வங்கிக்கு சாஃப்ட்வேர் செய்து கொடுக்கலாமா?
வங்கிக்கு சாஃப்ட்வேர் செய்து கொடுக்கலாமா?
வட்டி தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களைச் சபித்துள்ளார்கள்.
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)
நீங்கள் தாயரிக்கும் மென்பொருள் வட்டித் தொலிலுக்கு மட்டும் பயன்படக்கூடியதாக இருந்தால் அதை நீங்கள் செய்துகொடுப்பது கூடாது. உங்கள் மென்பொருள் மார்க்கம் அனுமதித்த இன்னும் பல விஷயங்களுக்கும் பயன்படக்கூடியதாக இருந்தால் அதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் செய்து கொடுக்கலாம். உங்களிடமிருந்து இதை வாங்கியவர்கள் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தினால் அதனால் உங்கள் மீது எந்த குற்றமும் ஏற்படாது.