03) கஅப் இப்னு மாலிக் (ரலி)
1. நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்று சபதம் எடுத்தவர். (புகாரி: 4418)
2. இவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது என்று கூறினார்கள் (புகாரி: 2757)
3. இவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்: 5346)
4. பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது என்று உணர்ந்து, உண்மையைச் சொன்னவர். (புகாரி: 4418)
5. தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின் தங்கி விட்டவர்களில் இவரும் ஒருவர் (புகாரி: 3889, 6690)
6. இந்த நபித் தோழர் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் மற்றும் தபூக் போரில் மாத்திரம் கலந்து கொள்ளாமல் இருந்தவர். (புகாரி: 3951)
7. உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். என்று நபி (ஸல்) அவர்கள் இவரைப் பார்த்து சொன்னார்கள் (புகாரி: 4418)
8. இவரிடம் யாரும் பேசக்கூடாது என்று நபி (ஸல்) வைத்த போது ஃகஸ்ஸான் அரசனால் அவரோடு சேர்ந்து கொள்ளும் படி அழைப்பு விடுக்கப்பட்டவர். (புகாரி: 4418)
9. அல்லாஹ் இவர் இன்னும் இரு நபித் தோழர்கள் விசயத்தில் அல்குர்ஆனின் 9:118 ஆவது வசனத்தை இறக்கினான். (முஸ்லிம்: 5346)
10. கூர்மையான கல்லால் அறுக்கப்பட்ட ஆட்டை உண்ணலாமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டவர். (புகாரி: 5504)
➖➖➖➖➖➖➖➖➖➖➖