வாருங்கள் பரக்கத்தைப் பெறுவோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
முன்னுரை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அல்லாஹ் யாருக்காவது அதிகமான செல்வத்தை வழங்கி விட்டால் அவனுக்கு பரகத் கிடைத்துவிட்டது என்று நம்மில் அதிகமானவர்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்; அதிகமான செல்வத்தை வழங்கினால் அது பரகத்தாக ஆகிவிடாது. பரகத் என்றால் ஒரு குறிப்பிட்ட பொருளில் அதை விட அதிகமாக பலனைப் பொருவது தான் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் ஆகும்.

உதாரணமாக நாம் ஒரு மாதத்திற்கு 5000 ருபா சம்பாதிக்கிறோம் என்றால் அந்த பணத்தை வைத்து அதைவிட அதிகமான சம்பாதித்தால் அதை வைத்து என்ன வேளை செய்வோமோ அந்த வேளைகளை இந்த 5000 ருபாவை வைத்து செய்வோம்.

நாம் சிலரைப்பார்க்களாம் அவர்கள் குறைந்த அளவில் தான் சம்பாதிப்பார்கள் ஆனால் அதை வைத்து நிம்மதியாக உண்ணுவார்கள் நிம்மதியாகப் பருகுவார்கள் தங்களுடைய குழந்தைகளை நல்ல முறையில் படிக்கவும் வைப்பார்கள் எந்த கடன் தொல்லைகளும் இல்லாமல் நிம்மதியாகவும் வாழ்வார்கள். இது தான் அல்லாஹ்வின் மறைமுகமான அருள்.

இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்கள் பல ஆயிரம்கள் சம்பாதிப்பார்கள் ஆனால் அவர்களுடைய வாழ்கையில் நிம்மதியைக்காண முடியாது.கடன் தொல்லைகளும் இருந்து கொண்டே இருக்கும்.இதற்கு காரணம் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் இல்லாதது தான்.

இவ்வாறு பரக்கத்தை குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் காட்டிய வழிமுறைகளில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்.

பரகத்தின் பலன் என்ன?

நம்முடைய பொருளாதாரத்தில் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் கிடைக்கும் என்று நம்பினோம் என்றால் இன்று நடக்கின்ற ஏராளமான தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அதாவது நம்மில் அதிகமானவார்கள் வட்டி வாங்குவதற்கு காரணம் என்னவென்றால் தங்களுடைய பொருளாதாரத்தை விருத்தி செய்யவேண்டும் என்பதற்குத்தான்.

நாம் சம்பாதிக்கும் அளவு குறைவாக இருந்தாலும் சரி அல்லாஹ் நம்முடைய பெருளாதாரத்தில் பரகத்தை வழங்குவான் என்று உறுதியாக நம்பினால் எவறும் வட்டி வாங்க மாட்டார்கள். அதிகமானவார்கள் வியாரபரத்தில் கலப்படம் செய்வது அடுத்தவர்களை எல்லாம் ஏமாற்றுவதற்கு காரணமும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது தான்.அனால் அல்லாஹ் நமக்கு பரகத் செய்வான் என்றநம்பிக்கை இருந்நால் நாம் இவ்வாறு தவருகளைச் செய்யமாட்டோம் இஸ்லாம் கூறும் விதத்தில் வாழ்வதற்கு உதவும்.

அதுமட்டும் இல்லாமல் நம்மில் அதிகமானவர்கள் பெறாசை கொண்டு அழைந்து கொண்டு இருக்கிறார்கள்.எவ்வளது சம்பாதித்தாலும் போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அல்லாஹ்வின் பாதையில் கூட செலவு செய்யாமல் இருக்கின்றார்கள்.இதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

அதமுடைய மகனுக்கு தங்கத்தினாலான ஒரு ஓடை இருந்தாலும் இரண்டு ஓடைகள் இருப்பதற்கு அவன் ஆசைப்படுவான். மன்னைத்தவிர வேறு எதுவும் அவனுடைய வாயை நிறப்பாது.

அறிவிப்பவர்: அன்ஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள்

(புகாரி: 6439)

தங்கத்தினாலான ஓடை இருந்தும் இன்னொரு ஓடைக்கு அவன் ஆசைப்படுவானாயின் எவ்வளவு பேறாசை உடையவான இருப்பான்.நாம் அல்லாஹ் நம்மக்கு பரகத் செய்வான் என்று சரியாக நம்பினால் எந்த பேறாசையையும் நம்மால் விரட்டி அடிக்க முடியும்.

ஏன் என்றால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அல்லாஹ் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து கொடுப்பான் என்று நம்பிக்கை வரும் போது நாம் பேறாசைப்பட மாட்டேம்.

