06) முஆத்பின்ஜபல் (ரலி)

நூல்கள்: நபித்தோழரை அறிந்து கொள்வோம்

1) நால்வரில் ஒருவரிடம் அல்குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியோரில் இவரும் ஒருவர். (புகாரி: 3758)

2) இவர் நபியவர்களுடன் தொழுது விட்டு தன்னுடையை சமுகத்தாரிடம் சென்று இமாமாக தொழுகை நடத்துவார்கள் (புகாரி: 700, 701)

3) இவரை நபியவர்கள் யமனுக்கு ஆளுனராக அனுப்பினார்கள். (புகாரி: 1458)

4) வேதம் கொடுக்கப்பட்டவர்களை ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைக்கும் பணியை செய்தவர்கள். (புகாரி: 1458)

5) உபை பின் கஅப் (ரலி) அவர்களைப் பற்றி பனுஸலமா கூட்டத்தாரில் ஒருவர் குறை சொன்னபோது அவரைப் பற்றி நல்லவிதமாக நபியவர்களிடம் எடுத்துச் சொன்னவர். (புகாரி: 4418)

6) ஒரு மனிதர் முஸ்லிமாகி பின்னர் யஹுதியாக மாறியவரை கொல்லும் வரை நான் உட்கார மாட்டேன் என்று கூறியவர். (புகாரி: 4344, 4345)

7) ஒரு கூட்டத்தாரை இஸ்லாத்துக்கு அழைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையை இவருக்கு நபியவர்கள் கூறினார்கள். (புகாரி: 1496)

8) அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் பற்றி செய்தியை அறிவித்தவர் (புகாரி: 7373)

9) நபியவர்கள் இவரை யமனுக்கு அனுப்பும் போது அநீதிக்குள்ளாக்கப்படவருடைய பிராத்தனைக்கு பயந்து கொள் என்ற இவரிடம் கூறினார்கள். (புகாரி: 2448)

10) நபி (ஸல்) அவர்கள் சில பெண்களிடம் ஒப்பாரி வைத்து அழக்கூடாது என்று உறுதிப் பிரமாணம் எடுத்தார்கள். அவர்களில் இந்த நபித்தோழரின் மனைவியும் இடம்பெற்றிருந்தார். (புகாரி: 1306)

➖➖➖➖➖➖➖➖➖➖➖

முஆத்பின்ஜபல் (ரலி) அவர்கள்