03) யாஸீன் விளக்கவுரை-3

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை

 மூன்றாவது, மற்றும் நான்காவது வசனங்களின் விளக்கம்

3. (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர்.

4. நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.

இவ்வசனங்களில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் அவர்கள் நேர்வழியில் இருப்பதாகவும்
அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகத்தை நேர்வழியில் இருப்பதாக இறைவன் குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் வஹீயின் அடிப்படையில் செயல்படுவதுதான் என்பதை பின்வரும் வசனங்களில் அல்லாஹ் விளக்குகிறான்.

வஹீ மட்டும்தான் நேர்வழி!

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக ! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன்: 43:43)

இறைவனின் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் வஹீயை கடைபிடிப்பதால் நபி நேர்வழியில் நேர்வழியில் உள்ளார் என்பதை இவ்வசனம் சந்தேகமற விளக்குகிறது.

எனவே வஹீ மட்டுமே நேர்வழி என்பதை இதிலிருந்து விளங்கலாம். இன்னும் பல வசனங்கள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன.

அல்லாஹ்வின் கயிறை பற்றிப்பிடிப்பதுதான் நேர்வழி!

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவு படுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 3:103)

அல்லாஹ்வின் கயிறு எனும் வஹீயை பற்றிப்பிடித்தால் தான் நேர்வழி கிடைக்கும் என்பதை இவ்வசனம் விளக்குகிறது.

அல்லாஹ்வின் வஹியே நேர்வழி

இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாருக்கு உரியனவோ அந்த அல்லாஹ்வின் வழியில் (அழைக்கிறீர்) கவனத்தில் கொள்க! அல்லாஹ்விடமே காரியங்கள் மீள்கின்றன.

(அல்குர்ஆன்: 42:52),53)

பல வழிகளை பின்பற்றினால் வழிகேடு!

வஹி எனும் இறைவனின் வழியல்லாத பிற வழிகளை பின்பற்றுவது வழிகேடாகும் என்பதை பின்வரும் வசனம் விளக்குகிறது.

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 6:153)

வஹியின் அடிப்படையில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கின்ற வழிதான் நேர்வழி என்பதை இதைவிட தெளிவாக யாரும் விளக்கமுடியாது.

எனினும் சில முஸ்லிம்களிடத்தில் ஷாஃபி, ஹனஃபி போன்ற மத்ஹப்கள் இருக்கிறது. அந்த மத்ஹபையே பின்பற்றுவோம் அதுவே நேர்வழி என்கின்றனர்.

மேலும் சிலர் இமாம்களை பின்பற்றலாம் என்றும், சிலர் காதிரிய்யா, ஷாதுலிய்யா, நகூஷபந்திய்யா, சுக்ரவர்திய்யா என்று பலவகை தரீக்காக்களை உருவாக்கி அதை நேர்வழி என்று கூறுகின்றனர். இதுபோன்ற அனைத்து தவறான கொள்கைகளும் உருவாகக்காரணம் யாசீன் சூராவின் மேற்கண்ட விளக்கத்தை அறியாதுதான்.

எத்தனை புதிதான கொள்கைகள், வழிகள் உலகில் தோன்றினாலும் அல்லாஹ்வின் வழி மட்டும்தான் நேர்வழியாகும். எனும் கருத்தை ஆலிம்கள் மக்களுக்கு கூறியிருந்தால்
இதுபோன்ற வழிகேடுகள் உருவாகியிருக்காது.

வஹீயல்லாததை பின்பற்றினால் மறுமைநிலை?

இத்தனை சான்றுகளை அல்லாஹ் வழங்கிய பிறகும் வஹீயல்லாததை பின்பற்றுவோரின் மறுமைநிலையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் விளக்குகிறான்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” (எனவும் கூறுவார்கள்.)

(அல்குர்ஆன்: 33:66),67,68)

எனவே மறுமையில் நாம் அனைவரும் வெற்றிபெற வேண்டுமானால் இமாம்கள், பெரியார்கள் மீதுள்ள பக்தியினால் அவர்களை பின்பற்றுவதிலிருந்து விலகி நபி (ஸல்) அவர்களின் நேரான
வழியாகிய வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும்.

ஐந்து மற்றும் ஆறு ஆகிய வசனங்களின் விளக்கம்

5, 6. கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது. அவர்களோ கவனமற்ற
இருக்கிறார்கள்.

யாஸீன் அத்தியாயத்தின் 5வது வசனத்தில் “குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது” என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது. இது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்ததுதான். பிறகு ஏன் இதை வலியுறுத்தி சொல்லவேண்டும் என்ற கேள்வி எழலாம்?

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து இறைமறுப்பாளர்கள் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் சொந்தக்கூற்று என்று கூறினார்கள்.

