13) வண்ண ஆடையிலும் கஃபன் இடலாம்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

வண்ண ஆடையில் கஃபனிடுவது பொருளாதார ரீதியாகச் சிரமமாக இல்லாதவர்கள் வண்ண ஆடையில் கஃபனிட இயலுமானால் அவ்வாறு கஃபனிடுவது தவறில்லை.

‘உங்களில் ஒருவர் மரணமடைந்து அவர் வசதி பெற்றவராகவும் இருந்தால் கோடுகள் போட்ட ஆடையில் கஃபனிடலாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: அபூ தாவூத் 2739