பெண்கள் தலையை மறைப்பது கட்டயாமா? கடமையா?

கேள்வி-பதில்: பண்பாடுகள்

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

(அல்குர்ஆன்: 24:31)

இந்த வசனத்தில் முக்காடுகள் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் “கிமார்’ என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெறும் “குமுரிஹின்ன” என்பது “கிமார்’ என்பதன் பன்மையாகும். இது பெண்கள் அணியும் தலைத் துணி – அதாவது முக்காட்டைக் குறிக்கும். பெண்களின் முக்காடு மட்டுமின்றி ஆண்கள் தலையின் மீது போட்டுக் கொள்ளும் தலைத் துணியையும் இந்த வார்த்தை குறிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர்.

அறிவிப்பவர்: பிலால் (ரலி)

(முஸ்லிம்: 413)

இந்த ஹதீஸிலும் தலையை மறைக்கும் துணிக்கு “கிமார்’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமது முக்காடுகளை மார்பின் மீது போட்டுக் கொள்ளட்டும் என்று அல்லாஹ் கட்டளையாகக் கூறுவதால், இந்த வசனத்தில் கூறப்படும் தரப்பினர் தவிர மற்ற அந்நிய ஆண்கள் முன்னிலையில் பெண்கள் கண்டிப்பாகத் தலையை மறைக்க வேண்டும்.

? ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?