அதற்கவர்கள் “இ(வர் கூறுவ)து அர்த்தமற்ற கனவு! இல்லை! இதை இவராக இட்டுக்கட்டினார்! இல்லை! இவர் ஒரு கவிஞர்! முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற சான்றை அவர் நம்மிடம் கொண்டு வரட்டும்” என்று கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 21:5)

இறைமறுப்பாளர்களின் இத்தகைய விமர்சனத்திற்கு பதிலாக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது எனும் வசனம் அமைந்து விடுகிறது. இன்றைக்கும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இக்குர்ஆனை முஹம்மது நபி இயற்றியிருப்பார் என்று சந்தேகிப்பதுண்டு, அவர்கள் காய்தல் உவத்தலின்றி திருக்குர்ஆன் குறித்த சில அம்சங்களை சிந்தித்து பார்த்தால் தங்கள் எண்ணம் தவறானது என்று உறுதிபட அறிந்து கொள்ளலாம்.

இது நபியின் கூற்றல்ல

சிறுவயதிலிருந்து நபி ஸல் அவர்களுக்கு படிப்பறிவு இல்லை. ஒரு சிலர் படிப்பறிவு இல்லாவிட்டாலும் தன் பெயரை மட்டுமாவது படிப்பார்கள். ஆனால் நபியவர்களுக்கு அதுவும் இயலாத அளவிற்கு எவ்வித எழுத்தறிவும் இல்லை என அல்லாஹ் கூறுகிறான்.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 29:48)

இத்தகைய படிப்பறிவு இல்லாத முஹம்மத் நபி அவர்களால் உயர்தர இலக்கிய நடை கொண்ட அதே நேரம் அனைவருக்கும் புரியும்படியான திருக்குர்ஆனை கண்டிப்பாக இயற்ற முடியாது.

திருக்குர்ஆனை வாசித்து பாருங்கள். அது அமையப் பெற்றுள்ள உயர்ந்த தரத்தை கவனத்தில் கொள்ளும் போது நிச்சயமாக இது எழுத்தறிவில்லாத முஹம்மது நபியின் சொந்தக்கூற்றாக இருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவிற்கே அறிவுடையோர் வர இயலும்.

உதாரணமாக தமிழில் உள்ள திருக்குறளுடைய எழுத்து நடையும் இலக்கிய நயமும் எவ்வளவு உயர்ந்தது என அறிவோம். திருக்குறளை பார்த்து நாம் வியப்பது போன்று குர்ஆனை பார்த்து அரபுமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் வியப்பார்கள். ஆனால் ஒரு பாமரனால் திருக்குறளை படித்து புரிந்து கொள்ள முடியாது.

குர்ஆனிலும் பல்வேறு இலக்கிய நயம் உள்ளது. ஆனால் ஒரு சாமானியராலும் அதை படித்து விளங்கிட முடியும். எனவே இத்தகைய உயர்ந்த தரமுடைய வேதம் படிப்பறிவு வழங்கப்படாத நபி(ஸல்) அவர்களால் இயற்ற முடியாது. இதிலிருந்து இது இறைவனின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்டது என்பதை விளங்கலாம்.

புகழ், பொருளாதாரம் போன்ற காரணங்களுக்காக முஹம்மது நபியவர்களே திருக்குர்ஆனை இயற்றி இது இறைவனின் புறத்திலிருந்து என்று கூறியிருக்கலாம் அல்லவா? என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர். இதற்கான விளக்கத்தையும் சுருக்கமாக பார்த்து விடுவோம்.

புகழுக்காக நபி கூறினாரா?

நபி(ஸல்) அவர்கள் தன் உலக ஆதாயத்திற்காகவும், பேர், புகழ், பொருளாதாரம் போன்றவற்றுக்காகவும் குர்ஆனை சொந்தக்கருத்தாக கூறினார்கள் என்பது தவறான வாதமாகும். ஏனெனில் குர்ஆன் நபியவர்களுக்கு அருளப்படுவதற்கு முன் புகழின் உச்சத்தில் இருந்தார்கள்.

நபித்துவம் அடைவதற்கு முன்பு மக்காவில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் பாரட்டப்படுகின்ற, மதிக்கப்படுகின்ற மிகச்சிறந்த மனிதராக நபியவர்கள் இருந்தார்கள்.

முஹம்மது எனும் இயற்பெரை விட்டு விட்டு அமீன் (நம்பிக்கைக்குரியவர்) ஸாதிக் (உண்மையாளர்) என்று அடையாளப் பெயர்களால் அழைக்கப்படுமளவு அக்காலத்திலேயே நபியின் புகழ் ஓங்கியே இருந்தது. மேலும் இறைத்தூதரான பின் அவர்களுடைய போதனைகள் முழுவதும் தன்னை புகழ்வதை தடுக்கக்கூடியதாகவே இருந்தது.

ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களின் காலில் விழவேண்டும் என அனுமதி கேட்டபோது கூடாது என்று தடை விதித்தார்கள். தனக்கு எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்றும் தடைவிதித்தார்கள். (பார்க்க(அபூதாவூத்: 1828),(அஹ்மத்: 6545) புகழை விரும்பும் யாராவது இவ்வாறு செய்வார்களா? கண்டிப்பாக இல்லை.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவற்றை செய் ததின் மூலம் தான் புகழ்விரும்பி அல்ல என்பதை உறுதிபடுத்துகிறார்கள். மேலும் ஒரு சிலர் தன்னை புகழுமாறு கட்டளையிடாவிட்டாலும் பிறர் புகழும்போது அதை தடுக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களோ இச்செயலையும் தடுத்துள்ளார்கள்.

