன் உண்மை விபரத்தை அறியாத முஸ்லிம்கள் (திருமண நாளில் மணமகனையும் சவக்கிடங்கண்டை செத்தவனையும் மிகைப்படப் புகழ்வது போல் புழுகி) குர்ஆனைக் குறித்தும் மிகைப்படவும் நம்புகின்றனர். அல்லது நம்பப் பண்ணுகின்றனர் என்பதே உண்மை. ஏனெனில் ஏனெனில் பைபிளில் இல்லாத புதிய காரியம் எந்த ஒன்றையும் முகமது முஸ்லிம்களுக்கு சொல்லிவிடவில்லை என்கிறார் ஜெபமணி (பக்கம் 38. 37)
கி பி 628 வரையிலும் முயன்றும் முகமதுவால் இசுலாத்தை ஒரு மதமாக்க முடியவில்லை. இசுலாத்தை மதமாக்கும்படி முகமது கிறித்துவ அஸ்திபாரங்களையே 60 சதவிகிதம் புகுத்தியுள்ளார்.
யூத சரித்திரமின்றி இசுலாத்தை ஒரு மதமாக மெருகூட்ட முடியாமல் யூத சரித்திர பாரம்பரியங்களையும் 30 சதவிகிதம் இசுலாத்தில் புகுத்தினார். மீதான விபரங்களை தம் சகாக்களின் கேள்விகளுக்குத் தந்த பதிலிலும் ஆட்சி நிர்வாகத்திற்காய் முகமதுவால் தரப்பட்ட ஆலோசனைகளுமாகக் சேர்த்துக் குர்ரான் அமைக்கப்பட்டது. கிபி 8ம் நூற்றாண்டில் இசுலாமிய ஆளுநர்களால் அரபு இலக்கியத்திற்கேற்ப குர்ரான் திருத்தி எழுதப்பட்டது என்பதே சரித்திரம் என்கிறார் ஜெபமணி (பக்கம் 38. 39)
நமது பதில்
இந்த மூன்று பாராக்களிலும் அவர் கூறக் கூடிய மையக் கருத்து குர்ஆன் பைபிளிலிருந்து எடுத்தெழுதப்பட்டது என்பதே. இதை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் நாம் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அந்த மையக் கருத்துக்குச் செல்வதற்கு முன்னால் இந்த மூன்று பாராக்களிலும் உள்ள முரண்பாடுகளையும் பொய்களையும் காண்போம்.
பைபிளிலிருந்து எழுதப்பட்டதே குர்ஆன் என்று வாதிடும் ஜெபமணி முகமதுவுக்கு வானத்திலிருந்து குர்ரான் இறக்கப்பட்டது என்று மிகைபடக் கூறி முஸ்லிம்கள் ஏமாற்றுகின்றனர். வேதம் தேவ ஆவியால் மனித உள்ளத்தில் உணர்த்தப்பட்டு அவர்கள் சுய மொழியில் எழுதப்பட்டதே என்றும் கூறுகிறார். அதாவது வானத்திலிருந்து குர்ரான் இறக்கப்பட்டதாகக் கூறுவது மிகைபடக் கூறலாம்.
மனித உள்ளத்தில் தேவனால் உணர்த்தப்பட்டதே வேதமாம். இதன் மூலம் வானத்திலி ருந்து இறக்கப்பட்டதைத் தான் மறுக்கிறார். தேவனால் முகமதுவின் உள்ளத்தில் உணர்த்தப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார். அவரது வாதப்படி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உள்ளத்தில் உணர்த்தப்பட்டதே குர்ரான் என்பதை ஒப்புக் கொண்டாலும் அவர் வாதமே பைபிளிலிருந்து எழுதப்பட்டது என்பது தானே. அவரது அந்த முந்தைய வாதத்தை மறுக்கின்றதே என்னே தெளிவு.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஹி வந்த துவக்க காலத்திலேயே வரக்கா இறந்து விட்டார் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம் . ஜெபமணியின் வாதத்தை ஏற்றுக் கொண்டு பார்த்தாலும் முகமதுவுக்கு உள்ளத்தில் உணர்த்தப்பட்டதே வேதம் என்ற முந்தைய கூற்றுடன் வரக்காவிடம் வேதத்தைக் கற்றார் என்ற இந்தக் கூற்றுக்கு முரண்படுகிறது.
