பாடம் 3-நான்கு குறியீடுகள்

மற்றவை: குர்ஆன் எளிதில் ஓதிட

அ) மெய்யெழுத்தின் குறியீடு

கீழ்க்கானும்  அரபு எழுத்துக்களை வாசிக்கும் போது அதில் போடப்பட்டுள்ள குறியீடுகளைக் கவனித்து அதற்கேற்ப வாசிக்க வேண்டும்.

உதாரணமாக
எழுத்தின் மேலே  ـْ அரை வட்டம் போன்ற குறியீடு இருந்தால் அந்த எழுத்தை தமிழ் மெய்யெழுத்து போல் வாசிக்க வேண்டும். இந்தக் குறியீடு ஸுக்கூன்  எனப்படும்.

நூன் மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று نْ இருந்தால் (ன்) என்று வாசிக்க வேண்டும்..

தா  மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று تْ இருந்தால் (த்) என்று வாசிக்க வேண்டும்.

                                                            

ஆ) அகரக் குறியீடு

எழுத்தின் மேலே சற்றே சாய்ந்தது போன்ற குறியீடு அகரக் குறியீடு எனப்படும். அரபு மொழியில் இது  ஃபதஹ் என்றும் உருது மொழியில் ஸபர் என்றும் கூறப்படும். இந்தக் குறியீடு இருக்கும் எழுத்துக்களை அகரமாக உச்சரிக்க வேண்டும்.

அதாவது ن நூன் மீது ـَ இக்குறியீடு அமைந்து نَ என்று இருந்தால் அதை  என்று வாசிக்க வேண்டும்.

م மீம் மீது  ـَ இக்குறியீடு அமைந்து مَ என்று இருந்தால் அதை  என்று வாசிக்க வேண்டும்.
இ) இகரக் குறியீடு

எழுத்தின் கீழே சாய்ந்தது  ـِ  போன்ற குறியீடு இது இகரக் குறியீடு எனப்படும்.
அரபு மொழியில் இது கஸர் என்றும் உருது மொழியில் ஸேர் என்றும் கூறப்படும். இந்தக் குறியீடு இருக்கும் எழுத்துக்களை இகரமாக உச்சரிக்க வேண்டும்.
அதாவது ن  நூன் மீது இக்குறியீடு அமைந்து نِ என்று இருந்தால் அதை னி வாசிக்க வேண்டும்.

م  மீம் மீது இக்குறியீடு அமைந்து مِ என்று இருந்தால் அதை மி என்று வாசிக்க வேண்டும்.

ஈ) உகரக் குறியீடு
மேலே கொம்பு போல் வளைந்த ُـُ குறியீடு உகரக்குறியீடு எனப்படும். அரபு மொழியில் இது ளம்மு என்றும் உருது மொழியில் பேஷ்என்றும் கூறப்படும்.இந்தக் குறியீடு இருக்கும் எழுத்துக்களை உகரமாகஉச்சரிக்க வேண்டும்.
அதாவதுنநூன்மீது இக்குறியீடு அமைந்து نُ என்று இருந்தால் அதைனுஎன்று உச்சரிக்க வேண்டும்.
م  மீம் மீது இக்குறியீடு அமைந்து مُ என்று இருந்தால் அதைமுஎன்று வாசிக்க வேண்டும்.