சூரிய கிரகணம் ஏற்பட்ட ஒரு நாளில் நபி ஸல் அவர்களின் மகன் இப்றாஹிம் மரணித்து விடுகின்றார். . உடனே மக்களில் சிலர் நபிக்கு ஒரு துன்பம் ஏற்பட்டதால் தான் சூரியனே துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக கிரகணம் ஏற்பட்டுள்ளது என்று அறியாமையில் கூறினார்கள். நபிகள் நாயகம் இப்பேச்சை விரும்பவில்லை. மாறாக இதை வன்மையாக கண்டித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. மாறாக அவற்றின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை எச்சரிக்கிறான்.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 1048)

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னை வரம்புமீறி புகழக்கூடாது என்று நபிகள் நாயகம் தடை விதித்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள் ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்’ என்றும் “அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டி ருக்கிறேன்.

(புகாரி: 3445)

இவ்வாறு புகழின் அனைத்து வாசல்களையும் அடைத்துவிட்ட நபி (ஸல்) அவர்கள் புகழை விரும்பி குர்ஆனை சுயமாக கூறினார்கள் என்பது முற்றிலும் தவறான வாதமாகும்.

ஐந்து மற்றும் ஆறு ஆகிய வசனங்களின் விளக்கம்

5, 6. கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது. அவர்களோ கவனமற்ற
இருக்கிறார்கள்.

யாஸீன் அத்தியாயத்தின் 5வது வசனத்தில் “குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது” என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது. இது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்ததுதான். பிறகு ஏன் இதை வலியுறுத்தி சொல்லவேண்டும் என்ற கேள்வி எழலாம்?

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து இறைமறுப்பாளர்கள் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் சொந்தக்கூற்று என்று கூறினார்கள்.

அதற்கவர்கள் “இ(வர் கூறுவ)து அர்த்தமற்ற கனவு! இல்லை! இதை இவராக இட்டுக்கட்டினார்! இல்லை! இவர் ஒரு கவிஞர்! முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற சான்றை அவர் நம்மிடம் கொண்டு வரட்டும்” என்று கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 21:5)

இறைமறுப்பாளர்களின் இத்தகைய விமர்சனத்திற்கு பதிலாக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது எனும் வசனம் அமைந்து விடுகிறது. இன்றைக்கும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இக்குர்ஆனை முஹம்மது நபி இயற்றியிருப்பார் என்று சந்தேகிப்பதுண்டு, அவர்கள் காய்தல் உவத்தலின்றி திருக்குர்ஆன் குறித்த சில அம்சங்களை சிந்தித்து பார்த்தால் தங்கள் எண்ணம் தவறானது என்று உறுதிபட அறிந்து கொள்ளலாம்.

இது நபியின் கூற்றல்ல

சிறுவயதிலிருந்து நபி ஸல் அவர்களுக்கு படிப்பறிவு இல்லை. ஒரு சிலர் படிப்பறிவு இல்லாவிட்டாலும் தன் பெயரை மட்டுமாவது படிப்பார்கள். ஆனால் நபியவர்களுக்கு அதுவும் இயலாத அளவிற்கு எவ்வித எழுத்தறிவும் இல்லை என அல்லாஹ் கூறுகிறான்.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 29:48)

இத்தகைய படிப்பறிவு இல்லாத முஹம்மத் நபி அவர்களால் உயர்தர இலக்கிய நடை கொண்ட அதே நேரம் அனைவருக்கும் புரியும்படியான திருக்குர்ஆனை கண்டிப்பாக இயற்ற முடியாது.

திருக்குர்ஆனை வாசித்து பாருங்கள். அது அமையப் பெற்றுள்ள உயர்ந்த தரத்தை கவனத்தில் கொள்ளும் போது நிச்சயமாக இது எழுத்தறிவில்லாத முஹம்மது நபியின் சொந்தக்கூற்றாக இருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவிற்கே அறிவுடையோர் வர இயலும்.

உதாரணமாக தமிழில் உள்ள திருக்குறளுடைய எழுத்து நடையும் இலக்கிய நயமும் எவ்வளவு உயர்ந்தது என அறிவோம். திருக்குறளை பார்த்து நாம் வியப்பது போன்று குர்ஆனை பார்த்து அரபுமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் வியப்பார்கள். ஆனால் ஒரு பாமரனால் திருக்குறளை படித்து புரிந்து கொள்ள முடியாது.

குர்ஆனிலும் பல்வேறு இலக்கிய நயம் உள்ளது. ஆனால் ஒரு சாமானியராலும் அதை படித்து விளங்கிட முடியும். எனவே இத்தகைய உயர்ந்த தரமுடைய வேதம் படிப்பறிவு வழங்கப்படாத நபி(ஸல்) அவர்களால் இயற்ற முடியாது. இதிலிருந்து இது இறைவனின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்டது என்பதை விளங்கலாம்.

புகழ், பொருளாதாரம் போன்ற காரணங்களுக்காக முஹம்மது நபியவர்களே திருக்குர்ஆனை இயற்றி இது இறைவனின் புறத்திலிருந்து என்று கூறியிருக்கலாம் அல்லவா? என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர். இதற்கான விளக்கத்தையும் சுருக்கமாக பார்த்து விடுவோம்.

