விமர்சனம் -1

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

சத்தியத்தை உண்மைப்படுத்தி வருவதாக சொல்லி க் கொள்ளும் மதம் ஒன்று அரபு நாட்டில் முகமது என்பவரால் உண்டாக்கப்பட்டது. இம்மதம் குறித்தே நாம் தெளிவடையப் போகிறோம் என்கிறார் ஜெபமணி (பக்கம் 22)
பதில் -1

இஸ்லாத்தைப் பற்றி எவர் வேண்டுமானாலும் விமர்சிப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. அனைத்துக்கும் இஸ்லாம் சரியான பதிலைத் தர தயாராகவே இருக்கிறது. எனினும் ஒரு மதம் குறித்து தெளிவடையப் போவதாகச் சொல்லும் ஜெபமணிக்கு நிச்சயமா அந்த அறிவுத் தகுதி அறவே இல்லை. ஏனெனில் ஒரு மதம் குறித்து தெளிவடைவது என்றால் அம்மதத்தைப் பற்றி அதன் கொள்கைகள் கோட்பாடுகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜெபமணி ஒரு ஞான சூன்யம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

முகமது (ஸல்) அவர்கள் ஒரு மதத்தைப் புதியதாக உருவாக்கவில்லை. அப்படி அவர்களும் சொல்லவில்லை. அவர்கலைப் பின்பற்றுபவரும் சொல்லவில்லை . இஸ்லாத்தின் ஸ்தாபகர் என்று முஹம்மது நபி தம்மைப் பற்றி பறை சாற்றவில்லை . முதல் மனிதர் ஆதம் ஜெபமணி பாஷையில் ஆதாம் தோன்றிய போது இஸ்லாமும் தோன்றி விட்டது. வணக்கத்திற்குரியவன் ஏக இறைவனை மட்டும் ஏற்று மற்ற அனைவரும் அவனது அடிமைகள் என நம்புவது தான் இஸ்லாம்

ஆதாம் முதல் ஆப்ரஹாம், மோஸே, ஈஸாக், இயேசு என்றெல்லாம் ஜெபமனியால் கூறப்படும் அனைவரும் இந்தக் கொள்கையைத் தான் போதித்தார்கள். தங்களை வணங்குமாறு அவர்கள் போதிக்கவில்லை. அவர்களையே வணக்கத்துக்குரியவர்களாக கடவுளின் குமாரர்களாக மக்கள் நம்பியதைத் தான் முஹம்மது (ஸல்) கண்டித்தார்கள். ஆதாமும், நோவாவும், ஆப்ரஹாமும், ஏசுவும் எதைச் சொன்னார்களோ அந்தக் கொள்கையைத் தான் முஹம்மது நபியும் சொன்னார்கள்.

முஹம்மது புதிய மதமொன்றை உருவாக்கினார் என்று கூறுவதே இஸ்லாம் பற்றி ஜெபமணிக்கு எதுவும் தெரியாது என்பதற்குச் சான்று.

இஸ்லாம் பற்றித் தெளிவடையப் போகிறோம் என்று கூறும் இவரது அறிவு தீட்சண்யத்தை அறிந்திட அவர் கையாண்டுள்ள சில வாசகங்களும் துணை செய்கின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆரம்பத்தில் நபித்துவ அடையாளத்தைப் பற்றி பேசிய வரக்கா பின் நவ்பல் என்பாரின் பெயரை இவர் தனது நூல் நெடுகிலும் பயன்படுத்தியுள்ள விதம் நகைப்பிற்கிடமானது.

வரக்கா என்பது அவரது பெயர். ஆனால் ஜெமணியோ அவரது பெயர் வரக்காபின் (வரக்கா மகன்) என்று புரிந்து கொன்டு தனது நூல் நெடுகிலும் வர்காபினை ,வர்காபினிடம், வர்காபினுக்கு என்றெல்லாம் எழுதுகிறார்.

இதே போல் அவர் எழுதிய சில சொற்கள் குர்ரான் அவ்லியாக்கள் மெஸிக் காபா ருஹ்மின் கொர்பான் நிஜ்ஜாத் இப்படிப் பல.

தமிழகத்தில் பிரபலமான முஸ்லிம் பெயர்களைக் கூட இவர் அறிந்து வைத்திருக்கவில்லை. ஸமாது (அப்துஸ் ஸமதைச் சொல்கிறாராம்) உலாமா என்றெல்லாம் எழுதுகிறார்.

இஸ்லாம் பற்றி தெளிவடையப் போகிறவரின் தரம் இந்த லட்சணத்தில் இருக்கிறது. இவர் பயன்படுத்திய பல வார்த்தைகள் முஸ்லிம்களுக்கும் புரியாது கிறிஸ்தவர்களுக்கும் புரியாது. இவர் தான் வரைபடத்துடன் முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்யும் முறையைக் கற்றுத் தருபவராம்.

இன்னும் கேளுங்கள்.