யாஸீன் மற்றும் துஃகான் அத்தியாயம் குறித்த செய்திகள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பகலிலும், இரவிலும் ஒருவர் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதினால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அக்லப் பின் தமீம் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்
துஃகான் (44 வது) அத்தியாயத்தின் சிறப்பு
. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இது (இட்டுக்கட்டப்பட்ட) பொய்யான செய்தி.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உமர் பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
1 . துகான்
பார்க்க : (தாரிமீ: 3463), 3464 , (திர்மிதீ: 2888, 2889), முஸ்னத் அபீ யஃலா-6224 , 6232 , அல்முஃஜமுல் கபீர்-8026 ,
2 . யாஸீன்
முஸ்னத் தயாலிஸீ-2589 ,(தாரிமீ: 3458), 3460 , முஸ்னத் அபீ யஃலா-6224 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3509 , அல்முஃஜமுஸ் ஸகீர்-417 , (இப்னு ஹிப்பான்: 2574),