புகழுக்காக நபி கூறினாரா?

நபி(ஸல்) அவர்கள் தன் உலக ஆதாயத்திற்காகவும், பேர், புகழ், பொருளாதாரம் போன்றவற்றுக்காகவும் குர்ஆனை சொந்தக்கருத்தாக கூறினார்கள் என்பது தவறான வாதமாகும். ஏனெனில் குர்ஆன் நபியவர்களுக்கு அருளப்படுவதற்கு முன் புகழின் உச்சத்தில் இருந்தார்கள்.

நபித்துவம் அடைவதற்கு முன்பு மக்காவில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் பாரட்டப்படுகின்ற, மதிக்கப்படுகின்ற மிகச்சிறந்த மனிதராக நபியவர்கள் இருந்தார்கள். முஹம்மது எனும் இயற்பெரை விட்டு விட்டு அமீன் (நம்பிக்கைக்குரியவர்) ஸாதிக் (உண்மையாளர்) என்று அடையாளப் பெயர்களால் அழைக்கப்படுமளவு அக்காலத்திலேயே நபியின் புகழ் ஓங்கியே இருந்தது.

மேலும் இறைத்தூதரான பின் அவர்களுடைய போதனைகள் முழுவதும் தன்னை புகழ்வதை தடுக்கக்கூடியதாகவே இருந்தது.

ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களின் காலில் விழவேண்டும் என அனுமதி கேட்டபோது கூடாது என்று தடை விதித்தார்கள். தனக்கு எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்றும் தடைவிதித்தார்கள். (பார்க்க(அபூதாவூத்: 1828),(அஹ்மத்: 6545) புகழை விரும்பும் யாராவது இவ்வாறு செய்வார்களா? கண்டிப்பாக இல்லை.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவற்றை செய்ததின் மூலம் தான் புகழ்விரும்பி அல்ல என்பதை உறுதிபடுத்துகிறார்கள்.

மேலும் ஒரு சிலர் தன்னை புகழுமாறு கட்டளையிடாவிட்டாலும் பிறர் புகழும்போது அதை தடுக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களோ இச்செயலையும் தடுத்துள்ளார்கள்.

சூரிய கிரகணம் ஏற்பட்ட ஒரு நாளில் நபி ஸல் அவர்களின் மகன் இப்றாஹிம் மரணித்து விடுகின்றார். உடனே மக்களில் சிலர் நபிக்கு ஒரு துன்பம் ஏற்பட்டதால் தான் சூரியனே துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக கிரகணம் ஏற்பட்டுள்ளது என்று அறியாமையில் கூறினார்கள். நபிகள் நாயகம் இப்பேச்சை விரும்பவில்லை. மாறாக இதை வன்மையாக கண்டித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. மாறாக அவற்றின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை எச்சரிக்கிறான்.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 1048)

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னை வரம்புமீறி புகழக்கூடாது என்று நபிகள் நாயகம் தடை விதித்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள் ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்’ என்றும் “அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டி ருக்கிறேன்.

(புகாரி: 3445)

இவ்வாறு புகழின் அனைத்து வாசல்களையும் அடைத்துவிட்ட நபி (ஸல்) அவர்கள் புகழை விரும்பி குர்ஆனை சுயமாக கூறினார்கள் என்பது முற்றிலும் தவறான வாதமாகும்.

பொருளாதாரத்துக்காக குர்ஆனை கூறினாரா?

நபி (ஸல்) அவர்கள் பொருளாதாரத்துக்காக குர்ஆனை கூறினார்கள் என்றும் கூறுகின்றனர். இதுவும் தவறே. ஏனெனில் நபித்துவத்துக்கு முன்பு அவர்களுடைய இளம்வயதில் தன் வியாபாரத்தின் மூலம் மிகுந்த பொருளாதாரத்

தை சேகரித்து, மிகப்பெரும் செல்வந்தரானார்கள். இந்நிலையில் குர்ஆனை கூறி பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ளவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. மேலும் நம்மில் யாருக்குமே ஏற்படாதளவிற்கு நபித்துவத்திற்கு பிறகு அவர்களுக்கு வறுமை ஏற்பட்டது. அவர்களுடைய வீட்டில் விளக்கு இல்லை. (புகாரி: 382, 513, 1209) அன்றாடம் உண்பதற்கு சாதாரண உணவில்லை.  (புகாரி: 2567, 6459)

ஒரு யூதரிடம் தன் கவச ஆடையை அடைமானமாக வைத்து கோதுமையை வாங்கியிருந்தார்கள். ஆனால் அந்த ஆடையை மீட்காமலேயே மரணித்துவிட்டார்கள் (பார்க்க (புகாரி: 2068) என்கிற அளவிற்கு வறுமையிருந்தும் அதை பொருந்திக்கொண்டார்கள். மேலும் அவர்களுடைய போதனைகளும் பொருளாதார ஆசையை அறுத்தெரிவதாகவே இருந்தது.