பரகத்தை வலியுருத்தி நபிகளாரின் துஆ

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் தங்களுடைய தோழர்களுக்காக துஆ செய்யும் போதும் அதிகாமாக இந்த பரகத்தை வலியுருத்தி துஆ செய்தார்கள். ஒருவருடைய வாழ்கையில் பரகத் கிடைத்து விட்டது என்றால் அவனுடைய வாழ்கை நிம்மதியாக இருக்கும்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

என் தாயார்(உம்மு சுலைம்)அவர்கள் நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! தாங்களின் சேவகர் அனஸ{க்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்.நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிக மாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் அபிவிருத்தி வழங்குவாயாக! என்று பிரார்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள்

(புகாரி: 6344)

நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய சேவகர் அனஸ{க்காக பிரார்திக்கும் போதும் பரகத்தை வலியுருத்தி கேட்டுள்ளார்கள்.

ஒருவருடைய வாழ்கையில் மிக முக்கியமான நேரங்களில் ஒன்று திருமனம் அந்த திருமனத்தில் நபி(ஸல்)அவர்கள் மணமக்களை வாழ்த்துவாதற்காக கற்றுத்தந்த துஆ பரகத்தை வலியுருத்தக்க கூடியதாகத்தான் இருந்தது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ

அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும் உங்கள் இருவரையும் நல்ல விஷயத்தில் ஒன்று சேர்க்கட்டும். நபி(ஸல்)அவர்கள் திருமனம் முடிக்கும் போது ஒரு மனிதனை வாழ்த்தினால் அல்லாஹ் உங்களுக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி வழங்குவாயாக! நல்ல காரயங்களில் இவ்விருவரையும் ஒன்று சேர்பாயாக! மற்ற ஒரு அறிவிப்பில் “அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி வழங்குவானாக!” என்று மட்டும் வந்துள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(திர்மிதீ: 1011)

அந்த சந்தர்பத்தின் போது கூட நபி(ஸல்)அவர்கள் பணத்தை கேட்டு பிரார்த்தனை செய்யாமல் பரகத்தை வலியுருத்தித்தான் பிரார்த்தனை செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் நபி(ஸல்)அவர்கள் மதினா நகருக்கு ஒரு பிரத்தியோகமான துஆவைக்கேட்டார்கள் அந்த துஆவும் பரகத்தை வலியுருத்தித்தான் இருந்தது.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَيْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنْ الْبَرَكَةِ

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வே! நீ மக்காவுக்கு வழங்கிய பரகத்தைப் போல் இருமடங்கு பரகத்தை மதினாவுக்கு வழங்குவாயாக!

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள்

(புகாரி: 1885)

இந்த துஆவின் பிரதிபலனை அந்த மக்களும் அனுபவித்தார்கள்.மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவுக்கு வந்த போது மதினாவிலிருந்த மக்கள் தங்கள் சொத்துக்களில் சரி பாதியை மக்கத்து மக்களுக்கு வழங்கினார்கள்.

எவ்வளவு அவர்களுடைய செல்வத்தை மக்கத்து மக்களுக்கு வழங்கினாலும் மதினாவில் அதை வழங்கிய மக்களுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை. ஏன் என்றால் மதினாவுக்கு நபி(ஸல்)அவர்கள் கேட்ட துஆ பிரதிபலித்தது.பாதியைக் கொடுத்தாலும் மீதியை வைத்து முழுவதும் இருந்தால் எப்படி வாழ்தார்களோ அதே போன்று தான் வாழ்ந்தார்கள்.

பரகத்தை அடைய என்ன வழி?
ஹலாலான சம்பாத்தியம்

எனவே நம்முடைய வாழ்கையில் நமக்கு பரகத் கிடைத்தது என்றால் நாம் நிம்மதியாக வாழமுடியும்.அதை எந்த வழிகளில் பெருவது என்பதையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.அந்த அடிப்படையில் செயல்பட்டோம் என்றால் நமக்கும் நம்முடைய வாழ்வில் அபிவிருத்தியைப் பெறமுடியும்.

நபி(ஸல்)அவர்கள்:

யார் செல்லவத்தை உரியமுறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் கிடைக்கும்;. யார் செல்வத்தை தவரான முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவர் சாப்பிட்டுவிட்டு வயிரு நிரம்பாதவனைப் போல என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுசயீதில் குத்ரி

(முஸ்லிம்: 1742)

நமது பொருளாதாரத்தில் அபிவிருத்தியைப் பெறவேண்டுமானால் நாம் பொருளாதாரத்தை திரட்டும் போது இஸ்லாம் அனுமதித்த முறையில் திரட்ட வேண்டும். அவ்வாறு நாம் திரட்டினோம் என்றால் அவனின் பரகத்தை அடைய முடியும். இல்லாவிட்டால் நமக்கு எவ்வளவு பொருளாதரம் கிடைத்தாலும் அதைக் கொண்டு நம்முடைய தேவைகள் நிறைவடையாது என்பதை இறைத்தூதர்(ஸல்)அவர்கள் சாப்பிட்டும் வயிரு நிரம்பாதவர்போல என்று குறிப்பிடுகிறார்கள்.

