23) முடிவுரை
நூல்கள்:
கப்ஸா நிலைக்குமா?
ஜெபமணியின் அவதூறு நூலுக்கு நம்மால் இயன்றவரை நாகரீகமாகவும் விளக்கமாகவும் பதிலளித்துள்ளோம். அவரது நடைக்கும் தரத்துக்கும் நாமும் இறங்குவதற்கு நமது மார்க்கமான இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
சில அன்பர்கள் இப்பிரசுரத்தை இலவசமாக வெளியிடுவதற்குரிய செலவை ஏற்றுள்ளனர். அவர்கள் ஏற்ற போது இருந்ததை விட பன் மடங்கு காகிதத்தின் விலை ஏறிவிட்டதால் சுருக்கமான முறையிலே மறுப்பளித்துள்ளோம். ஜெபமணியின் எதிர் விளைவைப் பொறுத்து தேவைப்பட்டால் மிக விரிவாக மற்றொரு நூல் இன்ஷா அல்லாஹ் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வஆகிரு தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமின்.