மரணத்திற்கு பிறகு தன் சொத்து தர்மமாகும்

தனது மரணத்திற்கு பிறகு தான் விட்டுச்செல்லும் அனைத்து சொத்துக்களும் அரசாங்கத்திற்குதான் சேரவேண்டும் என்றும் அதை தன் குடும்பத்தாருக்கு வழங்கக்கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபாத்திமா (ரலி) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் “ஃபதக்’ கிலிருந்த நபி (ஸல்) அவர்களின் நிலத்தையும் கைபரிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (குமுஸ்) பங்கையும் தங்களது வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றனர்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ” (நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக ஆகமாட்டார்கள். நாங்கள் விட்டுச் செல்வது தர்மம் ஆகும். முஹம்மதின் குடும்பத்தினர் இந்தச் செல்வத்திலிருந்து சிறிதளவைத்தான் உண்பார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொல்லிவிட்டு, ” அல்லாஹ்வின் மீதாணையாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி வாழ்வதை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு உவப்பானவர்கள்” என்று கூறினார்கள்.

(புகாரி: 4035, 4036)

இதுபோன்று எந்த ஆட்சியாளராலும் ஆன்மிகத்தலைவராலும் கூறமுடியாது. அத்தகைய வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் கூறுவதன் மூலம் தனக்கு பொருளாதாரத்தின் மீது எவ்வித ஆசையுமில்லை என்பதை நிரூபிக்கிறார்கள். இவற்றை தொகுத்து பார்க்கும் போது திருக்குர்ஆனை நபி ஸல் அவர்கள் சுயமாக கூறினார்கள் என்ற வாதத்தில் உண்மையில்லை என்பதை அறியலாம்.

முரண்பாடின்மை!

அடுத்து “குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது” என 5 வது வசனத்தின் கருத்தை குர்ஆனில் எவ்வித முரண்பாடும் இல்லாததை வைத்து துளியும் சந்தேகமின்றி புரிந்து கொள்ளலாம்.

குர்ஆன் ஒரே சந்தர்ப்பத்தில் இறக்கப்படாமல் 23 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப சிறிது சிறிதாக இறங்கியது. ஓர் மனிதனின் 23 ஆண்டுகால பேச்சில் ஏராளாமான முரண்பாடுகளை காணலாம். முதல் வருடத்தில் கூறியதை மூன்றாவது வருடத்தில் மறுத்திருப்பார். 5 வது வருடத்தில் கூறியதை 8 வது வருடத்தில் மறந்திருப்பார். இதுபோன்ற அதிகமான முரண்பாடுகள் இருக்கும்.

அதேபோன்று குர்ஆனும் மனிதக்கூற்றாக இருந்தால் இதுபோன்ற முரண்பாடுகள் அதிகம் இடம்பெற்றிருக்கும். ஆனால் ஒரு முரண்பாடு கூட இல்லாமலிருப்பதே குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது என்பதற்கு மிக முக்கிய சான்றாகும். இதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விவரிக்கிறான்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 4:82)

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இது அருளப்பட்டது.

(அல்குர்ஆன்: 41:42)

குர்ஆனை விமர்சிப்பவர்கள் இவற்றை சிந்தித்தால் திருக்குரஆன் மனிதக் கூற்றல்ல இறைவனின் வார்த்தையே என்பதை உளமாற புரிந்து கொள்வார்கள்.

அல் அஸ்மாவுல் ஹுஸ்னா

மேலும் 5 வது வசனத்தில் வெறுமனே அல்லாஹ்வால் அருளப்பட்டது என்றில்லாமல் “மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.” என்று உள்ளது.

இதில் மிகைத்தவன் (அஜீஸ்) என்பது அல்லாஹ்வின் பெயராகும். இது போன்று அதிகமான பெயர்கள் அல்லாஹ்விற்கு உண்டு. இதற்கு அல் அஸ்மாவுல் ஹுஸ்னா (அழகிய பெயர்கள்) என்று சொல்லப்படும். அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

(அல்குர்ஆன்: 7:180)

” அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று (முஹம்மதே!) கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

(அல்குர்ஆன்: 17:110) ➚.)

மேற்கண்ட வசனங்களில் கூறப்படும் அல் அஸ்மாவுல் ஹுஸ்னாவை மனனமாக வரையறுத்து வைத்து கொண்டால் மறுமையில் சொர்க்கத்திற்கு செல்லலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 2736)

மனனம் செய்தால் மட்டும் சொர்க்கமா?

இந்த ஹதீஸின் அடிப்படையில் அல்லாஹ்வின் 99 பெயர்கள் இவைதான் என சில பெயர்களை நம் சமுதாயத்தில் சிலர் தேர்ந்தெடுத்து அதை பொருளுணர்ந்து மனனம் செய்யாமல் தங்கள் வீடுகளில் ஒட்டிக்கொள்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் மட்டுமே சொர்க்கம் செல்லலாம் என நினைக்கின்றனர். ஆனால் இது தவறாகும். ஏனெனில் அல்லாஹ்வின் பெயர்களை அதன் பொருளுணர்ந்து முறையாக நம்பவேண்டும்.

“அஜீஸ்” என்பதன் விளக்கம்

“அஜீஸ்” என்பதற்கு மிகைத்தவன், தோல்வியே இல்லாதவன் என்று பொருள். ஆனால் இப்பெயர்களை தங்கள் வீடுகளில் மாட்டக்கூடியவர்களில் சிலர் அதன் பொருளை சரியாக நம்பாமல் இருக்கிறார்கள்.