பைபிளில் இல்லாத புதிய காரியம் எந்த ஒன்றையும் முகமது முஸ்லிம்களுக்குச் சொல்லிவிடவில்லை என்று ஒரு இடத்தில் கூறும் ஜெபமணி மற்றொரு இடத்தில் யூத கிறிஸ்துவர்களிடமிருந்து 60 சதவிகிதமானவற்றையும் கத்தோக்கரர்களிடமிருந்து இருபத்தைந்து சதிவீதத்ததையும் மீதியைப் புதிதாகவும் சேர்த்துச் சொன்னதாகக் குறிப்பிடுகிறார். இந்த சதிவீதம் கூட மற்றோர் இடத்தில் 90 சதவீதமாகப் போகின்றது.
இனி ஜெபமணியின் பிரதானமான குற்றச்சாட்டுக்கு வருவோம். பைபிளிலிருந்து குர்ஆன் எடுத்தெழுதப்பட்டதாக ஜெபமணி கூறுகிறார் அல்லவா? அவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் என்னவென்பதை முதலில் காண்போம்.
ஆதம், நூஹ், இப்றாகிம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், யூசுப், தாவூத், சுலைமான், ஜக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, ஹாரூன், ஈஸா, லூத் ஆகிய தீர்க்கதரிசிகளைப் பற்றி குர்ஆன் கூறுகிறது. இவர்களைப் பற்றி பைபிளும் கூறுகிறது. குர்ஆனை விட பைபிள் முந்தியது என்பதால் பைபிளிலிருந்து எடுத்தெழுதப்பட்டது குர்ஆன் என அவர் புரிந்திருப்பதாலேயே இவ்வாறு கூறுகிறார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியயாம் இருப்பது போல் சிலருக்குத் தோன்றலாம்.
ஆனால் சிந்தனையுடையோர் இந்த வாதத்தில் எந்த சாரமும் இல்லை என்பதை உணரலாம்.
இறைக் கோட்பாடு சட்ட திட்டங்கள் கொள்கைகள் வழிகாட்டும் நெறிகள் ஏவல்கள் விலக்கல்கள் வணக்கமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையிலே மதங்கள் வேறுபடுகின்றன. இவை தான் மதங்களுக்கு அஸ்திவாரங்கள்.
மேலே கூறப்பட்ட யாவற்றிலுமே கிறிஸ்துவத்திலிருந்தும் யூத மதத்தி லிருந்தும் இஸ்லாம் நூற்றுக்கு நூறு வேறுபட்டு இருக்கின்றது. மாறுபட்டு நின்று கிறிஸ்துவக் கோட்பாட்டை ஆணித்தரமாகவும் மறுக்கின்றது. கிறிஸ்துவ அஸ்திபாரங்களையே 60 சதவிகிதம் புகுத்துள்ளார் முகம்மது என்ற ஜெபமணியின் கூற்று சரிதானா என்று அவரே சிந்திக்கட்டும்.
மனிதன் பாவியாகப் பிறக்கிறான் அவனது பாவத்தைச் சுமப்பதற்காக சிலுவையில் ஏசு தன்னைப் பலி கொடுத்தார் என்ற கிறிஸ்துவ அஸ்திவாரமும் மனிதன் நல்லவனாகவே பிறக்கின்றான் ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது என்ற குர்ஆனின் கோட்பாடும் ஒன்றா?
ஆதாமும், ஏவாளும் செய்த தவறுகளினால் அவரது சந்ததிகளும் பாவிகளே என்று கூறக் கூடிய கிறிஸ்துவக் கோட்பாடும் தந்தையின் பாவத்தை மகன் சுமக்க மாட்டார் என்ற குர்ஆனின் கோட்பாடும் ஒன்றா?.
கடவுளுக்கு ஒரு மகன் உண்டு. அந்த மகனுக்கு தாய் உண்டு என்ற கிறிஸ்துவ கோட்பாடும் கடவுளுக்கு மனைவி மக்கள் இல்லை என்ற குர்ஆனின் கோட்பாடும் ஒன்றா?
