04) ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)
1 . நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மைகளைப் பற்றி வினவிய போது தீமையில் இருந்து தப்பிக்கொள்ள தீமையைப் பற்றி வினவியவர் (புகாரி: 3606)
2 . உஹதுப் போரில் இவர்களின் முன்னிலையிலேயே இவர்களின் தந்தை கொல்லப்பட்டார்கள். (புகாரி: 3290)
3 . உஸ்மான் (ரலி) அவர்களிடம் அல்குர்ஆனை மக்கள் பலவாறாக ஒதுகின்றனர். இதற்கு மாற்று வழி காணுவது பற்றி முறையிட்டவர். (புகாரி: 4987)
4. நபியவர்களின் மரணத்துக்கு பிறகு நடக்க இருக்கிற சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர். (புகாரி: 525)
5. நபியவர்களின் இரகசியத்தோழர். (புகாரி: 6278)
6. பத்ருப் போரில் இவர்கள் கலந்த கொள்ளவில்லை. (முஸ்லிம்: 3661)
7. அகழ்ப் போர் இரவில் கடுமையான காற்றும் குளிருடன் நபிகளாருடன் இருந்தவர்கள். (முஸ்லிம்: 3662)
8 . உமர் (ரலி) அவர்கள் இவரையும் சவாதுல் இராக் பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார்கள். (புகாரி: 3700)
9. உக்பா (ரலி) அவர்கள் தஜ்ஜால் தொடர்பான நபிமொழியை இவர்களிடம் கேட்டுள்ளார்கள். (முஸ்லிம்: 4562)
10.கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என்ற நபிமொழியை அறிவித்தவர்.