தாயத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அல்லாஹ்வை அஜீஸ் என்று நம்புகிற முஸ்லிம்கள் தகடு, தாயத்து, பேய் போன்ற பல மூடநம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள்.

தாயத்திற்கு ஏதோ பெரிய சக்தி இருக்கிறது என்றும், இது தனக்கு வருகின்ற துன்பத்தை தடுக்கும் என்றும் நம்பியே தாயத்து அணிகின்றனர். அல்லாஹ்வின் மீது மட்டும் வைக்கவேண்டிய நம்பிக்கையை தாயத்தின் மீது வைத்ததால் அல்லாஹ்வை விட தாயத்திற்க்குதான் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்று அவர் நம்புவதாக பொருள். அப்போது அவர் அல்லாஹ்வை மிகைத்தவனாக நம்பவில்லை என்றாகிவிடும்.

“யார் தாயத்தை தொங்கவிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்துவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உக்பத்துப்னு ஆமிர் அல்ஜீஹனீ (ரலி)

(அஹ்மத்: 16781)

இறந்து விட்ட தீய மனிதர்களின் ஆவி உலகிற்கு மீண்டும் வந்து மக்களை அச்சுறுத்துகிறது என்ற நம்பிக்கையே பேய் நம்பிக்கையாகும்.

ஆனால் திருக்குர்ஆன் யாரும் மரணித்த பிறகு இவ்வுலகிற்கு மீண்டு வர முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கின்றது.

அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:100)

மரணித்தவர் அல்லாஹ்வின் பர்ஸஹ் (திரைமறைவு) எனும் கட்டுப்பாட்டை மீறி பேயாக வந்துவிட்டார் என்று நம்பினால் அல்லாஹ்வின் கட்டுப்பாடு பலவீனமானது என்றாகாதா?

எனவே இதுபோன்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டு அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்குதான் இருக்கிறது. இறைவனே மிகைத்தவன். இறைவனை யாராலும் எதுவாலும் மிகைக்க முடியாது என்று நம்பி செயல்படும் போதே இறைவனின் திருநாமங்களில் ஒன்றான அஜீஸ் எனும் இறைநாமத்தை நாம் சரியாக நம்பினோம் என்றாகும்.

அதுவல்லாமல் வெறுமனே பெயர்களை வாயளவில் சொல்லி அல்லது உள்ளத்தில் மனனம் செய்தால் மாத்திரம் சொர்க்கம் சென்று விடலாம் என எண்ணுவது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமான அறிவீனமாகும்.

ரஹீம் என்பதன் பொருள்

யாஸீன் அத்தியாயம் 5 வது வசனத்தில் “மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.” என்பதில் நிகரில்லா அன்புடையோன் (அர்ரஹீம்) என்பதும் அல்லாஹ்வுடைய பெயர்களில் ஒன்றாகும். அதிகமான இடங்களில் அல்லாஹ் தன்னை “அர்ரஹீம்” (நிகரில்லா அன்புடையோன்) என்று அறிமுகப்படுத்துகிறான்.

“வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?” என்று கேட்பீராக! “அல்லாஹ்வுக்கே’ எனக் கூறுவீராக! அருள் புரிவதைத் தன் மீது அவன் கடமையாக்கிக் கொண்டான். கியாமத் நாளில் அவன் உங்களைத் திரட்டுவான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தமக்கே நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 6:12)

அல்லாஹ் அன்பு காட்டுவது யாருடைய தூண்டுதலாலும் அல்ல. மாறாகதனக்குதானே அவன் கடமையாக்கிக்கொண்டான். இதுதான் நமக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள வேறுபாடாகும்.

இதுமட்டுமின்றி நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் எல்லையில்லா அருளைப்பற்றி விளக்குகிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான்.

அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.

ஸஹீஹ் (புகாரி: 6491)

ஒருவர் ஒரு நன்மையை செய்யாவிட்டாலும் அதை மனதில் நினைத்ததற்காக அல்லாஹ் ஒரு நன்மையை வழங்குகிறான். அதை செய்துவிட்டால் ஒரு நன்மைக்கு பதிலாக பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மையை வழங்குகிறான். ஆனால் தீமை செய்தால் பல மடங்கு அல்லாமல் ஒரு தீமையே வழங்குகிறான். இது அல்லாஹ்வின் நிகரில்லா அன்பை தெளிவாக விளக்குகிறது.

துன்பத்திற்கு பகரமாக நன்மை

நமக்கு பல துன்பங்கள் நேரிடலாம். அதற்கும் அல்லாஹ்விடம் நன்மைகள் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

ஸஹீஹ் (புகாரி: 5642)

கவலை, முள் குத்துவது போன்ற சிறிய துன்பங்களுக்கும் அடியார்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதன் மூலம் தனது நிகரில்லா அன்பை வெளிப்படுத்துகிறான்.

அன்றாட செயல்களுக்கும் நன்மை!

வணக்கவழிபாடுகளுக்கு மட்டுமின்றி நம் வாழ்வில் நடைபெறுகின்ற அன்றாட செயல்களுக்கும் அல்லாஹ் நன்மையை வழங்குகிறான்.