ஏசு தான் மறுமையில் அனைவரையும் காப்பாற்றுவார் என்ற கிறிஸ்துவக் கோட்பாடும் இயேசுவையும் இறைவன் விசாரிப்பான் என்று கூறக்கூடிய குர்ஆனின் கோட்பாடும் ஒன்றா?
இப்படி ஆயிரமாயிரம் அடிப்படைக் கோட்பாடுகளில் கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையே வேறுபாடுகள் உள்ளன. இவரோ கிறிஸ்துவ அஸ்திபாரங்களிலிருந்து தான் குர்ஆன் எழுதப்பட்டது என்கிறார்.
அப்படியானால் பைபிளில் கூறப்படும் தீர்க்கதரிசிகளைப் பற்றி இஸ்லாமும் கூறுகிறதே என்ற கேள்விக்கு என்ன பதில்?
அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி பைபளும் குர்ஆனும் கூறுவது உண்மையே. ஆனால் பைபிள் கூறுவதற்கும் குர்ஆன் கூறுவதற்குமிடையே பல வித்தியாசங்கள் உள்ளன. பைபிள் அவர்கள் பற்றிக் கூறப்படும் பல விஷயங்களை குர்ஆன் பொய் எனக் கூறுகிறது. (விபரம் கீழே வருகிறது)
பைபிள் அவர்களின் பிறப்பு இறப்பு மற்றும் (சரித்திரம் என்ற பெயரில்) அங்கே போனார்; இங்கே போனார்; அவரைச் சந்தித்தார்; இவரைச் சந்தித்தார்; அவர்களுடன் சல்லாபித்தார்; இவர்களுடன் சல்லாபித்தார்; இவனைக் கொன்றார்: கூழ் சாப்பிட்டார்; கறி சாப்பிட்டார் என்று வளவளவென்று பேசும்.
குர்ஆன் எவரைப் பற்றியும் இப்படியெல்லாம் சொல்வது இல்லை. ஏனெனில் அவர்கள் கூழ் சாப்பிட்டதாலோ அல்லது கறி சாப்பிட்டதாலோ யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அதில் எந்தப் போதனையும் இல்லை.
உண்மையை அதாவது ஓரிரைக் கொள்கையை அவர்கள் எடுத்துச் சொன்ன போது அந்தத் தீர்க்கதரிசிகள் பட்ட கஷ்டம், அதைத் தாங்கிக் கொண்டு துணிந்து அவர்கள் நடத்திய போராட்டம், அவர்களது போதனை ஆகியவற்றை மட்டும் குர்ஆன் கூறும்.
இவ்வாறு அவர்களிடம் கூறிவிட்டு படிப்பினை உள்ளது என்றும் சேர்த்துக் கூறுகிறது குர்ஆன். இவற்றைக் கூறுவதால் கொள்கையில் மக்கள் உறுதியடைய முடியும். துணிவு ஏற்படும். தெளிவு ஏற்படும். காலையில் வெள்ளைச் சட்டை போட்டார்; கறுப்புச் சட்டை போட்டார் என்றும், ஜெபமணிக்கு ஆரோக்கிய சாமி பிறந்தார் என்றும் இப்படியே நூறு பட்டியல் போடுவதால் யாருக்கு என்ன நன்மை?
பைபிள் இதைத் தானே சொல்கிறது? இதைத் தான் கூடுதல் விபரமென்கிறார் ஜெபமணி. இந்தக் கூடுதல் விபரங்களால் யாருக்கு என்ன நன்மை? என்ன படிப்பினை? மனிதனுக்கு வழிகாட்ட அருளப்பட்ட குர்ஆனில் இதையெல்லாம் ஜெபமணி எதிர்பார்க்கிறார்.
அவருக்கு கதை வேண்டுமானால் சாண்டில்யன் நாவலையோ அல்லது பைபிளையோ படித்துக் கொள்ள வேண்டுமேயன்றி உண்மையான வேதத்தில் கதைகளை எதிர்பார்த்தால் ..?
கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிக் கூறுவதைக் காப்பியடிப்பது என்று எந்த அறிவாளியும் கூற மாட்டான்.
