முன்னுரை

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

நெல்லையைச் சேர்ந்த ஜெபமணி என்ற கிறித்தவ ஊழியம் செய்யும் ஒருவர் மெய்வழி என்ற பெயரில் 1980 களில் நடத்தி வந்தார். அதில் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவதே இவரது வாடிக்கையாக இருந்தது. ஆனால் இவரது எழுத்துக்களில் எந்த விதமான அறிவுப்பூர்வமான வாதமும் இருக்காது.

இந்த நிலையில் இடையிடையே நூல் வடிவிலும் இஸ்லாத்தை ஏசி நூல்களை வெளியிடுவார். அப்படி அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று தான் கஅபா நிலைக்குமா என்ற நூல்.

1989 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்நூல் குறித்து பல சகோதரர்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்த போது அவரது அந்த நூலுக்கு மறுப்பாக கப்சா நிலைக்குமா என்ற நூலை வெளியிட்டோம். இதைக் கொள்கைச் சகோதரர்களின் பொருளுதவியுடன் இலவசமாக விநியோகம் செய்தோம்.

பகிரங்க விவாதத்துக்கும் அவரை நாம் அழைத்தோம். இதுவே அவருடன் நடத்திய விவாதத்துக்குக் காரணமாக இருந்தது.

அப்போதெல்லாம் பைபிள் குறித்து எனக்கு பெரிய அளவில் ஞானம் கிடையாது. இந்த விவாதத்துக்காக நான் பைபிளை பத்து தடவை படித்ததால் தான் பைபிள் குறித்து ஓரளவு அறிய முடிந்தது. அதற்காக எடுக்கப்பட்ட குறிப்புக்களை பயன்படுத்தித் தான் இயேசு இறை மகனா? இது தான் பைபிள், பைபிளில் நபிகள் நாயகம், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆகிய நான்கு நூல்களை நான் எழுதினேன்.

பைபிளுக்குள் என்னை இழுத்து விட்ட ஜெபமனிக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

நேயர்களுக்கு பயன்படட்டும் என்று கருதி கப்சா நிலைக்குமா என்ற அந்த நூல் இங்கே வெளியிடப்படுகிறது.

கப்சா நிலைக்குமா?

(காபா நிலைக்குமா என்ற நூலுக்கு மறுப்பு)

முன்னுரை:

சமீப காலமாக தமிழகத்தில் நடந்த மத மோதல்களையும் சில இந்து மத வெறி இயக்கங்களின் அவதூறு பேச்சுகளையும் காரணமாக்கி நமக்கு இந்துக்களே விரோதிகள் என்று நண்பர்கள் கூறும் போதெல்லாம் இல்லை இல்லவே இல்லை இம்மோதல்கள் அரசியல் ரீதியானவை ஆனால் தத்துவ ரீதியிலும் சரித்திர ரீதியிலும் உலகளாவிய நிலையில் நமக்கு கிறிஸ்தவர்களே விரோதிகள் என்று நான் சொல்வது வழக்கம்.

இதை நிரூபிக்கும் வண்ணமாக அடிக்கடி சில வெயல்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் கிறிஸ்துவ பிரிவில் ஒரு சாராராகிய கத்தோலிக்கர்கள் முஸ்லி ம்களிடம் ஊடுருவவோ குழப்பம் ஏற்படுத்தவோ முயல்வதில்லை. அவர்களைக் குறை கூறித் திரியும் மற்றொரு பிரிவினரான புரோடஸ்டண்டுகள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் கிறிஸ்தவர்களில் ஒரு கூட்டம் நாமெல்லாம் வேதக்காரர்கள் சகோதரர்கள் என்று கையைக் குலுக்குவது போல் நடித்து காலை வாரி விடுவதற்காக இயங்குவதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆம் இவர்கள் ஈமான் யவ்முல்கியாமத் கஃபா என்றெல்லாம் அரபி எழுத்தில் பெரிய தலைப்பிட்டு தங்கள் பிரசுரங்களை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஷமத்தனமாய் வினியோகிப்பார்கள். முஸ்லிம்களும் அரபி எழுத்தையும் ஈமான் கஅபா போன்ற தலைப்புகளையும் பார்த்து வாங்கிப் படிப்பார்கள். அந்தப் பிரசுரங்களில் கர்த்தராகிய தேவனை விசுவாசிக்கும் படியும் இயேசுவே அந்தத் தேவன் என்பதும் காணப்படும். முகவரி பகுதியில் தபால் பட்டி எண் கொடுக்கப்பட்டு வேலூர் என்று அச்சிடப்பட்டிருக்கும்.

