22) மழை வேண்டும் போது
மழை வேண்டும் போது
இரு கைகளையும் உயர்த்தி
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! எங்களுக்கு மழையைத் தா.
ஆதாரம்:(புகாரி: 1013)
அல்லது
அல்லாஹும்ம அகிஸ்னா
அல்லாஹும்ம அகிஸ்னா
அல்லாஹும்ம அகிஸ்னா
எனக் கூற வேண்டும்.
பொருள்:
இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு!
ஆதாரம்:(புகாரி: 1014)
அளவுக்கு மேல் மழை பெய்தால்
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!
ஆதாரம்:(புகாரி: 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)
அல்லது
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B]லி வல் ஆஜாமி வள்ளிராபி(B] வல் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி
இதன் பொருள் :
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.
ஆதாரம்:(புகாரி: 1013, 1016)
அல்லது
அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B]லி வல் ஆகாமி வபு(B]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி
ஆதாரம்:(புகாரி: 1017)
மழை பொழியும் போது
அல்லாஹும்ம ஸய்யிப(B]ன் நாபி[F]அன்
இதன் பொருள் :
இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!
ஆதாரம்:(புகாரி: 1032)