நியூட்டனைப் பற்றியோ, புத்தரைப் பற்றியோ, பவுலைப் பற்றியோ, ஐன்ஸ்டினைப் பற்றியோ, கார்ல் மார்க்ஸ் பற்றியோ ஜெபமணி எதையாவது எழுதினால் பேசினால் அவர் முன்னுள்ளவர்களிடமிருந்து காப்பியடித்தார் என்று சொல்ல முடியுமா? முன்னால் யாரேனும் இவர்களைப் பற்றி எழுதி விட்டால் அதை எழுதும் உரிமை யாருக்கும் இல்லை என்பாரா ஜெபமணி?
அல்லது கார்ல் மார்க்ஸ் பற்றி பலர் எழுதி விட்டதால் காப்பி அடிக்கக் கூடாது என்பதற்காக காரல் மார்க்ஸ் என்பதை கூறல் மூக்ஸ் என்று கூற வேண்டுமென்கிறாரா ஜெபமணி?
அப்படியானால் பைபிளில் கிறிஸ்துவ மார்க்கத்திற்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, ஆப்ரஹாம் பற்றிக் கூறப்படுவதும் காப்பியடித்தல் என்கிறாரா?
கடந்த கால சரித்திரங்ளைப் பொருத்தவரை காப்பியடித்தல் என்பது எப்போது வரும்?யாரேனும் எழுதியதை வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மற்றவர் எழுதி அதைத் தன்னுடையது என்று கூறினால் அதைக் காப்பி எனலாம்.
பைபிள் கூறுவது போல் குர்ஆன் கூறவில்லை. அதற்குக் மாற்றமாகக் கூறுகிறது என்றால் அது எப்படி காப்பியடித்தலாகும்? சிந்திப்பாரா ஜெபமணி?.
உதாரணமாக இந்திரா காந்தியைப் பற்றி ஒருவர் எழுதிய நூலில் அவரை நேர்மையாளர் என்று எழுதப்பட்டதாக வைத்துக் கொள்வோம். அதற்குப் பின் மற்றொருவர் எழுதிய நூலில் இந்திராவை நேர்மையற்றவர் என்று எழுதியாக வைத்துக் கொள்வோம்.
பின்னவர் முன்னவரிடமிருந்து காப்பியடித்தாகக் கூற முடியுமா? கூறுபவன் புத்திசாலியாக இருக்க முடியுமா? இந்திராவைப் பற்றி இரண்டு விமர்சனங்களுக்கும் எவ்வளவு வித்தியாசங்களோ அவ்வளவு வித்தியாசம் குர்ஆன் கூறுவதற்கும் பைபிள் கூறுவதற்கும் இடையே உள்ளன.
ஆதம் பெண்ணால் தான் கெட்டார் என்று கூறி ஆண் வர்க்கத்தைப் பரிசுத்தப்படுத்த முயல்கிறது பைபிள். இருவரும் சேர்ந்தே அந்தத் தவறைச் செய்தார்கள் என்று இருவரையும் சமநிலையில் நிறுத்துகிறது குர்ஆன்.
ஏவாளை தவறிழைக்கச் செய்தது நல்ல பாம்பு என்கிறது பைபிள். பகுத்தறிவு இல்லாத பாம்பு பல்லி எல்லாம் பகுத்தறிவுள்ள மனிதனைக் கெடுக்க முடியாது என்பதால் ஆதாம் ஏவாள் இருவரையுமே பாவத்திற்கு பொறுப்பாளியாக்குகிறது குர்ஆன்.
ஆதாமும், ஏவாளும் செய்த பாவத்திற்கு மன்னிப்பு இல்லை. எல்லாப் பாவங்களையும் ஏசு சுமந்து கொள்கிறார் என்கிறது பைபிள். அவ்விருவரும் செய்த தவறை அவர்கள் உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாகவும் அதன் பின் இறைவன் அவர்களை மன்னித்ததாகவும் குர்ஆன் கூறுகிறது.
