1) முன்னுரை
இஸ்லாம் மார்க்கத்தின் பெரும்பாலான சட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை என்றாலும் பெண்களுக்கு மட்டும் தனியான சட்டங்களும் உள்ளன.
அந்தச் சட்டங்களை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் அடிப்படையில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இந்நூல் வெளியிடப்படுகிறது.
- தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் பெண்களுக்கான சட்டங்கள்
- இல்லற வாழ்க்கை குறித்த பெண்களுக்கான சட்டங்கள்
- பெண்களின் ஆடைகள் அலங்காரங்கள் ஆபரணங்கள் குறித்த சட்டங்கள்
- பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்
ஆகிய நான்கு தலைப்புகளுக்குள் பெண்களுக்கான அனைத்துச் சட்டங்களையும் இந்நூலில் தொகுத்தளித்துள்ளோம்.