எனவே முதலில் நம்முடைய வாழ்கையில் பரகத் கிடைக்க வேண்டுமானால் நம்முடைய தொழிலில் நாம் இஸ்லாம் தடுத்த விஷயங்களை சேர்த்துள்ளோமா என்பதை கவணிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அதிகமானவர்களுக்கு பரகத் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் தங்களின் வியாபரத்தில் வட்டி போன்ற மார்கம்அனுமதிக்காத காரியங்களை செய்வதுதான். நமக்கு குறைவாக கிடைத்தாலும் சரி இஸ்லாம் அனுமதித்த முறையில் தான் கிடைக்கவேண்டும் என்று உருதியாக இருந்தால் அவனுடைய பரகத்தை பெறமுடியும்.

பேராசை படாமல் இருத்தல்

நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ”ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது.

அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.

ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி)அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன்.

அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள்

(புகாரி: 1472)

இந்த செய்தியில் நபி(ஸல்)அவர்கள் செல்வத்தை பெறாசையில்லாமல் எடுத்தால் பரகத்தை பெறமுடியும். பெறாசையுடன் செல்வத்தை அடைந்தோமேயானால் பரகத்தை அடைய முடியாது. அதிகமானவர்கள் செல்வத்துக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறார்கள் இப்படிப்பட்வர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் பரகத்தை வழங்கமாட்டன்.

அதுமட்டும் இல்லாமல் சிலர் காசு பணத்துக்காக கொள்கையைவிட்டுக் கூட தடம்புரளக்கூடிய நிலைமையை பார்கமுடிகிறது இப்படி இருந்தால் எப்படி பரகத்தை அடையமுடியும். இன்னும் நம்மில் சிலர் ஒரு பொருள் இலவசமாக கிடைப்பதாக இருந்தால் அதற்கு சண்டை இட்டுக் கொண்டு தன்மானத்தை விட்டு செல்வதை பார்கலாம்.

இவர்களுக்கு தன் மானத்தை விட செல்வம் பெரிதாக தெரிகிறது.இஸ்லாமிய மார்கம் தன்மானத்துடன் வாழச்சொல்லக்கூடிய மார்கம். தன்மானத்தை எல்லாம் தூக்கி எரிந்துவிட்டு செல்வத்துக்கு அடிபணிந்து இருந்தால் அல்லாஹ்வின் பரகத்தை எப்படி அடையமுடியும்? சிந்தித்துப்பார்கவேண்டும்! ஏற்றத் தாழ்வை பொருத்துக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் தன்னுடைய அடியானை அவன் வழங்குவதைக் கொண்டு சோதிப்பான் யார் அவன் பிரித்துக் கொடுத்ததை பொருத்துக் கொள்கிறானோ அவனுக்கு அதிலே பரகத்தை ஏற்படுத்துவான் விசாலமாக வழங்குவான். யார் அதை பொருத்துக் கொள்ளவில்லையோ அவனுக்கு பரகத்தை வழங்கமாட்டான்.

ஆறிவிப்பவர்: பனூ சுலைம் குலத்தைச் சார்ந்த ஒருவர்

(அஹ்மத்: 19398)

அல்லாஹ் இந்த உலகில் உள்ள அனைவரையும் செல்வந்தர்களாகப் படைத்திருக்க மாட்டான். ஏற்றத்தாழ்வுடன் தான் படைத்து இருப்பான். வசதியில்லாதவர்கள் வசதியானவர்களைப் பார்த்துவிட்டு அல்லாஹ் நம்மையும் அவர்களைப்போன்று வைக்கவில்லையே என்று நினைத்துவிடக்கூடாது. அதை நாம் பொருத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பொருத்துக் கொள்வதின் மூலம் அல்லாஹ்வின் பரகத்தைப் பெற முடியும்.அல்லாஹ் சிலருக்கு செல்வத்தை குறைவாக கொடுத்து இருப்பான். அதை நாம் பொருத்துக் கொள்ளவில்லை என்றால் அவனுடைய பரகத்தை அடைய முடியாது.நாம் எப்பொழுதும் நம்மை விட வசதி குறைந்தவனைத் தான் பார்கவேண்டும் அப்படி பார்பதின் மூலம் நமக்கு செல்வத்தின் மேல் உள்ள மோகம் குறைந்துவிடும்.