மூஸா (அலை) அவர்களைப் பற்றி பைபிள் கூறும் போது மேலும் கர்த்தர் அவனை நோக்கி உன் கையை உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையை தன் மடியிலே போட்டு வெளியே எடுக்கும் போது இதோ அவன் கை உறைந்த மழையைப் போல் வெண் குஷ்டம் பிடித்திருந்தது.
(யாத்திராகமம் 4:6)
ஆனால் திருக்குர்ஆனோ பளீரென அவரது கை பிரகாசித்ததாகக் கூறுகிறது. அதாவது திருக்குர்ஆன் அதை ஓர் அற்புதமாக சொல்லிக் காட்டுகிறது. பைபிளோ அசிங்கமான நோய் என்கிறது.
பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே குர்ஆன் என்று ஜெபமணயின் கூற்று பொய் என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?
சுலைமான் நபியின் பிறப்பு பற்றி பைபிள் கூறுவது என்ன தெரியுமா? ஈசாய், தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமனைப் பெற்றான் என்கிறது பைபிள்
(மத்தேயு 1:6)
அதாவது உரியா என்பவனின் மனைவியுடன் கூடி தாவீது ராஜா சாலமனைப் பெற்றான் என்று கூறுவதன் மூலம் சாலமனை விபச்சாரப் புத்திரன் என்கிறது பைபிள்; அது மட்டுமன்றி தாவீது விபச்சாரம் செய்தார் என்பதையும் கூறுகிறது இதையே மற்றோர் இடத்தில் பைபிள் கூறும் போது
உரியா என்பவனின் மனைவி குளித்துக் கொண்டிருந்த போது தாவீது அவளைப் பார்த்து ஆசை கொண்டு அவளை அழைத்து வரச் செய்து அவளுடன் கூடியதாகவும் அதன் மூலம் அவள் கருவுற்றதாகவும் அதன் பின் உரியாவை தாவீது கொலை செய்ததாகவும் 11 சாமுவேல் பதினொன்றாவது அதிகாரம் 2 முதல் 15 வரையிலும் பைபிள் கூறுகிறது.
ஆனால் திருக்குர்ஆனோ தாவூது (அலை) அவர்களையும், சுலைமான் (அலை) அவர்களையும் இறைவனின் தூதர்களாகவும் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியான சிறந்த வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் கூறுகிறது.
ஒரினப் புணர்ச்சியைக் கண்டித்து சீர்திருத்துவதற்காகவே இறைவனால் அனுப்பப்பட்ட லூத் நபி பற்றி பைபிள் கூறுவதைக் கேளுங்கள்.
பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோட கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். அப்போது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர் வயதானார். பூமியெங்கும் நடக்கிற முறையின் படியே நம்மோட சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும் படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுப்போம். அவரோடு சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள் . மூத்தவள் போய் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்ததையும் அவன் உணராதிருந்தான்.
மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பர்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்துள்ளார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய் அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாரேயே காப்பவதியானார்கள் இப்படிக் கூறுகிறது பைபிள்
(பார்க்க ஆதியாகமம் 19:30 – 38)
இதையெல்லாம் குர்ஆன் கூறவில்லை தான். குர்ஆனில் சுருக்கமாகக் கூறப்பட்டதற்கு பைபிளில் தான் விளக்கம் காண முடியும் என்று ஜெபமணி கூறுகிறார். இது தான் மேலதிகமான விளக்கம் போலும். ஒரு சீர்திருத்தவாதி தீர்க்கதரிசி மதுபானம் அருந்தியதாகவும் பெற்ற மகளுடன் புணர்ந்ததாகவும். கூறுவது தான் வேதமா?
ஆதியாகமம் 9:21ல் நூஹ் நபி பற்றிக் கூறும் பைபிள் அவர் குடித்து விட்டு போதை தலைக் கேறி நிர்வாணமாக கிடந்ததாகக் கூறுகிறது. திருக்குர்ஆன் நூஹ் நபி பற்றி ஒழுக்கத்தின் உறைவிடமாகக் கூறுகிறது. பைபிளிலிருந்து குர்ஆன் எப்படி காப்பியடிக்கப்பட்டிருக்கும்? பதில் சொல்வாரா ஜெபமணி?
