பாங்கு இகாமத் இடையே துஆ
முக்கிய குறிப்புகள்:
மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَبِي إِيَاسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ رواه ابوداود
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
(அபூதாவூத்: 437) ➚,(திர்மிதீ: 196) ➚,(அஹ்மத்: 11755) ➚, முஸ்னத் அபீயஃலா-4147, பைஹகீ-2013, தப்ரானீ-அவ்ஸத்-4053, அத்துஆ-தப்ரானீ-483, அத்துஆ -பைஹகீ-60, முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-1909
இச்செய்தி இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் ஸைத் அல்அம்மீ என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.