மனைவிக்கு ஊட்டும் உணவு

ஒருவர் தன் மனைவிக்கு பாசமாக உணவு ஊட்டுவதன் மூலம் கணவன் மனைவியிடையே பாசமும் அன்பும் அதிகரிக்கும். இதன் பலன்கள் அனைத்தும் இருவருக்கு மட்டும்தான் கிடைக்கும். ஆனால் இதற்கு கூட அல்லாஹ் நன்மையை வழங்குவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் வழங்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 56)

மலர்ந்த முகத்தோடு பிறரை சந்தித்தல்

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 5122)

நாம் பிறரை சந்திக்கும்போது மலர்ந்த முகத்தோடு புன்னகையோடு சந்திக்கவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இது மிகப்பெரிய வணக்கம் அல்ல. இதற்கு தொழுகையை போல குனிந்து நிமிரவேண்டிய கஷ்டமும் இல்லை. உளூ செய்ய வேண்டிய தேவையுமில்லை. ஆனால் இதற்கு நன்மை உண்டு.

இதுபோன்ற அன்றாட செயல்களுக்கும் கூட அல்லாஹ் கூலி வழங்குவதன் மூலம் அவனுடைய அளவற்ற அருள் வெளிப்படுகிறது.

மறுமையிலும் அல்லாஹ்வின் அருள்!

உலகத்தில் மட்டுமின்றி மறுமையிலும் அல்லாஹ் தனது அருளை வழங்குவான் என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும் போது வானவர்களிடம், அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகத்திருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங்களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான்.

ஆகவே (அல்லாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த (னான மனிதர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும். இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள்.

பின்னர் அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான். இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி “இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது.” என்று கூறுவான்.

அப்போது அல்லாஹ்,” (உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் கேட்கமாட்டேன்)” என்பான். அந்தமனிதன் அல்லாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அல்லாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான்.

சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக்கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக!” என்று கேட்பான். அதற்கு இறைவன், “முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், “இறைவா! என்னை உன் படைப்புக்களிலேயே நிற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது!” என்று கூறுவான்.

அதற்கு இறைவன், (நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா?” என்பான். அம்மனிதன், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டே ன்” என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான்; அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான்.

பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், “இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பாயாக!” என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், “ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!” என்று கேட்பான்.

அதற்கு அம்மனிதன், “இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நிற்கதியற்றவனாய் ஆக்கி விடாதே!” என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், “நீ ஆசைப்படுவதைக் கேள்!” என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும்போது (அவனிடம்) இறைவன், “இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு!” என்று சொல்லிக் கொடுப்பான்.

இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும்போது உன்னதனாகிய அல்லாஹ் “உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு” என்பான்.

இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தமக்கு இதை அறிவித்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம், “உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு’ என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து “உனக்கு இதுவும் உண்டு. இதுபோன்று இன்னொரு மடங்கும் உண்டு’ என்றே இறைவன் கூறியதாகவே மனனமிட்டேன்” என்றார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், “இதுவும் உண்டு. இதுபோன்று பத்து மடங்கும் உண்டு’ என்றே நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)…

(புகாரி: 806)

இச்செய்தியில் நரகவாசியாக இருந்தவரை இறைவன் சொர்க்கவாசியாக மாற்றுகிறான். இது அல்லாஹ்வின் அருளை காட்டும் உச்சகட்ட சான்றாகும்.

இறைவன் “ரஹீம்” ஆக இருக்கின்றான் என்பதற்கு இது போன்று எண்ணற்ற சான்றுகள் உள்ளன. எனினும் முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வை விட்டுவிட்டு அவனது அடியார்களிடம் (இறைநேசர்கள் எனும் பெயரில்) சென்று உதவி கேட்கிறார்கள். இது அல்லாஹ்வை “ரஹீம்” என்று முழுமையாக ஏற்றுக்கொள்ளாத பண்பாகும். மிகப்பெரிய பாவமும் கூட.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன்: 39:53)

எனவே அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்பதை கைவிட்டுவிட்டு அளவற்ற அருளாளனான “ரஹீம்” அல்லாஹ்வை முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே கேட்கவேண்டும்.

மாற்றுக்கருத்துடையோரின் தவறான புரிதல்

மாற்றுக்கருத்துடையவர்கள் “அர்ரஹீம்” அல்லாஹ் அளவற்ற அருளாளன் என்பதை மறுக்கின்றனர். இதற்கு குர்ஆனில் உள்ள சில வசனங்களை சான்றாக காட்டுகிறார்கள். ஆனால் இவர்களுடைய பார்வை மிகவும் தவறானதாகும்.

போர் செய்வது குறித்த வசனங்கள்.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 2:190),191,192)

மேற்கண்ட வசனம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இதில் அல்லாஹ் முஸ்லிம் அல்லாதவர்களை வெட்டுமாறும் கொல்லுமாறும் கட்டளையிடுகிறான். இது அருளாளனின் பண்பா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அநியாயமான முறையில் இதுபோன்று வழிநடத்தினால் நிச்சயமாக அது அருளாளனின் பண்பு அல்ல. ஆனால் இதுபோன்ற வசனங்கள் அனைத்தும் போர் குறித்து இறக்கப்பட்ட வசனங்களாகும்.