இது மட்டுமின்றி அக்பர் ஹக், மஜீது ஆபேல் என்று முஸ்லிம் பெயர்களைப் பெரிதாகப் போட்டு இவர்கள் நற்செய்தி அளிப்பதாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஒட்டி குழப்பம் ஏற்படுத்துவது இவர்களின் வழக்கம்.

அவ்வகையில் மற்றொரு மற்றோரு வழிகேடனின் விஷமத்தனம் தான் கஅபா நிலைக்குமா என்ற புத்தகம்.

அட்டையில் பெரிதாக ஈஸா அவர்கள் வானத்திலிருந்து இறங்கி தொழ வைப்பார்கள்

-ஹதீஸ் முஸ் லிம் 795, 782 என்றும்

வானத்திலிருந்து கல் ஒன்று கஅபாவின் மேல் விழுந்து கஅபா சிதறுவது போல் படத்தைப் போட்டு கஅபா என்ற பெரிய எழுத்திலும் நிலைக்குமா என்ற சிறிய எழுத்திலும் லாயிலாஹ இல்லல்லாஹி என்று வாசகமும் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் முறைகளைப் பாடமாக வரை படங்களுடன் கற்றுத் தர வேண்டுமானால் இந்நூலாசிரியரை அணுகுங்கள் என்ற புத்தகத்தின் கடைசி பக்கத்திலிருந்து இவர்களின் நோக்கங்களை அனைவரும் அறியலாம்.

இப்புத்தகத்தை எழுதிய மெய்வழி என்ற கிறிஸ்துவ மாதப் பத்திரிக்கையின் ஆசிரியரபன எம் டி ஜெபமணி எனபவர் தனது உரையில் ஜனாப் ஜின்னா பாரத நாட்டை பங்கிட்டமையால் முஸ்லிம் மக்களை வெறுத்தேன் என்கிறார்.

(பக்கம் 5)

இதில் இருந்து அவரது அறிவின் விசாலத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது முஸ்லிம்களை வெறுப்பதற்கு கொள்கைகளோ தத்துவங்களோ காரணங்கள் அல்லவாம். மாறாக அரசியல் ரீதியாக ஜின்னா பாரத நாட்டைப் பங்கிட்டதால் முஸ்லிம்களை வெறுத்தாராம்.

பாரத நாட்டைப் பங்கிட்டமைக்காக அவர் வெறுப்பது என்றால் பாரத நாட்டை வெள்ளை கிறிஸ்துவ அரசாங்கம் பங்கிட்டுக் கொடுத்ததே அப்படியானால் கிறிஸ்தவர்களையும் அல்லவா வெறுக்க வேண்டும். அதுவும் பாரதத்துக்கு சுதந்திரம் வழங்கும் முன் பாக்கிஸ்தானுக்குச் சுதந்திரம் வழங்கி பாரதத்தின் முகத்தில் கரியைப் பூசிய கிறிஸ்தவர்களை அல்லவா முதலில் வெறுக்க வேண்டும்.

பாரத நாட்டைப் பங்கிட்டமைக்காக பங்கிட்டவர்களை வெறுக்கலாம். அதில் ச்ம்பந்தப்பட்டவர்களை வெறுக்கலாம். பங்கிடப்பட்ட போதும் இந்தியாவை விட்டு போக மாட்டோம் என்று கூறி இன்றளவும் இந்தியாவிலேயே முஸ்லிம்கள் வாழ்கிறார்களே! பாகிஸ்தானுடன் சம்பந்தமின்றி உலகத்தின் பல பகுதிகளிலும் கோடானு கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்களே அவர்களையும் வெறுக்க வேண்டுமா?

