பாடம் 10,11
பாடம் 10 மறைவழியில், நபிவழியில் தீர்ப்பளித்தல்
கேள்வி : முஸ்லிம்கள் தமக்கிடையே எழுகின்ற பிரச்சினைகளில் எதன்படி தீர்ப்புக் கூற வேண்டும்?
பதில் : இறைமறை வழியிலும் நம்மபத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகள் வழியிலும் தான் முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காண வேண்டும் ஏனெனில்
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக!
என்று அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றான்.
இறைவா நீயே மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவன். உனது அடியார்களுக்கிடையில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட வியங்களில் நீயே தீர்ப்புச் செய்பவனாகவும் இருக்கிறாய்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் வலியுறுத்துகிறார்கள்.
பாடம் 11 ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகவும், நேசர்களாகவும் திகழ்தல்
கேள்வி 1 : ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளுதல், உதவிக் கொள்ளுதல் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.
என்று இறைவன் கூறுகின்றான்.
ஏகத்துவ நம்பிக்கையாளர்கள் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டும் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடனும் உறவுடனும் ஒத்துழைப்புடனும் இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார்கள்.
(புகாரி: 481, 2446, 6027), கேள்வி 2 : வலியுல்லாஹ் (அல்லாஹ்வின் நேசர்) என்பவர் யார்?
பதில் : அல்லாஹ்வை மட்டும் நம்பி அவன் மீது அச்சம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவனது நேசர் தான்.
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 10:62) ➚,63
என்று அல்லாஹ் கூறுகின்றான்.