அல்லாஹ்வைப் பற்றி கர்த்தரைப் பற்றிக் கூட பைபிள் கூறும் போது கடவுள் அம்மனமாக நடப்பேன் என்று கூறியதாகக் கூறுகிறது. (மீகா 1:8) குர்ஆன் இறைவனை இப்படியெல்லாம் அறிமுகம் செய்யவில்லை.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
பல நபிமார்களை குடிகாரர்களாகவும், விபச்சாரம் செய்தவர்களாகவும், பெற்ற மகள்களுடன் புணர்ந்தவர்களாகவும் வேட்;டியை அவிழத்துவிட்டு நிர்வாணமாகக் கிடந்தவர்களாகவும் பைபிள் கூறுகிறது. வழிகாட்ட வந்தவர்களே இப்படி நடந்திருக்கும் போது நாம் நடந்தால் தவறா என்ற சிந்தனையைத் தான் இது உருவாக்கும்.
குர்ஆன் இப்படியெல்லாம் கூறாமல் இருப்பதை ஜெபமணி குறை என்கிறார். காப்பியடிக்கப்பட்டது என்கிறார். ஜெபமணி இது போன்ற போக்கைக் கைவிடவில்லை என்றால் பைபிளில் இடம் பெற்ற எழுதக் கூசும் அசிங்கங்கள் அம்பலமாவதைத் தவிர வேறு வழியில்லை.
பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று ஜெபமணி கூறுவதற்கு அவர் மதத்தைச் சேர்ந்த அவரை விடவும் அறிவிலும் கல்வியிலும் மிகப் பெரியவர்களே பதிலளித்துள்ளனர். காய்த்தல் உவத்தலின்றி அவற்றையாவது ஜெபமணி படித்தால் உண்மையை உணர்வார்.
ஆல்பிரட் குல்யாயும் என்ற கிறஸ்துவ மதத்தைச் சேர்ந்த அறிஞரால் எழுதப்பட்டு பெங்குவின் புத்தக நிறுவனம் வெளியிட்ட இஸ்லாம் என்ற ஆங்கில நூ லில்
தற்போது நம்மிடம் இருக்கின்ற குர்ஆன் மேற்சொன்ன நிலை அல்லது நிலைகளில் இருந்த முகமது மொழிந்தவைகளின் தொகுப்பாகும். அவர் மொழிவதைக் கேட்டவர்கள் வெளிப்பாட்டின் அறிகுறிகளை உணர்ந்தனர் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும். அப்படி இல்லாவிட்டால் அவர் சாதரணமாக பேசிய பரம்பரை நடை குர்ஆனிலுள்ள மொழி நடைகளோடு நிச்சயம் சேர்ந்திருக்கும் (பக்கம் 56)
இஸ்லாமின் முடிவான அற்புதம் குர்ஆனாகும். முகம்மது இறைவனின் தூதர் என்பதற்கான இறுதி அத்தாட்சி இது. அதைப் பெற்றவர் கற்றறியாதவராயிருந்தும் அதன் அரேபிய மொழி நடை சிறந்து விளங்குவது அது கடவுளிடமிருந்து வந்தது என்பதைக் கூட்டக் கூடும். வைதீக நம்பிக்கையின் படி இதன் இலக்கிய நடை இதன் பொருளுடன் இணைந்துள்ளதாகும். எவ்வளவு கவனமாகச் செயல்பட்டாலும் எவ்வளவு வெற்றிகரமாகப் பொருளைப் பாதுகாப்பதாக இருந்தாலும் மொழி பெயர்ப்பானது குர்ஆனின் இலக்கிய நடையை மாற்றுவதால் இந்த நூற்றாண்டின் இடைக்காலம் வரையும் குர்ஆனை மொழி பெயர்ப்பது விரும்பத்தகாததாகவும் இயலாததாகவும் கொள்ளப்பட்டது.