யாரோ செய்த காரியத்துக்காக முஸ்லிம் சமுதாயத்தையே வெறுத்தேன் என்று கூறுபவன் கொஞ்சமாவது அறிவுடையவனாக இருக்க முடியுமா? இப்படிப்பட்ட அறை வேக்காடு தான் தக்க காரணம் எதுவும் இன்றி முஸ்லிம்களின் பால் வெறுப்பை வளர்த்துக் கெண்டு இந்தப் புத்தகத்தை எழுதியது என்பதில் இருந்தே இதன் தரத்தை உணரலாம் . இப்புத்தகத்தின் விமர்சனமே இக்கட்டுரை.

நீங்கள் கெட்டிக்காரன் என்று நிரூபிக்கப் பல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் முட்டாள் என்று நிரூபிக்க ஒன்றே போதும் என்றான் டான் ஹெரால்ட என்ற அறிஞன். அந்த ஒரே ஒரு காரியத்தைச் செய்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஜெபமனி.

விவாதங்கள் அறிவின் அடிப்படையில் ஆதாரங்களின் துணையோடு அமைய வேண்டுமே தவிர மூடத்தனத்தில் எழக் கூடாது. ஒரு விஷயத்தைக் காய்த்தல் உவத்தலின்றி ஆராய வேண்டும். அஃதின்றி தானே புத்திசாலி என்ற மமதையில் தனக்குத் தோன்றியவாறெல்லாம் பேசுவது முட்டாள் என்று தன்னைத் தானே நிருபித்துக் கொள்ளப் போதுமானதமாகும்

பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையை ஆராய்ந்து சொன்னதற்காக கலிலியோவைக் குற்றவாளியாக்கிச் சிறையிலிட்ட மதத்தின் நூல் தொகுப்புக்களை வேதம் என நம்புபவர் இந்நூலில் பல இடங்களில் முஸ்லிம்களை முட்டாள்கள் எனக் கூறுவது அண்ணாந்து கொண்டு எச்சில் உமிழ்வது போல் உள்ளது.

ஆகாத முகத்தின் மேல் ஆத்திரப்பட்டு கையில் இருக்கும் கண்ணடியை உடைத்த மாதிரி கலகலத்துப் போய்விட்ட கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை (உதாரணம் மேற்கத்திய நாடுகள்) காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் இயலாமல் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கிறார்கள்.

மேனாட்டுக் கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக ஊட்டப்பட்ட நம்பிக்கைகளை மறு பரிசீலனை செய்து கருத்துக்களை துணிவாக வெளியிடத் துவங்கி விட்டனர்.

உதாரணமாக 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எட்டாம் தேதியென்று வெளியிடப்பட்ட அவேக் என்ற இதழில் பைபிளில் ஐம்பாதாயிரம் பிழைகள் இருப்பதாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.

1984ம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட உஹண்ப்ஹ் ய்ங்ஜ்ள் இதழில் ள்ட்ர்ஸ்ந் ள்ன்ழ்ஸ்ங்ஹ் ர்ச் ஆய்ஞ்ப்ண்ஸ்ரீஹய் க்ஷண்ள்ட்ர்ல்ள் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தெய்வீகத் தன்மையும் மறு உயிர்த்தலையும் அவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களையும் பைபிளில் கூறப்பட்டவாறு நம்பவில்லை என்ற தகவல் தரப்பட்டது.

கிறிஸ்துவ மார்க்கம் புராணக் கதைகளின் நகல் என்றும் இயேசு நாதர் ஹோமரின் காப்பியத்தில் வரும் கடவுளர்கள் போன்று கற்பனைக் கடவுள் என்றும் மேல்நாட்டுக் கிறிஸ்துவ சமூகத்தினர் விமர்சிக்கின்றனர்.

பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான் என்பது போல பக்கத்துக்குப் பக்கம் இந்நூலில் அபத்தங்களும், அவதூறுகளுமே மிகைத்திருக்கின்றன.

குத்தினது சின்ன முள்ளாக இருந்தாலும் பிடுங்கித் தான் ஆக வேண்டும் என்பதற்காக இந்நூலை விமர்சிக்கின்றோம். முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் கடமை நமக்கு இருக்கிறது.