Tamil Bayan Points

22) மழை வேண்டும் போது

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 28, 2022 by Trichy Farook

மழை வேண்டும் போது

இரு கைகளையும் உயர்த்தி

اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا

 

அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! எங்களுக்கு மழையைத் தா.

ஆதாரம்: புகாரி-1013

அல்லது

اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا

 

அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

எனக் கூற வேண்டும்.

பொருள்:

இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு!

ஆதாரம்: புகாரி-1014 

அளவுக்கு மேல் மழை பெய்தால்

اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா

என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!

ஆதாரம்: புகாரி-933 , 1015, 1020, 1021, 1033, 6093, 6342

அல்லது

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B]லி வல் ஆஜாமி வள்ளிராபி(B] வல் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி

இதன் பொருள் :

இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.

ஆதாரம்: புகாரி-1013 , 1016

அல்லது

اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B]லி வல் ஆகாமி வபு(B]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி

ஆதாரம்: புகாரி-1017

மழை பொழியும் போது

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிப(B]ன் நாபி[F]அன்

இதன் பொருள் :

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

ஆதாரம்: புகாரி-1032