இப்படிச் சொல்வது யார்? முஸ்லிம்களிடம் எப்படி கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக கென்னத் கிரேக் என்பவர் ஆங்கிலத்தில் ற்ட்ங் ச்ஹண்ற்ட் ர்ச் ண்ள்ப்ஹம் என்ற நூலை எழுதினார். அதை இஸ்லாமிய நம்பிக்கைகள் என்று மொழியாக்கம் செய்து நாகர்கோவில் கிறிஸ்துவ இறையியல் குழு எனும் அமைப்பு 1971ம் ஆண்டில் வெளியிட்டது. இந்நூலின் 75 76ம் பக்கம் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு ஏலீ ஏலீ லமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டு கூறினார் அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்
(மாத்தேயு 27:46)
ஒன்பதாம் மணி நேரத்திலே இயேசு எலோயீ எலோயீ லாமா சபக்தானி என்று மிகுந்து சப்தமிட்டுக் கூறினார். அற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
(மாற்கு 15:34)
ஆதாம் செய்த பாவத்தால் உலகின் மனித இனத்தின் மீது படிந்த பாவக்கறையைத் தன் இரக்கத்தால் போக்குவதற்காக கர்த்தரின் சித்தத்தால் நிச்சயிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர் உலக மக்களின் பாவங்களைப் போக்க சிலுவையில் பலியானவர் ஏன் கர்த்தரை நோக்கி என்னை ஏன் கை விட்டீர் என்று கதற வேண்டும்?
நாட்டுச் சுதந்திரத்துக்காக போராடிய கட்டப் பொம்மன், பகத்சிங் போன்றோர் கூட தூக்குத் தண்டனையைக் கண்டு அஞ்சவில்லை. சமீபகால சரித்திரமான விடுதலைப் புலிகள் கூட சயனைட் சாப்பிட்டு இறப்பதற்குத் தயங்கவில்லை. காலிஸ்தான் இயக்கத்திற்காக தூக்குத் தண்டனையைப் பெற்றவர்கள் கூட சாவதற்குத் தயங்கவில்லை. மகிழ்ச்சியுடன் மரணத்தை ஏற்பதாகக் கூறினார்கள். சாதாரண விடுதலை இயக்கத்திற்கு இல்லாத தயக்கமும் பயமும் மனித இனத்தின் மீட்பரான இயேசுவுக்கு வந்ததென்ன?
ஐயா ஜெபமணியாரே! மனித இனத்தின் பாவ மீட்புக்கு இயேசு பலியானதாக நம்புகிறீரே! அவர் தானாகப் போய் பிலாத்துவிடம் அகப்பட்டுக் கொண்டு மனித இன பாவ மீட்புக்கு என்னைப் பலி கொடுக்கிறேன் என்றா சொன்னார்? இல்லையே! மாறாக தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தானே முயன்றார். அப்படித் தானே பைபிள் கூறுகிறது.
குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதுமில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதுமில்லை
(எசேக்கியேல் 18;20)
என்று கர்த்தர் சொல்லியிருக்க மனிதகுல பாவத்தைச் சுமக்க ஏன் வர வேண்டும்?
பிதாக்கள் செய்த அக்கிரமத்தை பிள்ளைகளிடமிருந்தும் பிள்ளைகளுடைய பிள்ளையிலிருந்தும் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர்
(உபாகமம் 5:9 யாத்ராகமம் 34:7)
என்று கர்த்தர் சொன்னதற்கு மாற்றமாக அனைவரது பாவத்தையும் சுமக்க ஏசு ஏன் வந்தார்? எல்லோருடைய பாவத்தையும் இயேசு சுமந்து கொண்டால் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்க முடியாமல் போகுமே? இது கர்த்தரின் சித்தத்துக்கே இடையூறல்லவா?
நரகத்தைப் பற்றி ஏசு பயமுறுத்துகிறாரே? அனைவருடைய பாவங்களையும் ஏசு சுமந்து விட்டால் நரகத்திற்குப் போகக் கூடியவர்கள் யார்? நரகம் காலியாகவே கிடக்க வேண்டியது தானா?
ஒரு வேளை தன்னுடைய சிலுவைப் பலியை நம்பியவர்களை மட்டும் அவர் ரட்சிப்பார் என்றால் இயேசு பிறப்பதற்கு முன்னுள்ளவர்களின் பாவத்தின் கதி என்ன?
அப்பாவமும் நீங்கி விட்டது என்று சொன்னால் இயேசுவின் சிலுவை மரணத்தை நம்பாமலும் பாவம் நீங்கி விடுகிறது என்று ஆகின்றதே?
