05) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

நூல்கள்: நபித்தோழரை அறிந்து கொள்வோம்

1. நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாதி என்று சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். (திர்மிதி: 3680)

2. உஹதுப்போரில் வீரமரணம் அடைந்த முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் நிலையை நினைவு கூறிய நபித்தோழர். (புகாரி: 1275)

3. அல்லாஹ்வின் தூதரின் மகன் மரணித்த போது நபியவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று வினவிய நபித்தோழர். (புகாரி: 1303)

4.உமர் (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அடுத்த இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்களில் இவருடைய பெயரையும் கூறினார்கள் (புகாரி: 1392)
5.உமர் (ரலி) அவர்கள் கடைசியாக செய்த ஹஜ்ஜின்போது நபிகளாரின் மனைவிகளுடன் இவரையும் அனுப்பி வைத்தார்கள். (புகாரி: 1860)

6.மக்காவில் இருந்து மதீனாவிற்கு நாடு துறந்து வந்தபோது இவரையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள் (புகாரி: 2049)

7.இந்த நபித்தோழர் சிரங்கு நோயினால் பீடிக்கப்பட்டபோது இவருக்கு பட்டாடை அணிய நபியவர்கள் அனுமதி கொடுத்தார்கள் (புகாரி: 2919)

8.நபியவர்களின் ஒட்டகம் திருட்டுப்போய் விட்டது என்பதை இவரின் அடிமையின் மூலம்தான் தெரியவந்தது (புகாரி: 3041)

9.இந்த நபித்தோழரின் கால்நடைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள்தன்னுடைய அடிமைக்கு எச்சரிக்கை செய்தார்கள் (புகாரி: 3059)

10.நபி (ஸல்) அவர்களின் ஃபதக் பகுதியில் இருந்த சொத்துக்கள் தொடர்பாக பேச இவர் உமர் (ரலி) அவர்களிடம் அனுமதி வேண்டினார்கள். (புகாரி: 3094)

 

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)