பாடம் 3 இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்
கேள்வி 1 : நமது நல்லறங்கள் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனைகள் யாவை?
பதில் : அல்லாஹ்விடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மூன்று நிபந்தனைகள் இருக்கின்றன.
முதலாவது : அல்லாஹ்வை நம்புவதும், அவன் ஒருவனை மட்டுமே நம்பி அவனை ஏகத்துவப்படுத்துவதாகும்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன.
என்று அல்லாஹ் குறிப்பிடகிறான்.
நான் அல்லாஹ்வை நம்பினேன் என்று கூறிய பின்னர் (அந்த நம்பிக்கையில்) நிலைத்து நிற்பீராக என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரண்டாவது : பிறர் மெச்ச வேண்டும்: பார்க்க வேண்டும் என்பதற்காக இல்லாமல் அல்லாஹ் ஒருவனுக்காகவே எந்த நல்லறத்தையும் செய்யும் உள்ளத் தூய்மை
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும்,தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
என்று இறைவன் இதைத் தான் குறிப்பிடுகிறான்.
மூன்றாவது : நமது நல்லறங்கள் யாவும் அல்லாஹ்வின் திருத்தூதருடைய வழிகாட்டுதலுக்கு ஏற்ப அமைவது.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
என்று அல்லாஹ் நமக்கு இதைத் தான் கட்டளையிடுகின்றான்.
நமது உத்தரவின்றி எவன் ஒரு செயலைச் செய்கின்றானோ அது தள்ளப்படக்கூடியதே. (அதாவது அது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.