அப்படியில்லை என்று கூறினால் பாவம் செய்த பிறகு தானே தண்டனை? இயேசுவின் காலத்தில் பிறக்காதவர்களின் பாவத்தை எப்படி ஏசு சுமப்பார்? ஒரே குழப்பமாக இறக்கிறதா? சிலுவை தத்துவமே குழப்பம் தான்.
பாவத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டிய மனிதன் தன் பாவத்தைச் சுமக்க இரத்தம் சிந்திய ஒருவர் இருப்பதாக அறியும் போது துணிந்து பாவம் செய்வானே? பின் உலகில் பாவம் எப்படிக் குறையும்?
ஜபமணியாரே பதில் சொல்லுவீரா? இந்த பைபிளிலிருந்தா குர்ஆன் காப்பியடிக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள்.
பக்கம் 18 ல்
போதித்தவனையே தெய்வமாகக் கருதி அவனையே வணக்கத்திற்குரியவனாக்கிக் கொண்டனர் என்கிறார்.
இறைவனைப் போதிக்குமாறு வந்த இயேசுவை இறைவனாக்கிக் கொண்ட ஜெபமணியாரே நீர் எழுதியதை நீரே சிந்தியும்.
சிரிப்பதற்கு எதுவும் வேண்டுமல்லவா? அதையும் பைபிள் தரத் தவறவில்லை.
அவன் காணிக்கையாவது போஜனப் பலியாகப் படைக்கும் பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய நாவினால் நிறைந்ததும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று நுப்பது சேக்கல் நிறை உள்ளதுமான ஒரு வெள்ளித் தளமும் எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கலமும் ஆகிய இவ்விரண்டும் தூப வர்க்கம் நிறைந்த பத்து சேர் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூப கரண்டியும் சர்வாங்க தகன பலியாக ஒரு காளையும் ஒரு ஆட்டுக் கடாவும் ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும் பாவ நிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும் சமதானப் பலியாக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும் ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும் ஒரு வயதான ஐந்து ஆட்டிக் குட்டிகளுமே
(எண்ணாகமம் 7)
இப்படியே பட்டியல் நீளுகிறது. இப்படியெல்லாம் அமைந்துள்ள பைபிளிலிருந்துதான் குர்ஆன் காப்பியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார் ஜெபமணி.
பைபிளைப் பற்றி ஆராய்ந்த மேலை நாட்டு கிறித்தவ அறிஞர்கள் கூறுவதென்ன? அதையும் ஜெபமணிக்கு நினைவூட்டுவோம்.
பைபிளின் பெயருக்கு கடவுளின் வார்த்தை என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவது நமக்கு நன்கு பழக்கப்பட்ட ஒன்று. அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் கடவுள் நேரடியாக ஏவியதாக பழைய காலத்திலும் தற்காலத்தில் சில பகுதிகளிலும் நம்பப்படுகின்றது. ஆனால் புத்தகத்தின் திறனாய்வும் தற்கால ஆய்வும் மேற்கண்ட கருத்துகளை தற்கால அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள இயலாததாக ஆக்கி விட்டன. ஒரு சில பழமையாளர்களைத் தவிர யூதக் கிறித்தவ அறிஞர்கள் தங்களின் புனித புத்தகத்தில் மனிதனுடையவும் அதே போன்று புனித சக்தியுடையவும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதை ஏற்றுக் கொண்டனர்.
(இது ஆல்பிரட் குல்யாயும் என்ற கிருத்துவ அறிஞர் ஆங்கிலத்தில் எழுதிய இஸ்லாம் என்ற நூ லில் பக்கம் 55ல் இடம் பெற்றுள்ளது)
மனிதக் கற்பனைகள் கலந்து கதைகளாக்கப்பட்டு விட்ட பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவதற்கு ஜெபமணி வெட்கப்பட வேண்டாமா?
புத்தகம் நீண்டு விடக் கூடாது என்பதனாலேயே இதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையென்றால் பைபிள் விமர்சனத்திற்கு பல நூல்கள் எழுதும் அளவுக்கு சரக்குகள் உள்ளன.