நம்மை விட வசதி அதிகமானவனைப் பார்த்தால் அவன் அளவுக்கு நாம் எப்படி வசதியாகுவது என்று தான் நம்முடைய சிந்தனை இருக்குமே தவிர இருப்பதை வைத்து நாம் போதுமாக்கிக் கொள்ளமாட்டோம்.இஸ்லாம் இதற்கு அழகிய வழி முறையில் கற்றுத்தருகிறது.

(புகாரி: 6490)

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ»

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 6490)

நம்மை விட குறைந்தவர்களை நாம் பார்த்தோம் என்றால் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் அருளை விளங்க முடியும்.நம்மை விட மேலானவர்களை நாம் பார்த்தோம் என்றால் நமக்கு இருப்பது குறையாகத்தான் தெரியும்.குறைவாக இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் இன்று இருக்க வேண்டும். இவ்வாறு நாம் நமக்கு கிடைப்பதை பொருத்துக் கொண்டோமென்றால் அல்லாஹ்வின் பரகத்தைப்பொற முடியும்.

வியாபரத்தில் உண்மை

அடுத்து நாம் வியாபாரம் செய்யும் போது இன்னொரு விஷயத்தை கடைபிடிக்க வேண்டும்.அதன் மூலம் அல்லஹ்வின் அபிவிருத்தியைப்பெறமுடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، – أَوْ قَالَ: حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமரிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய்சொல்ரியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள்

(புகாரி: 2079)

قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ «الحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ، مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ»

“(பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!”  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(புகாரி: 2087)

வியாபாரம் செய்யும் பொது பொருளை வாங்குபவர் மற்றும் பொருளை விற்பவர் ஆகிய இருவரும் பிரிந்து செல்லும் வரை இருவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. அந்ந உரிமையுடன் வியாபாரம் செய்ய வேண்டும்.அதிகமான இடத்தில் பொருள் மீது கையை வைத்து விட்டாலே அந்த பொருளை வாங்கவேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவார்கள்.

நிர்பந்தத்தின் காரணமாக பொருளை வாங்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும். இதற்கு மார்கத்தின் அனுமதியில்லை. அது மட்டும் இல்லாமல் உண்மையைப் பேசி பொருளில் உள்ள குறைகளை கூறி வியாபாரம் செய்ய வேண்டும். இப்படி நாம் நடந்து கொண்டோம் என்றால் நமக்கு பரகத்தைப் பெற முடியும். ஆனால் இன்று நடைபெரும் அதிகமான வியாபாரங்களில் இந்த முறைகள் நடைபெறுவதில்லை வெறும் பொய்யும் பித்தளாட்ங்களும் தான் நடை பெருகிறது.

எப்படியாவது அடுத்தவர்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படி வியாபாரம் செய்தால் நமக்கு அல்லாஹ்வின் பரகத்தைப் பெற முடியாது.

திருமணத்தில் எளிமை

குறைந்த செலவில் நடத்தப் படும் திருமணமே அதிகம் பரகத் பொருந்தியதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள்

(அஹ்மத்: 23388)

திருமணம் குறைந்த செலவில் நடத்தப் படவேண்டும் அவ்வாறு நடத்தப் படுவதின் மூலம் அல்லாஹ்வின் பரகத்தைப் பெறமுடியும். நம்முடைய சமூதாயம் இன்று திருமணத்திற்கு செலவு செய்வதைப்போன்று வேறு எதற்கும் செலவு செய்வது கிடையாது. கொள்கை சகோதரர் கூட இந்த திருமணவிஷயத்தில் மடங்கி விடுகிறார்கள். வீண்விரயம் இஸ்லாம் கற்றுத்தராத அனாச்சாரங்கள் மலிந்து கிடப்பதைப்பார்க்கலாம்.

இஸ்லாம் கற்றுத்தரகூடிய முறையில் குறைந்த செலவில் திருமணத்தை நடத்த வேண்டும் அவ்வாறு செய்வதின் மூலம் நம்முடைய வாழ்வில் அல்லாஹ்வின் பரகத்தைப் பெறமுடியும். எனவே இவைகளை அறிந்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

முடியுரை

பரகத்தின் பலன் என்ன? அதன் வழிமுறைகள்?  பரகத்தை வலியுருத்தி நபிகளாரின் துஆ? பேராசை படாமல் இருத்தல் வியாபரத்தில் உண்மை, திருமணத்தில் எளிமை, இது போன்ற சில விஷயங்களை இந்த உரையில் நாம் அறிந்துக் கொண்டோம். நாம் கேட்ட விஷயங்களை கடைப்பிடித்து நம்முடைய வாழ்வில் அல்லாஹ்வின் பரக்கத்தை அடைவோமாக! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!

இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.