பொதுவாக போர் என்றாலே படைத்தளபதி வீரர்களுக்கு எதிரிகளை கொல்லுங்கள், வெட்டுங்கள் என்றுதான் கூறுவார். அவ்வாறு கூறவில்லையென்றால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். நம் தரப்பு பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகமான பாதிப்புகளும் உயிர்ச்சேதமும் ஏற்படும். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் போர்க்களத்தில் இத்தகைய உத்தரவுகளைத்தான் பிறப்பிக்க இயலும்.

அது போன்ற சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ள கட்டளைகளே இவர்கள் குறிப்பிடும் வசனங்களாகும் . ஆனால் திருக்குர்ஆன் முஸ்லிம் அல்லாதோரை கொல்ல உத்தரவிடுகிறது என்று இவ்வசனங்களை தவறாக திரித்து கூறுகிறார்கள்.

முஸ்லிமல்லாதவர்களும் வாழ்ந்தார்கள்.

மாற்றார்கள் கூறுவது போன்று முஸ்லிமல்லாதவர்களை அல்லாஹ் கொலை செய்யுமாறு கட்டளையிட்டிருந்தால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த ஒரு முஸ்லிமல்லாதவரும் வாழ்ந்திருக்க முடியாது. ஆனால் அவர்களுடைய காலத்தில் முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவு சகஜமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.

யூத இளைஞர்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் இளைஞர் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்துபோது, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாதை ஏற்றுக் கொள்!” என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், ‘அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

ஸஹீஹ்  (புகாரி: 1356).

விஷம் கொடுத்த யூதப்பெண்

அனஸ்(ரலி) அறிவித்தார்.

யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

ஸஹீஹ்  (புகாரி: 2617)

மேற்கண்ட ஹதீஸ்களில் ஒரு யூதப்பெண்மணி தனக்கு விஷம் கொடுத்திருந்தாலும் அவளை மன்னித்து விடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். மாற்றார்கள் கூறுவது போன்று அனைவரையும் கொலை செய்யவேண்டுமென்றால் இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும்?

இது மட்டுமின்றி நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தன் கவச ஆடையை அடைமானம் வைத்துவிட்டு தன் மரணநேரத்தில் கூட அதை மீட்டமுடியாமல் மரணித்த செய்திகள் உண்டு.

பார்க்க :  (புகாரி: 2200)

இது அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாதோர் எவ்வளவு சுதந்திரமாக இருந்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது.

இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை

நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏகஇறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.

(அல்குர்ஆன்: 4:137)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சிலர் இஸ்லாத்தை நம்பிக்கை கொண்டுவிட்டு பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்களை பற்றிதான் இவ்வசனம் பேசுகிறது. எனினும் இதில் அவர்களை கொலை செய்யுமாறு கட்டளையிடவில்லை.

முதலில் நம்பிக்கை கொண்டு பிறகு மறுத்து பிறகு மீண்டும் நம்பிக்கை கொண்டு பிறகு மீண்டும் மறுக்குமளவு சுதந்திரம் இஸ்லாத்தில் உண்டு என்பதையே இவ்வசனம் வெளிப்படுத்துகின்றது.

முஸ்லிமல்லாத ஒருவரை எக்காரணம் கொண்டும் இஸ்லாத்திற்கு வருமாறு நிர்பந்திப்பதோ, வராவிட்டால் கொலை செய்வதோ இஸ்லாத்தில் இல்லை. ஏனெனில் இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை. இதன் மூலமும் பிற மதத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையும் திருக்குர்ஆன் குறித்து அவர்கள் பொய்யாக கூறும் கருத்தின் விமர்சனத்தின் நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

தீயவர்களை அல்லாஹ் நரகில் தண்டிப்பான்

அல்லாஹ் “அர்ரஹீம்” என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் தவறு செய்தால் தண்டிப்பான் என்பதையும் ஏற்கவேண்டும். ஏனெனில் சிலர் அருளாளன் என்பதை மட்டும் ஏற்றுக்கொண்டு அனைத்து தவறுகளையும் செய்வார்கள். அல்லாஹ் தண்டிக்கமாட்டான் என்றும் கருதுவார்கள். இது தவறாகும். நல்லவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டுவது போன்று தீயவர்களுக்கு தண்டனையும் வழங்குவான்.

அல்லாஹ் எவ்வளவு இரக்க குணம் கொண்டவன் என்பதை மனதில் பதிவதை போல அவன் தண்டிப்பவன் என்பதையும் மறந்து விடக் கூடாது.

அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன்: 3:11)

நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:56)

அல்லாஹ் அளவற்ற அருளாளனாக இருப்பது போன்று தீயவர்களை தண்டிப்பவனாகவும் இருக்கிறான் என்பதை சேர்த்து நம்பும் போது பாவங்களிலிருந் து விலகி நிற்கும் சூழல் உண்டாகும்.

அடுத்து யாஸீன் அத்தியாயத்தின் 6 வது வசனத்தின் விளக்கவுரையை பார்ப்போம்.